Published:Updated:

"அந்த முன்னணி இயக்குநர் எனக்குத் தரவேண்டிய ரூ.25 லட்சத்தை தரவேயில்ல"- கலங்கும் தயாரிப்பாளர் துரை

தயாரிப்பாளர் வி.ஏ.துரை

ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது சர்க்கரை நோயால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:

"அந்த முன்னணி இயக்குநர் எனக்குத் தரவேண்டிய ரூ.25 லட்சத்தை தரவேயில்ல"- கலங்கும் தயாரிப்பாளர் துரை

ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை திரைப்படத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது சர்க்கரை நோயால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை
ரஜினியின் பாபா, பிதாமகன், கஜேந்திரா, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, ராட்டினம் போன்ற படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. 

ஆரம்பத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார். 

தயாரிப்பாளர்  வி.ஏ.துரை
தயாரிப்பாளர் வி.ஏ.துரை

ரஜினி, விஜயகாந்த், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்துப் படம் தயாரித்த இவர் திரைப்படத்  தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது சர்க்கரை நோயால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று அவரின் நண்பர் மூலம்  பேஸ்புக்கில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நண்பர் குமாரிடம் பேசினோம். “ அவருக்கு சுகர் அதிகமானதனால ரொம்ப முடியாம இருக்காரு. கடைசியா கஜேந்திரா படம் தயாரிச்சிருக்காரு. அதுக்கப்புறம் அவருக்கு பயங்குற லாஸ் ஆனதனால அவரால படம் எதுவும் தயாரிக்க முடியாமப்போயிருச்சு. அவருடைய மருத்துவச் செலவுக்காகதான் இப்போ எல்லார்கிட்டேயும் உதவி கேட்டிருக்காரு. அவருடைய மருத்துவச் செலவுக்கு இப்போ காசு வேணும். பிதாமகன் படத்துக்குப் பிறகு ஒரு முன்னணி இயக்குநருடன் சேர்ந்து அடுத்த படம்  பண்ணலாம்னு சொல்லி  25 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்காரு.

"அந்த முன்னணி இயக்குநர் எனக்குத் தரவேண்டிய ரூ.25 லட்சத்தை தரவேயில்ல"- கலங்கும் தயாரிப்பாளர் துரை

ஆனால் படம் எதும் எடுக்கல. அந்தப் பணத்தை இவர்  திருப்பிக் கேட்கும்போது  அந்த இயக்குநர் நீங்க பணம் எதுவும் தரவே இல்லைன்னு சொல்றாராம். அதுலதான் மனசு உடைஞ்சுபோயி அவருக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி  ரொம்ப உடம்பு சரியில்லாமப் போயிருச்சு. அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கொடுத்தா அவரோட மருத்துவச் செலவுக்கு உதவியா இருக்கும். ரஜினிகாந்த் அவரோட நெருங்கிய  நண்பர்தான். நான் இருக்குற நிலைமை ரஜினிக்குத் தெரியாது, அவருக்குத் தெரிஞ்சா கண்டிப்பா உதவி பண்ணுவாரு. அதனால் என்னுடைய நிலைமையை ரஜினிகிட்ட சொல்லுங்க அப்படின்னு கேக்குறாரு.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி ரொம்ப முடியாம மருத்துவமனையில இருந்தப்போ சூர்யா, வெற்றிமாறன் எல்லாம் கூட பணம் கொடுத்து உதவி  பண்ணுனாங்க. இப்போ அவருக்குன்னு சொந்தமா ஒரு வீடு இல்ல. கையில காசு இல்ல. அதனால அவருடைய மருத்துவச் செலவுக்கு உதவி செய்தால் அவர் குணமாகிடுவாரு" என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர்  வி.ஏ.துரை
தயாரிப்பாளர் வி.ஏ.துரை

இதுகுறித்துத் தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம்  பேசும்போது, நீங்கள், முன்னணி இயக்குநரிடம் படத்திற்காக 25 லட்ச ரூபாய் கொடுத்தீர்களா என்று நாங்கள் கேட்டப்போது ஆமாம் என்றார். “எனக்கு கால்ல புண்ணு வந்து இப்போ ரொம்ப முடியாம இருக்கேன். என்னால நடக்க முடியல. எனக்கு மருத்துவ உதவி பண்ணினா போதும். கால் குணமாகி நான் நடந்திருவேன்”  என்றார்.