Published:Updated:

சமந்தாவின் `ஊ சொல்றியா' பாடலுக்குத் தடைகோரி வழக்கு... என்ன சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா?!

'ஊ சொல்றியா' - சமந்தா

இதன் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாகவும் காம குறித்த சிந்தனையிலே இருப்பவர்களாகவும் சித்திரித்துள்ளதாகத் தடை கோரியவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Published:Updated:

சமந்தாவின் `ஊ சொல்றியா' பாடலுக்குத் தடைகோரி வழக்கு... என்ன சொல்கிறார் பாடலாசிரியர் விவேகா?!

இதன் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாகவும் காம குறித்த சிந்தனையிலே இருப்பவர்களாகவும் சித்திரித்துள்ளதாகத் தடை கோரியவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

'ஊ சொல்றியா' - சமந்தா
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கும் இதை 'ரங்கஸ்தலம்' படத்தை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியான எல்லா மொழிகளிலும் ஹிட்டாகியுள்ளன.

இத்திரைப்படம் ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில் நடக்கும் செஞ்சந்தன மரம் கடத்தல் தொடர்பான கதைக்களத்தைக் கொண்டது என்று பேசப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்துக்காகத் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், தமிழில் விவேகாவின் பாடல் வரிகளில், ஆண்ட்ரியாவின் குரலில், சமந்தா நடனமாடியுள்ள, 'ஊ சொல்றியா' பாடல், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சமந்தா, முதன்முதலாக ஒரு படத்தில் ஒரு பாடலுக்காக மட்டுமே நடனம் ஆடியுள்ள பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஊ சொல்றியா' - சமந்தா
'ஊ சொல்றியா' - சமந்தா

இதனிடையே, ஆந்திராவின் ஆண்கள் அமைப்பு, பாடலின் ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷனுக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது. இதற்கான வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் சந்திரபோஸ். இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் ஆண்களைக் குறித்த விமர்சனமாக உருவாகியுள்ளது. இதன் வரிகள் ஆண்களை வக்கிர மனம் கொண்டவர்களாகவும் காமம் குறித்த சிந்தனையிலே இருப்பவர்களாகவும் சித்திரித்துள்ளதாகத் தடை கோரியவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தப் பாடலின் தமிழ் வரிகளை எழுதிய விவேகாவிடம் இந்தச் சர்ச்சைக் குறித்து பேசினோம். "இந்தப் பாட்டு பரபர ஆக்ஷனுக்கு நடுவில் சற்றே இளைப்பாறுவதுபோல் அமைகிறது. ஆணின் பலவீனங்களை அடுக்கிச் சொல்வதுபோல் அமைந்திருக்கும் இந்தப் பாடல் துள்ளலாகவும் இருக்க வேண்டும், கிண்டல் தொனியுடனும் இருக்க வேண்டும். தெலுங்குப் பாடலுக்கு இணையாகவோ அதற்கு மேலாகவோ பாடல்வரிகள் அமைய வேண்டும் என்று எழுதினேன். ஆணின் 'பெண் சபல புத்தி'க்கு எந்தப் பாகுபாடும் இல்லை என்ற அடிப்படையில்தான் இந்த வரிகளை அமைத்தேன். மொத்த வரிகளும் களேபரமாக அமைந்துவிட்டன. இரண்டே நாள்களில் இரண்டு மில்லியன் வியூஸை கடந்து இணையத்தில் ஹிட்டடித்திருக்கிறது பாடல். இது எனக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. இந்தப் பாடல் அவர்களை விமர்சிப்பதாக இருந்தாலும் பெருந்தன்மையாகப் பாடலை ரசிக்கிறார்கள் ஆண்கள். பெண்களுக்கும் பாடல் பிடித்திருக்கிறது. ஸ்டைலிஷ் ஆட்டத்துக்குப் பெயர்பெற்ற அல்லு அர்ஜுன் எப்படி ஆடியிருப்பார், சமந்தாவின் முதல் குத்து பாடல் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கிறது. 17-ம் தேதி ரசிகர்களுக்கு விருந்துதான்" என செம உற்சாகத்துடன் பதிலளித்தார் விவேகா.

விவேகா
விவேகா
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வரும் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ளது.