ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

24 வயசுல எடுத்த அந்த முடிவு! - ஃப்ளாஷ்பேக் பகிரும் ப்ரியா பவானி சங்கர்

ப்ரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியா பவானி சங்கர்

படங்கள்: கிரண் சா

சமீபத்தில் ஓடிடியில் வெளியாகிய ‘ ஓ... மணப்பெண்ணே!’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள `பொம்மை', `ஹாஸ்டல்' படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி ஜோடியாக கமிட் ஆகியுள்ள பட வேலைகள் இன்னொருபக்கம் நடந்துகொண்டிருக்க, பிசியாக இருக்கும் ப்ரியாவிடம் பேசினோம்....

அவள் விகடனுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லிப் பேச ஆரம்பிக்கிறார் ப்ரியா...

‘`என் லைஃப்லயும் 24-வது வயசு ரொம்ப ஸ்பெஷல். ஜர்னலிஸ்ட்டா இருந்த நான் என் 24-வது வயசுலதான் என்டர்டெயின்மென்ட் இண்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சேன். சீரியல் பண்ணணும், சினிமாவுல பெரிய ஆளா வரணும்னு எந்த ப்ளானும் அப்போ எனக்கில்லை. என் படிப்புச் செலவை நானே பார்த்துக்க எனக்கு பார்ட் டைம் வேலை தேவைப்பட்டது. ஆனா, நான் நடிச்ச சீரியலுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு நானே எதிர்பார்க்காதது. 24 வயசுல நான் எடுத்த சரியான அந்த முடிவுதான் இன்னிக்கு எனக்குக் கிடைச்சிருக்கிற அடை யாளத்துக்கு காரணம்...’’ 24 சென்டிமென்ட் பகிர்ந்தபடி தொடர்கிறார் ப்ரியா.

24 வயசுல எடுத்த அந்த முடிவு! - ஃப்ளாஷ்பேக் பகிரும் ப்ரியா பவானி சங்கர்
24 வயசுல எடுத்த அந்த முடிவு! - ஃப்ளாஷ்பேக் பகிரும் ப்ரியா பவானி சங்கர்

`‘ `ஓ... மணப்பெண்ணே’ படத்துக்கு முன்னாடி நான் நடிச்ச படங்கள்ல எல்லாம், என்னோட பார்ட் ரொம்ப கம்மியா இருக்கும். ஹீரோக்களோட படங்கள்ல நானும் நடிச்சிருக்கேன்ற மாதிரிதான் நினைக்கத் தோணும். ஆனா, ‘ஓ... மணப்பெண்ணே’ என்னோட படம்னு பெருமையா சொல்லிப்பேன். ஃபிரெண்ட்ஸ், சோஷியல் மீடியான்னு எல்லாத் தரப்புலேருந்தும் பாசிட்டிவ் கமென்ட்ஸ் வருது. ஐ’ம் ஹேப்பி...’’ எனும் ப்ரியாவின் சிரிப்பில் அந்த மகிழ்ச்சியின் பிரதிபலிப்பு.

உங்களுடைய ஃபைனான்ஷியல் பிளானிங் எப்படியிருக்கும்?

பெண்களுக்கு கூடுதல் தன்னம்பிக்கையைக் கொடுக்குற விஷயம் பொருளாதார சுதந்திரம். என்னோட 14 வயசுல எங்க அப்பா எனக்கு ஒரு பேங்க் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக் கொடுத்து, ஏ.டி.எம் கார்டையும் கொடுத்தார். இப்போவரை அந்த அக்கவுன்ட்டைதான் பயன்படுத்தறேன். காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர்லயே பார்ட் டைம் வேலை செஞ்சு சம்பாதிக்க ஆரம்பிச்சேன். இப்போதும் எனக்குத் தேவையானதை அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுதான் வாங்கிப்பேன். அது பயம் இல்ல... அப்பா மேல உள்ள மரியாதை... அப்பா பேங்க்ல வேலை பார்க்கறார். ஸோ... என் ஃபியூச்சர் பிளான்ஸ் எல்லாம் அப்பா தான் பார்த்துக்கிறார். இப்போதைக்கு நான் ஜாலியா இருக்கேன்.

24 வயசுல எடுத்த அந்த முடிவு! - ஃப்ளாஷ்பேக் பகிரும் ப்ரியா பவானி சங்கர்
24 வயசுல எடுத்த அந்த முடிவு! - ஃப்ளாஷ்பேக் பகிரும் ப்ரியா பவானி சங்கர்

உங்களோட காஸ்டியூம் ஸ்டைல் ரொம்ப ஸ்பெஷலா இருக்கே... எப்படி ?

காலேஜ் படிச்சிட்டிருந்தவரைக்கும் நான் ரொம்ப சாதாரணமாதான் டிரஸ் பண்ணிப்பேன். என்னைப் பொறுத்த வரை என் டிரஸ் எனக்கு வசதியா இருக்கணும். என் தேவைக்கேற்ப எப்படி வேணும்னு ஸ்டைலிஸ்ட்கிட்ட என் ஐடியாஸோடு சொல்லிடுவேன். அவங்க க்ரியேட்டிவிட்டியையும் சேர்த்து டிசைன் பண்ணிக் கொடுக்குற டிரஸ்ஸை பொது நிகழ்ச்சிகளுக்கு அணியுறேன்.

உங்க ஸ்லிம் சீக்ரெட் என்ன?

சீக்ரெட்டெல்லாம் இல்லீங்க. முதல் லாக்டெளன்ல நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்ததுல கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன். சினிமாவுல இருக்கோம். நம்ம தோற்றம் ரொம்ப முக்கியம் இல்லையா... அதனால் வெயிட்டைக் குறைக்கணும்னு தோணுச்சு. நான் நல்லா சாப்பிடுவேன். சாப்பிடுறதுக்குதானே உயிர் வாழறோம்.... அதனால் சாப்பாட்டைத் தியாகம் பண்ணாம, உடம்பை ஃபிட்டா வெச்சுக்க வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். வெயிட் குறைஞ்சிருக்கேன்னு சொல்றதைவிட இப்போ ஃபிட்டா இருக்கேன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.