Published:Updated:

`நெப்போலியனுக்கு பங்காளி ரோல் குடுங்க!' - பாரதிராஜாவால் திரையுலகிற்கு வந்த `செவ்வாழை' ராசு!

செவ்வாழை ராசு

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த `செவ்வாழை' ராசு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Published:Updated:

`நெப்போலியனுக்கு பங்காளி ரோல் குடுங்க!' - பாரதிராஜாவால் திரையுலகிற்கு வந்த `செவ்வாழை' ராசு!

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த `செவ்வாழை' ராசு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செவ்வாழை ராசு
தேனியைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் செவ்வாழை ராசு (70). தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார்.

அப்போது இயக்குநர் பாரதிராஜா `கிழக்கு சீமையிலே' படத்துக்கு நடிகர் தேவை எனப் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதில் தேனி மக்களின் பாரம்பரிய வரலாறு தெரிந்த பெரிய மனுசன் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

ராசு
ராசு

இதைப் பார்த்துவிட்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த பாரதிராஜாவை சந்தித்துள்ளார் `செவ்வாழை' ராசு. `கிழக்கு சீமையிலே' படத்தில், `நெப்போலியனுக்கு பங்காளியாக நடிக்கும் பாத்திரத்தை கொடுங்கள்!' என முதல் வாய்ப்பை கொடுத்துள்ளார் பாரதிராஜா. கருத்தம்மா, ஈரநிலம் என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த `பருத்திவீரன்' படத்தில் பிணம் திண்ணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். இதையடுத்து மைனா, கந்தசாமி என பல ஹிட் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் தேனி பெரியகுளம் ரோட்டில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் சிகிச்சை பெற்ற வந்தவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

செவ்வாழை ராசு
செவ்வாழை ராசு

அவரது உடல் தேனிக்கு கொண்டு வரப்பட்டு அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, நாளை காலை அவரது பூர்வீக ஊரான வருசநாடு அருகே கோரையூத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.