Published:Updated:

PS 2: பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் LEO அப்டேட் கேட்ட ரசிகர்கள் - த்ரிஷா சொன்ன பதில்

த்ரிஷா

பொன்னியின் செல்வன் - 2 பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.

Published:Updated:

PS 2: பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் LEO அப்டேட் கேட்ட ரசிகர்கள் - த்ரிஷா சொன்ன பதில்

பொன்னியின் செல்வன் - 2 பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.

த்ரிஷா
பொன்னியின் செல்வன் - 2 பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி கோவையில் நேற்று மாலை நடந்தது. இதில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி,  ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இதோ. “ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். ஆதித்த கரிகாலன் காதல் தோல்வியால் வாருக்கு போனான். சின்ன‌ வயசுல இருந்து யாரையும் லவ் பண்ணது இல்ல.

விக்ரம்
விக்ரம்

நானும் பீல் பண்ணி இருக்கேன். படத்துல வந்ததுலாம் நடிப்பே இல்ல. அதான்‌ உண்மை. நான் தான் Original Soup Boy.” என்று டேவிட் முதல் PS வரை.. காதல் தோல்வி கதாபாத்திரங்களின் ரகசியத்தை உடைத்தார் விக்ரம்.

த்ரிஷா மேடை ஏறியதும் வழக்கம் போல ‘லியோ’ படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு த்ரிஷா "லியோ ஷூட்டிங்கில இருந்துதான் வரேன். லோகேஷ், உங்க தளபதி எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க. மிச்சத்த லியோ ஈவன்ட்ல பேசிக்கலாம்." என்றவரிடம்,

ஆதித்த கரிகாலன், வந்தியதேவன், அருண்மொழி வர்மன் ஆகியோரை 1,2,3 என உங்கள் மனதில் உள்ளது போல வரிசைப்படுத்துங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு த்ரிஷா, “என் இதயத்தில் இருப்பது VT (வந்திய தேவன்)  தான்.” என்று பதிலளித்தார்.

கார்த்தி பேசும்போது, “எனக்கு பிடித்த இரண்டு வசனங்கள் படத்தில் இடம்பெறவில்லை. நீக்கிவிட்டார்கள்.” என்றவரிடம், “உயிர் உங்களுடையது தேவி வசனத்துக்கு உங்கள் மனைவி என்ன கூறினார்கள்.” என கேட்கப்பட்டது. “அதற்கு என் மனைவி ரொமான்ஸ் இல்லாமல் நீங்கள் கதையே நடிக்க மாட்டீர்களா. வீட்டில் மட்டும் தான் ரொமான்ஸ் வருவதில்லை என கூறினார்.” என்றார் கார்த்தி.

ஜெயம்ரவி பேசும்போது, “பல பேட்டிகளில் PS1 படத்தை, எந்தப் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். என கேட்பார்கள். PS1 படத்தை PS 2 உடன் ஒப்பிட்டு பாருங்கள். நாயகன் பார்ட் 2 படத்தில் நடிக்க எனக்கு ஆசை. மணி சாரின் படங்களில் ரொம்பப் பிடிச்சது 'இருவர்' தான்.. மணி சார் made 'இருவர்'. 'நாயகன்’ made மணி சார்." என்றார்.