Published:Updated:

முதல்வரின் ட்வீட் போதும் `மார்டன் தியேட்டர் ஆர்ச்'தப்பிச்சிடும்னு நம்புகிறோம்! - கார்த்திகேயன்

முதல்வர் ஸ்டாலின்

சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போறாங்கன்னு செய்தி கேள்விபட்டோம். அந்தப் பகுதி மக்கள் திரண்டு போய் எதிர்ப்பு தெரிவிச்சதால அந்த முயற்சி கைவிடப்பட்டது.

Published:Updated:

முதல்வரின் ட்வீட் போதும் `மார்டன் தியேட்டர் ஆர்ச்'தப்பிச்சிடும்னு நம்புகிறோம்! - கார்த்திகேயன்

சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போறாங்கன்னு செய்தி கேள்விபட்டோம். அந்தப் பகுதி மக்கள் திரண்டு போய் எதிர்ப்பு தெரிவிச்சதால அந்த முயற்சி கைவிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்

''மாடர்ன் தியேட்டர்: MGR, கருணாநிதியின் திரைவாழ்வின் அங்கம்; 129 படங்கள் தயாரித்த இடத்தின் அவல நிலை!'' என்கிற தலைப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி விகடன் தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர். சுந்தரத்துக்கு அன்று 59வது நினைவு தினம்.

அதையொட்டி டி.ஆர்.சுந்தரத்தின் கொள்ளுப் பேரனான கார்த்திகேயன் நம்மிடம் பேசியிருந்தார்.

``மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இயங்கிக் கொண்டிருந்த 10 ஏக்கருக்கும் அதிகமான அந்த இடம் ( அந்த ஆர்ச்சுடன் சேர்த்து) 20 ஆண்டுகளுக்கு முன்னர் ‘முதியோர் இல்லம்’ ஒன்றிற்காக விற்கப்பட்டதாகவும், `முதியோர் இல்லம்’ என்பதால் குறைவான விலைக்கு தங்கள் குடும்பம் இடத்தை விற்றதாகவும் தெரிவித்திருந்தார். வாங்கியவர்கன் ஆர்ச் இருக்கிற இடம் ‘மார்டன் தியேட்டர்ஸ் நினைவாக அப்படியே இருக்கும்’ எனச் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார். பின்னாட்களில் பலருக்கு அந்த இடம் கைமாறி தற்போது நாலாவது தரப்பாக ஒருவரிடம் இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின அப்போது கார்த்திகேயன், '' சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போறாங்கன்னு செய்தி கேள்விபட்டோம். அந்தப் பகுதி மக்கள் திரண்டு போய் எதிர்ப்பு தெரிவிச்சதால அந்த முயற்சி கைவிடப்பட்டது." எனச் சொன்ன கார்த்திகேயன்,

ஆர்ச் முகப்பில் வைக்கப்படுவதற்காகவே செதுக்கப்பட்ட தன்னுடைய தாத்தா சிலை ஒன்றையும் இப்போது வரை அங்கு நிறுவமுடியவில்லை' என்ற வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார்.

கூடவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு சேலத்தின் பழைமையான அடையாளமான இந்த ஆர்ச்சை ஒரு நினைவுச் சின்னமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்திருந்தார்.

முதல்வரின் ட்வீட் போதும் `மார்டன் தியேட்டர் ஆர்ச்'தப்பிச்சிடும்னு நம்புகிறோம்! - கார்த்திகேயன்

இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு தொலுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக கொங்கு பகுதிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் .நேற்றைய தினம் சேலம் மார்டன்ஸ் தியேட்டர் பகுதிக்குச் சென்று அந்த ஆர்ச் முகப்பில் நின்று புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரிலும் பதிவிட, தற்போது மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்திகேயன். அவரிடம் பேசினோம்.

''திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில்'னும் 'கலைஞரின் பேனா தீட்டிய கூர்மையான வசனங்களின் பிறப்பிடம்'னும் இந்த இடம் குறித்துக் குறிப்பிட்டிருந்தார் முதல்வர். கலைஞரோடு  எம்.ஜி.ஆர், கவிஞர் கண்ணதாசன், டி.ஆர்.மகாலிங்கம், ஜானகி ராமச்சந்திரன், என்.டி.ஆர். முரசொலி மாறன்னு பிற்காலத்துல பெரிய பெரிய ஆளுமைகளா வந்தவங்கெல்லாம் புழங்கிய இடம்கிறதால அப்படிக் குறிப்பிட்டிருக்கார் முதல்வர். 'திரையுலகின் பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்'னும் பதிவு பண்ணியிருக்கார். சத்தியமான வார்த்தைகள் அவை.

ஏற்கெனவே ஆர்ச் இடிக்கப்படலாம்கிற பேச்சு எழுந்தபோது, முதல்வர் அலுவலகம் வரைக்கும் நாங்க விஷயத்தைக் கொண்டு போயிருந்தோம். அதனால இடிக்கப் படுவதிலிருந்து தற்காலிகமாத் தப்பிச்சிருந்தது. இப்போ முதல்வரின் இந்த ஒரு ஃபோட்டோவும் ட்விட்டர் பதிவும் போதும், ஆர்ச் பாதுகாக்கப் பட்டுடும்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்திடுச்சு.

அதேநேரம் இப்பவும் முகப்பில் நிறுவுவதற்காக செதுக்கப்பட்ட தாத்தாவின் சிலை சேலத்தில் கலைஞரின் நண்பராக இருந்த ஒருவரின் வீட்டு கார் ஷெட்டில்தான் இருக்கிறது, அந்த சிலையுடன் முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலை ஒன்றையும் ஆர்ச் அருகில் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. பிரசாரத்துக்காக வந்த இடத்தில் முதல்வரைச் சந்தித்து இது தொடர்பான மனுவை அளிக்கலாம் எனக் காத்திருந்தேன். அமைச்சரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதியிடம் பேசச் சொல்லி இருக்கிறார்கள். பேசலாமென இருக்கிறோம்'' என்கிறார் கார்த்திகேயன்