சினிமா
Published:Updated:

ரொம்பப் பிடிக்கும்!

கிரண்மை
பிரீமியம் ஸ்டோரி
News
கிரண்மை

- +2 படிக்கும்போது லோக்கல் சேனலில் ஆங்கராக வேலை பார்த்தேன்.

இந்தப் பிரபலங்களிடம் அவர்களுடைய ஃபேவரைட் பக்கங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள சில கேள்விகளை முன்வைத்தோம்.

ரொம்பப் பிடிக்கும்!

கிரண்மை, நடிகை

பிடித்த குடும்பத் திரைப்படம் - கடைக்குட்டி சிங்கம்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் - ‘புதுப்பேட்டை’ படத்தில் வருகிற, ‘ஒருநாளில் வாழ்க்கை இங்கே’ பாட்டு ரொம்பப் பிடிக்கும்.

ஃபேவரைட் ஷூட்டிங் ஸ்பாட் - வளசரவாக்கம் அபிநயா ஷூட்டிங் ஹவுஸ்.

நீங்கள் பார்த்த பார்ட் டைம் வேலை - அப்படியெதுவும் பண்ணினதில்லை. முழு நேரமும் சினிமாதான்!

ஃபேவரைட் ஸ்ட்ரீட் ஃபுட் - ஆல் டைம் ஃபேவரைட் பிரியாணிதாங்க!

ரொம்பப் பிடிக்கும்!

ஜானகி தேவி, நடிகை

பிடித்த குடும்பத் திரைப்படம் - கடைக்குட்டி சிங்கம்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் - ‘விருமன்’ படத்தில் வருகிற ‘மதுரை வீரன் அழகுல’ பாட்டு.

ஃபேவரைட் ஷூட்டிங் ஸ்பாட் - பொதுவா எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டுமே பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்லணும்னா இப்ப ‘கயல்’ சீரியல் ஷூட்டில்தான் அதிக நேரம் இருக்கேன். அதனால, அந்த இடம் ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் பார்த்த பார்ட் டைம் வேலை - ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு நர்சிங் ஹோமில் வேலை பார்த்தேன்.

ஃபேவரைட் ஸ்ட்ரீட் ஃபுட் - பானிபூரி, காரப்பொரி.

ரொம்பப் பிடிக்கும்!

சுல்தான் ஷா, நடிகர்

பிடித்த குடும்பத் திரைப்படம் - திருச்சிற்றம்பலம் (நான் நடிச்சதால இல்லைங்க! )

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் - எனக்கு அனிருத், தனுஷ் காம்பினேஷன் ரொம்பப் பிடிக்கும். அதனால இப்ப அடிக்கடி ‘தேன்மொழி’ பாட்டு பாடுறேன்.

ஃபேவரைட் ஷூட்டிங் ஸ்பாட் - தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ்னு எனக்கு ஃபேவரைட்டான நடிகர்களுடன் நான் நடிச்ச திருச்சிற்றம்பலம் ஷூட்டிங் ஸ்பாட்தான்!

நீங்கள் பார்த்த பார்ட் டைம் வேலை - +2 படிக்கும்போது லோக்கல் சேனலில் ஆங்கராக வேலை பார்த்தேன்.

ஃபேவரைட் ஸ்ட்ரீட் ஃபுட் - பானிபூரி.