Published:Updated:

OTT கார்னர்

Ariyippu - Movie
பிரீமியம் ஸ்டோரி
News
Ariyippu - Movie

பாலிவுட்டின் சென்சேஷன் விக்கி கௌஷல், கியாரா அத்வானி, பூமி பட்னேகர் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வந்திருக்கும் கொஞ்சம் காமெடியான த்ரில்லர் படம்.

OTT கார்னர்
OTT கார்னர்

1899 - Web Series

புகழ்பெற்ற ‘டார்க்' சீரிஸைக் கொடுத்த கூட்டணி, நெட்ப்ளிக்ஸுக்காக உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு இது. 1899-ம் ஆண்டு லண்டனிலிருந்து நியூயார்க் கிளம்புகிறது பயணிகள் கப்பல் ஒன்று. பிரிவினைகளுடன் பயணிக்கும் கதைமாந்தர்கள் ஒவ்வொருவரின் பின்கதைகளும் ஏதேனும் ஒரு வகையில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அப்போது அதே நிறுவனத்தைச் சேர்ந்த காணாமல் போன ஒரு கப்பல், பயணிகளே இல்லாமல் இவர்களின் பாதையில் மீண்டும் வந்து சேர்கிறது. அதன்பிறகு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளே இந்த எட்டு எபிசோடுகள் கொண்ட சீரிஸின் கதை. பிரதான கதைக்கு வரவே நேரம் எடுக்கும் திரைக்கதை என அசால்ட்டாக நினைக்கும்போதே அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் இதுவரை சொன்னதே பிரதான கதைதான் என்று நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் முந்தைய எபிசோடுகளை ரீவைண்டு செய்து பார்க்க வைக்கும் அளவுக்கு மிரட்டுகிறது கதை அமைப்பு. நோட்ஸ் எடுக்க வைக்கும் அளவுக்கான டீட்டெய்லிங் மட்டுமே திக்குமுக்காட வைக்கிறது.

OTT கார்னர்
OTT கார்னர்

Faadu - Web Series

நகரத்திலிருந்து ஒ(டு)துக்கப்பட்ட குடிசைப்பகுதியில் வசிக்கும் ஓர் இளைஞன், தனது குடும்பத்தின் வறுமைச் சூழலை மாற்றத் துடிப்பதும், அதற்காக அவன் எடுக்கும் பலவிதமான முயற்சிகளும்தான் ‘Faadu.’ அஸ்வினி திவாரி இயக்கத்தில் சோனி லைவ் ஓ.டி.டி-யில் வெளியாகி யிருக்கிறது 11 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ். ‘ஏன் லேட்டா வந்த?' என்று கேட்கும் கல்லூரிப் பேராசிரியரிடம் நாயகன் பவைல் குலாட்டி விவரிக்கும் பதிலிலிருந்தே அவனது வாழ்க்கைச்சூழல் தெளிவாகப் புரிந்துவிடுகிறது. நாயகி சயாமி கவுர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரின் காதல் எபிசோடு அவ்வளவு எதார்த்தமாக இல்லை. குடிசையில் இருக்கும் ஒருவன் அவ்வளவு பெரிய அப்பார்ட்மென்டில் வீடு வாங்க நினைப்பது, தனது குடும்பத்தினரை இந்த வாழ்க்கையிலிருந்து மாற்றத் துடிப்பது, அதற்காக அவர் பேசும் வசனங்களில் எல்லாம் செம எனர்ஜி. ஆரம்பத்தில், தன்னம்பிக்கையூட்டும் திரைக்கதை ஒரு கட்டத்தில் முரணான மெசேஜைச் சொல்லி அரசியல் பிழையை உண்டாக்குவது மட்டும் சறுக்கல்.

OTT கார்னர்
OTT கார்னர்

Ariyippu - Movie

நல்ல படங்களில் சமீபமாகக் கவனம் குவிக்கும் குஞ்சாக்கோ போபன் தானே தயாரித்து நடித்திருக்கும் படம் ‘அறியிப்பு.' திரைப்பட விழாக்களில் திரையிட்ட சூட்டோடு நெட்ப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. மகேஷ் நாராயணன் எழுதி இயக்கியிருக்கிறார். கேரளாவிலிருந்து உ.பி-யின் நொய்டாவிற்குப் புலம்பெயர்ந்த தம்பதியரான குஞ்சாக்கோவும் திவ்யாவும் அங்கிருக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார்கள். மிக எந்திரத்தனமாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே கனவு, விசா கிடைத்ததும் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதுதான். அந்தத் தம்பதியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். ஒரு ஸ்கேண்டல் வீடியோவின் பாதிப்பு என்ன என்பதை உளவியல் பார்வையில் நுணுக்கமாக அணுகியுள்ளது படம். பெண்கள்மீது சமூகம் வைத்திருக்கும் ஒரு சார்பான மதிப்பீட்டைக் கேள்வி கேட்கிறது கதை. யதார்த்தமான மேக்கிங், குஞ்சாக்கோ போபன் - திவ்யா பிரபாவின் தேர்ந்த நடிப்பு என கவனம் ஈர்க்கிறது இந்தப் படைப்பு!

OTT கார்னர்
OTT கார்னர்

Govinda Naam Mera - Movie

பாலிவுட்டின் சென்சேஷன் விக்கி கௌஷல், கியாரா அத்வானி, பூமி பட்னேகர் நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வந்திருக்கும் கொஞ்சம் காமெடியான த்ரில்லர் படம். ‘ஹீரோ விக்கிக்கு பூமியோடு திருமணமாகியும் கியாரா காதலியாக இருப்பார். பூமிக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் இருப்பது விக்கிக்கும் தெரியும்' - இப்படி எக்குத்தப்பான ஓப்பனிங்கோடு காமெடியாகப் போய்க் கொண்டிருக்கும் கதையில் திடீரென ஒரு ட்விஸ்ட். செய்யாத கொலையை விக்கியும் கியாராவும் மறைக்க முயல... நடுவில் தன் பூர்வீக வீட்டை விற்கும் முயற்சியிலும் சிக்கல் உருவாக... எப்படி எல்லாவற்றி்லிருந்தும் மீள்கிறார் விக்கி என்பதே கதை. முழுப்படமும் நம்பமுடியாத காட்சிகளாகவே எழுதப்பட்டிருப்பதால், ஒருகட்டத்தில் டிராமா பார்க்கும் உணர்வே மிஞ்சுகிறது. ஆனாலும், கொலை, போதை மருந்து கடத்தல், இன்சூரன்ஸ் சீட்டிங், நாடகக் காதல் எனக் காட்சிகளை அடுக்கி, க்ளாமர் கோட்டிங் கொடுத்து க்ளைமாக்ஸில் எல்லா முடிச்சுகளையும் ஹீரோ வாயிலாக அவிழ்க்கும் இடம் அதிரிபுதிரி. தூக்கம் வராமல் புரளும் ஆட்களுக்கு ஏற்ற காமெடி த்ரில்லர்!