சினிமா
தொடர்கள்
Published:Updated:

“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”

 ‘கிக்' படத்தில்..
பிரீமியம் ஸ்டோரி
News
‘கிக்' படத்தில்..

கன்னடத்தில் ரொம்ப மரியாதையுடன் கவனிக்கப்படுகிற அர்ஜுன் ஜன்யாதான் இசையமைச்சிருக்கார். ஐந்து பாடல்களுக்காக அவரின் இசை முற்றிலும் புதுசு

``எனக்கு காமெடிதான் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்துப் படங்களிலும் காதலும் காமெடியும் மட்டும்தான் இருக்கும். சதா வாழ்க்கை நமக்குப் பல கஷ்டங்களைக் கொடுத்துட்டே இருக்கு. நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடிதான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு இணையாக ஒருத்தரைக் கண்டுபிடிக்கவே முடியலை. நமக்கு இருக்கிற கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எதுவும் எனக்குப் பிடிக்கலை. எனக்கு எல்லாத் துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்குற படம் பிடிக்கும். அப்படி நினைத்து வந்ததுதான் இந்த ‘கிக்' படம்.

வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நகைச்சுவையோடு பார்க்க ஆரம்பிச்சிட்டால் நாம் எல்லோரும் தப்பிச்சிடலாம்னு தோணும். கொஞ்சம் மக்கள் வாழ்க்கையை அதன் போக்கிலே ரசிச்சுக்கிட்டுப் பார்த்தால் உலகமே நல்லாருக்கும். அப்படி ஒரு படம் தான் கிக்...'' ஆத்மார்த்தமாகப் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராஜ். கன்னடத்தில் ஹிட்டான ‘லவ் குரு' போன்ற மாஸ் படங்களை இயக்கியவர், முதல் தடவையாகத் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”
“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”

`` ‘கிக்'குல என்ன விதமான காமெடி இருக்கு?’’

‘‘டாம்&ஜெர்ரி மாதிரிதான் ஹீரோவும் ஹீரோயினும். விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம், எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் போய் வெற்றியை அடையத் துடிக்கிறவர். ஹீரோயின் நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேறத் துடிக்கிறவர். இரண்டு பேரும் எலியும் பூனையுமா மோதிக்கொள்வதுதான் கதை. சந்தானத்தை எதற்காக விரும்பிப் பார்க்க வருவார்களோ அதற்கான எல்லா வேலைகளையும் செய்து வைத்திருக்கோம். 100 பர்சன்ட் ஹீரோ அவர்தான்னு சொல்ற மாதிரி உங்களுக்கு அனுபவம் காத்திருக்கு.

கன்னடத்தில் என் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், அதன் வெற்றியைப் பார்த்துட்டு என்னைத் தமிழில் படம் பண்ணக் கூப்பிடுவாங்க. நான்தான் அறிமுகமாகிற முதல் படம் பெருசா, மாஸா இருக்கணும்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்தப் படத்தைக் கன்னடத்தில் செய்து ஹிட்டானதும் இதற்கு தமிழில் சந்தானம் சார் சரின்னு மனதில் பட்டது. தமிழுக்காக, அவருக்காக நிறைய மாற்றங்கள் செய்திருக்கு. அவரை அழைச்சுச் சொன்னபோது சாரும் சந்தோஷமாக சரி சொன்னார். சில கதைகளுக்கு ஒரு பவர் இருக்கு. எங்கே சுத்தியும் அது சரியானவங்ககிட்டே வந்து சேர்ந்திடும். படத்தின் அத்தனை கேரக்டர்களும் என் கதைப்படியே அமைஞ்சாங்க. என் கணக்கிலிருந்து எதுவும் தப்பாமல் என் கைக்குள் வந்தது படம். இது காமெடிப் படம்னு நினைக்கிறவங்க வந்து பார்த்தால் இதில் எமோஷன், சென்டிமென்ட், டிராமா எல்லாம் கலந்து இருக்கிற ஜனரஞ்சகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயிடுவாங்க.''

“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”
“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”

``தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர்னு எக்கச்சக்க ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க...’’

‘‘சந்தானத்துக்கு எதிராக இருக்கிறவங்க ஸ்ட்ராங்கா இருக்கணும். அவர் அடிக்கிற பஞ்ச் ஒவ்வொண்ணையும் சமாளிக்கிற நல்ல பக்குவமான நடிகர்கள் இருந்தால் காமெடி அள்ளும். அவருடன் நடிக்காமல் இருந்தவர்களையெல்லாம் இதில் கொண்டு வந்தேன். செலவைப் பற்றிக் கவலையே படாமல், எது இருந்தால் நல்லா இருக்குமோ அதற்கான வேலை செய்திருக்கேன். செந்தில் நான் ரசிக்கிற, நேசிக்கிற கலைஞர். அந்த வாழைப்பழ காமெடியில் இருக்கிற அப்பாவித்தனத்தைக் கொண்டு வர்றது அவ்வளவு கஷ்டமான விஷயம். அவரும் நடிக்கிறார். இன்னும் மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் என்று கூட்டம் கூட்டமா இருக்காங்க.''

“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”
“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”

``யார் ஹீரோயின்?’’

‘‘ ‘தாராள பிரபு'வில் நடித்த தான்யா ஹோப். இன்னும் சரியாகக் கணிக்கப்படாமல் இருக்கிறவங்களை சரியான இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கோம். இரண்டு பேரும் ஜோடியாக பார்க்க நல்லாவே இருக்கு. ஒரு படம்னா என்னங்க? அது ஒரு லைஃப். சண்டை, காமெடி, காதல், ஆட்டம், பாட்டம், எமோஷன் எல்லாம் சேர்ந்ததுதானே நம்ம லைஃப்! இதையே காமெடியாக பண்ணிப் பார்த்தால் எல்லோருக்கும் பிடிக்கப் போகுது. அதைத்தான் இதில் செய்திருக்கேன். வீட்டில் ஐ.நா சபை மெம்பர் மாதிரி இருந்துட்டு தெருவைத் தாண்டினதும் தீவிரவாதியாத் திரிவாங்களே... அதுமாதிரி சேட்டையும் குறும்பும் பிடிச்ச சந்தானத்திற்கு தான்யா சரியான ஜோடி.''

“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”
“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”
“வீட்டில் ஐ.நா சபை மெம்பர்... தெருவைத் தாண்டினதும் தீவிரவாதி!”

``பாடல்கள் பிரமாதமாக இருக்கு...’’

‘‘கன்னடத்தில் ரொம்ப மரியாதையுடன் கவனிக்கப்படுகிற அர்ஜுன் ஜன்யாதான் இசையமைச்சிருக்கார். ஐந்து பாடல்களுக்காக அவரின் இசை முற்றிலும் புதுசு. இத்தனைக்கும் அவர் ரொம்ப பிஸி. தமிழ்ப் படம் என்றதும் சந்தோஷமாக கேட்டுட்டுப் பண்றார். இங்கே ஒரு நல்ல இடத்தையும் பிடிக்கணும், முத்திரையையும் பதிக்கணும்னு அவர் எண்ணமாக இருக்கு. கேமரா இங்கே நல்ல பெயர் வாங்குகிற சுதாகர் ராஜ் தான். ஒரு தடவை அவர் ஒர்க்கைப் பார்த்திட்டால் அவரை நீங்க பின்தொடர்ந்துவிடுவீங்க. ஒரு நல்ல காமெடின்னா அதில் 'கிக்'கிற்கு ஒரு நல்ல இடம் இருக்கு. இதே வார்த்தையை உங்களிடமும் படம் பார்த்த பிறகு எதிர்பார்க்கிறேன்.''