Published:Updated:

ரஜினி சொன்ன கதை... இளையராஜாவின் எரிச்சல்... எஸ்.பி.பி-க்கான காத்திருப்பு! - பார்த்திபன் தொடர் - 12

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 12.

ரஜினி சொன்ன கதை... இளையராஜாவின் எரிச்சல்... எஸ்.பி.பி-க்கான காத்திருப்பு! - பார்த்திபன் தொடர் - 12

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 12.

Published:Updated:
பார்த்திபன்

''Parthieban Sir, I like your acting and most of your movies. Your role in 'Anthapuram' movie was the best of all. Actually my question is about one of the actresses you were paired with not once but twice. You were paired with Rachana Banerjee a Bengali actress, she is the most cute and beautiful actress of her time. She did very few movies in Tamil and in that few was two movies with you, Tata Birla and Vaimayey vellum. Can you tell us about acting with her and share any funny incidents during shooting as she doesn't know Tamil. Thanks for your time.''

- Simpson, Mumbai

பார்த்திபன்
பார்த்திபன்

'' 'அந்தப்புரம்' படத்தை நினைவுபடுத்தியமைக்கு நன்றி சிம்சன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஆனா, 10 ஆண்டுகளுக்குப்பிறகும் எப்படி ரச்சனா பானர்ஜியை மறக்காம இருக்கீங்க? ஆச்சர்யம்தான். அவங்களோட ஷூட்டிங் இடைவெளிகளில் நடந்தவையெல்லாமே ஃபன்தான், காமெடிகள்தான். எனக்கு ஆங்கிலம் சரளமாப் பேச வராது. அவங்களுக்கு ஒருவார்த்தைகூடத் தமிழில் தெரியாது. அதனால பேசுனதெல்லாமே காமெடிதான். பட், உங்க ரசனை எனக்குப் பிடிச்சிருக்கு. கல்யாணமானவரா இருந்தா உங்களை உங்க மனைவிகிட்ட மாட்டிவிட்டுடணும். மும்பைல இருந்துகிட்டு ரச்சனாவை மறக்கமுடியாம அப்படி என்னதான் உங்களுக்குப் பிரச்னை? அது ரச்சனாவா இல்லை பிரச்சனாவா!''

''ரஜினி சார் உங்களுடன் சேர்ந்து பண்ணலாம்னு சொன்ன கதையை கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்... கேட்க ரொம்ப ஆர்வமாக இருக்கு?''

சண்முகப்பிரியன், மகுடஞ்சாவடி,சேலம்

ரஜினி
ரஜினி

''இது ரொம்ப ரொம்ப போங்கா இருக்கேங்க. கிட்டத்தட்ட 200 கோடி, 250 கோடிக்கு பிசினஸ் ஆகுற ஒரு கதையை ஜஸ்ட் லைக் தட் ஒரு கேள்வி பதில்ல சொல்லுங்கன்னா எப்படி?! மறுபடியும் ரஜினி சாரும், நானும் சேர்ந்து அப்படி ஒரு படம் பண்ணமுடியுமான்னு தெரியல. ரஜினி சாரோட படம் பண்ணணும்னு ஒரு நேரத்துல பயங்கர ஆர்வமா இருந்தது. ஆனா, இப்ப தெரியல. அப்படி ஒரு வாய்ப்பு வந்து பண்ணுனோம்னா ரொம்ப சிறப்பான படமா அது இருக்கும். கதையைச் சொல்லணும்னா முதல்ல நான் அவர்கிட்ட அனுமதி கேட்கணும். ஏன்னா, அது அவரோட கதை. பொறுத்திருங்கள். அதை ஒரு நல்ல படமாவே பார்க்கலாம்.''

"பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆனந்த விகடனில் நான் உங்கள் நேர்காணலைப் படித்தேன். அதில் ஒரு கேள்வி 'ஒரு குட்டிக் கவிதை சொல்லுங்கள்?'

அதற்கான உங்கள் பதில்: 'ஒவ்வொரு குட்டியும் ஒரு கவிதைதானே!'

இதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் பார்த்திபனை ஈடுசெய்ய முடியாத பொழுதுபோக்கு அம்சமாக மாற்றும் இந்தச் சிறிய நகைச்சுவைகள்தான், படைப்பாளரான பார்த்திபனின் உச்சத்தைத் தடுக்கின்றனவா?! 'ஒத்த செருப்பு' படத்தில் உஷா விசிறியைப் பார்க்கும் காட்சி அருமையாக இருந்தது, ஆனால், 'உஷா உஷாரா இருந்திருக்கணும்'ன்ற உரையாடல் கட்டாயப்படுத்தப்பட்டதா தோன்றியது?!''

- ராபின்சன், சென்னை

ஒத்த செருப்பு
ஒத்த செருப்பு

''மிஸ்டர் ராபின்சன், பாயின்ட் ஆஃப் வியூன்னு ஒண்ணு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒருவிதமான பார்வை இருக்கும். அவங்க எப்படிப்பார்க்குறாங்களோ அது அவங்களுக்கு அப்படித்தான் தெரியும். முதல்ல குட்டிக்கவிதையில இருந்து ஆரம்பிப்போம். அப்புறம் நீங்க சொன்ன கடைசி விஷயத்துக்கு வருவோம். ஏன்னா, நீங்க சொன்ன அந்த விஷயத்தைக் கொஞ்சம் உஷாராத்தான் டீல் பண்ணணும்னு நினைக்கிறேன்.

முதல் விஷயம் குட்டிக்கவிதை. இளையராஜா அவர்களோட ஒரு புரோகிராம்காக நான் அவரோட யுகே-வுக்குப் போயிருக்கும்போது, ஹோட்டல்ல பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்லாம் வெயிட் பண்ணிட்டிருந்தாங்க. நான் வேஷ்டி சட்டைல வரேன். ராஜா சார் ஃபுல் ஸூட்ல வர்றார். அப்ப அங்க இருந்த ஒரு நிருபர் 'என்னங்க வேஷ்டி கட்டிட்டு வரீங்க'ன்னு கேட்டார். உடனே நான் 'கட்டிட்டு வரலைன்னா கழண்டு உழுந்திடுமேங்க'ன்னு சொன்னேன். அடுத்து அவர், 'இல்லைங்க... இங்க வந்து வேஷ்டி கட்டியிருக்கீங்களே'ன்னு கேட்டார். 'இல்லைங்க நான் ரூம்லயே கட்டிட்டேன்ங்க, இங்க வந்து கட்டலை'ன்னு சொல்லிட்டிருந்தேன். இதையெல்லாம் ராஜா சார் அப்படியே குறுகுறுன்னு பார்த்துட்டே இருந்தார். அப்புறம் லிஃப்ட்டுக்குள்ள போனோம். அதே ரிப்போர்ட்டர் டக்குன்னு மைக்கை எடுத்துட்டு ஓடி வந்து 'ஒரு குட்டிக் கவிதை சொல்லுங்களேன்'னு கேட்டார். நான் உடனே 'ஒவ்வொரு குட்டியும் ஒரு கவிதைதானே'ன்னு சொன்னேன். ராஜா சார் பொட்டுன்னு அடிச்சார். ''யோவ் என்னய்யா... வேற வேலையே இல்லையா உனக்கு. எப்பப் பார்த்தாலும் ஒரு வார்த்தையிலேருந்து இருந்து ஏதாவது ஒண்ணு எடுத்துச் சொல்லிக்கிட்டு... நிறுத்துய்யா'ன்னு சொன்னார். அவர் அதை ரசிக்கிறார். ஆனா, பிடிக்கல. உஷான்னா உஷாரா இருந்திருக்கணும்கிறதை நாம ரசிக்கிறோம். ஆனா, அதை அப்புறம் ஆராய்ஞ்சுபார்த்தா அது தேவையில்லையோன்னு தோணும். சில பேர் உஷா ஃபேனோட புத்திசாலித்தனத்தை ரசிப்பாங்க. ஆனா, அது கொஞ்சம் சுடப்பட்டது.

நான் எங்கேயும் கதையெல்லாம் சுட்டதில்லை. ஆனா, அந்த ஒரு காட்சி மட்டும் 'மன்மதலீலை' படத்துல கேபி சார் யூஸ் பண்ணியிருப்பார். கமல் சார் ஒரு வீட்டுக்குப்போய் ஒரு பொண்ணைப் பார்த்து 'பேரு என்ன'ன்னு கேட்பார். அப்ப கேமரா அப்படியே டில்ட் ஆகி ஃபேனைக் காட்டும். அதுல உஷான்னு இருக்கும். இது என்னோட ஆழ் மனசுல அப்படியே பதிஞ்சிருந்தது. 'ஒத்தசெருப்பு' பண்ணும்போது அங்க இருக்கிற விஷயங்களை வெச்சுதான் கதை சொல்லமுடியும்கிறதால, கேரக்டருக்கு என்ன பேர் வைக்கலாம்னு யோசிக்கும்போது அங்க உஷா ஃபேன் இருந்தா, அந்தப்பொண்ணோட பேரு உஷாவா இருந்தா எப்படியிருக்கும்னு யோசிச்சேன். அப்படித்தான் உஷாவுக்குள்ள என்னவெல்லாம் வார்த்தைகள் பேசலாம்னு வரும்போது உஷாரா இருக்கணும்லன்னு தோணுச்சு.

நான் ஒரு கலவையாவே இருந்திருக்கேன். இவ்வளவு வருஷங்களில் நிறையவே மாறியிருக்கேன். இதெல்லாம் சிறுக சிறுக எனக்குள்ள ஏற்பட்ட மாற்றம்தான். இப்படிப்பட்ட படங்கள்தான் கொடுக்கணும்ங்கிற லட்சியம்லாம் இல்லாமல் என்னைக் கடந்துவர விஷயங்களை நான் பண்ணுறேன். காமெடியும் பண்ணுறேன். 'ஒத்த செருப்பு' மாதிரியான படங்களும் பண்ணுறேன். அதனால இந்த மாதிரியான சிறிய குறைகளை மன்னிச்சிடுங்க. இனிமேல் இப்படி நடக்காம நான் பார்த்துக்குறேன்.''

''எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசையில் நீங்கள் நடித்த 'தையல்காரன்' பட அனுபவம் சொல்லமுடியுமா?''

வெங்கடகிருஷ்ணன், போளூர்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

''ஸ்பெஷல் ப்ரேயர்ஸ் பாலு சார். அவருக்காக இந்த நேரத்துல இந்த உலகமே பிரார்த்தனை பண்ணிட்டிருக்கு. எனக்குமே சில நாள்களா ரொம்ப டிஸ்டர்பன்ஸ். கொரோனா என்ன மாதிரியான பாதிப்புகளை ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்துது, அவங்க குடும்பங்களை எப்படி பாதிக்குதுன்னு, பார்க்கப்பார்க்க, படிக்கப்படிக்க ஒரு டிப்ரஷனே வந்துடுது. 40,000 பாடல்கள், அந்தப் பாடல்கள் மூலமா அவர் ஏற்படுத்தியிருக்கிற விஷயங்கள்னு பார்க்கும்போது ரொம்ப பிரமிப்பா இருக்கு. எஸ்பிபி சார் ரொம்ப பண்பான மனிதர். யார் மனசையும் நோகடிக்க மாட்டார். என்னோட நிறைய படங்களில் பாடல்கள் பாலு சாருக்காக வெயிட் பண்ணியிருக்கு. ராஜா சார்கிட்ட பாலு சார் பாடணும்னு சொல்லுவேன். அப்ப பாலு சார் கிடைக்கமாட்டார்.

அப்புறம் நானே ராஜா சார்கிட்டபோய் இந்தப் பாட்டை அடுத்தவாரம் பண்ணிக்கலாம் சார்னு சொல்லுவேன். நிறைய நாள் காத்திருந்திருக்கோம். இப்பவும் காத்திருக்கோம். மறுபடியும் அவர் முழுமையா குணமாகி வரணும். அவர் நன்றி சொல்ற விதம், பாராட்டுற விதம்லாம் தூய்மையான, கறந்த பால் போன்றது. இவ்வளவு புகழுக்கு அப்புறமும் அவ்வளவு இயல்பா, பணிவா இருக்கமுடியறதுன்றது அவருக்குப் பெரிய வரப்பிரசாதம். அவர் கூடிய சீக்கிரம் நலம் பெற்று வரணும். சில பேர் சினிமா பிரபலத்துக்கு மட்டும் பிரார்த்தனை பண்ணுறீங்களேன்னு சொல்றாங்க. அப்படியில்லை. எங்களுக்கு நேரடியாத்தெரியவர நிறைய பேருக்கு உதவிகள் பண்ணுறோம். இந்தச் சமூக இடைவெளின்றது, உருவத்துக்குள்ளான இடைவெளிதானே தவிர, உள்ளங்களுக்கான இடைவெளி இல்லை. உள்ளமாப் பார்த்தா ரொம்ப நெருங்கி ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி பண்ணி, தைரியம் கொடுத்துத்தான் இதுல இருந்து வெளியே வரணும். எஸ்.பி.பி சார் மறுபடியும் மீண்டு வரணும். கோடிக்கணக்கான ரசிகர்களோடு என்னுடைய பிரார்த்தனைகளும்.''

'' 'புள்ளக்குட்டிக்காரன்' படத்தில் ஒரு வசனம்..."ஏண்டா...சின்ன வயசிலேயே திருடுறீங்களே... தப்பில்லையா?', 'சின்ன வயசுலயே பசிக்குதே அது தப்பில்லையா?'ன்னு அதுக்கு பதில் வரும். ஒரு சமூகத்தின் நிலையை எதிரொலிக்கும் ரொம்ப அருமையான வசனம் இது. என்னை ரொம்ப யோசிக்க வைத்த வசனம். அந்த வசனத்தில் ஒரு புரட்சி நெருப்பே இருந்தது. உங்கள் மேல் எனக்கு நல்ல மதிப்பு வர இந்த வசனமே காரணம். நீங்கள் கவிதை எழுதுவதில் வல்லவர். நல்ல கவிதைகளைப் படமாக்க முடியாதா பார்த்திபன் சார்?''

கலை சேகரன், தஞ்சாவூர்(ஆம்பல்)

பார்த்திபன்
பார்த்திபன்

''நான் சமூக அக்கறையோடு ரொம்ப சிரத்தை எடுத்துப் பண்ணின படம் 'புள்ளக்குட்டிக்காரன்'. ஆனா, என்னவோ காரணம் அது சரியா அங்கீகரிக்கப்படாம, மதிக்கப்படாம போகும்போது மனசு ரொம்ப மறத்துப்போகுது. சில படங்கள் காலம் கடந்து, காலம் கடந்து பாராட்டப்படுது. 'ஹவுஸ்ஃபுல்' படத்தை இப்ப பாராட்டுறதும், 'புள்ளக்குட்டிக்காரன்' படத்தை இப்ப பாராட்டுறதும்னு பண்ணுறாங்க. 'உள்ளே வெளியே'ல எனக்குக் கிடைச்ச கெட்ட பேரு, 'சரிகமபதநி'ல அதை நான் சரி பண்ணப் பார்த்ததுன்னு நிறைய இருக்கு. ஆனா, 'புள்ளக்குட்டிக்காரன்'ல ஒரு டபுள் மீனிங் டயலாக்கூட இருக்காது. ரொம்ப அழகான கவிதை மாதிரியான படம்தான். ஆனா, சரியாப் போகல.

கவிதைகளைப் படமாக்குறதுன்றதை 'இவன்' படத்துல முயற்சி பண்ணியிருக்கேன். செளந்தர்யா அவர்கள் நடிச்சிருந்த தீட்சண்யான்ற ஒரு கேரக்டர் ரொம்ப அழகான கவிதைதான். இப்பகூட பார்த்தா நான் ரொம்ப ஆச்சர்யப்படுவேன். அதுல ஒரு கனவுக்காட்சி வரும். நான் கவிதை எழுதிக் கசக்கிப்போடுற ஒரு பேப்பரை, அந்தப்பொண்ணு மல்லிப்பூ மாதிரி எடுத்து தலையில வெச்சிக்கும். பேனாவை உதறுவேன். அதுல இருக்க மையை எடுத்து அவங்க கண் மையா வெச்சிப்பாங்க. ரொம்பக் கவிதையான படம், படைப்பு. சினிமாவுக்கான லட்சணங்களைத்தாண்டி நிறைய விஷயங்களை நான் பண்ணியிருக்கேன். ஆனா, எல்லாத்துக்கும் பணம் தேவை. தயாரிப்பாளர்கள் தேவை. நீங்க சொல்ற மாதிரி கவிதைகளை வெச்சு இன்னொரு படம் பண்ணமுடியுமான்னு நிச்சயம் முயற்சி பண்ணுறேன்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.