அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

சிவகாசி #VikatanReview

சிவகாசி  #VikatanReview
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகாசி #VikatanReview

தீபாவளி வெற்றி வெடி இந்த 'சிவகாசி'.!

து விஜய் ஸ்பெஷல் ஆக்ஷன் ஆட்டம்பாம்!சென்னையில் வெல்டிங் கடை வைத்திருக்கும் அநாதை இளைஞனாக விஜய். தாதாயிஸத்தைத் தட்டிக்கேட்பது, காமெடி பண்ணி ஏரியாவை கலகலப்பூட்டுவது எனத் திரிகிற விஜய், பெரிய இடத்துப் பெண் அஸினிடம் காதலாகிறார்.விஜய் யாருமற்ற ஏழை எனத் தெரிந்தும், ‘ஜஸ்ட் லைக் தட்’ காதலுக்கு க்ரீன் சிக்னல் போடுகிறார் அஸினின் அப்பா (வழக்கமான தமிழ் சினிமா - அப்பாக்களின் தந்திரமெல்லாம் இல்லை!). அப்படியும், விஜய்யின் கோபமே கல்யாணத்துக்குத் தடையாக வந்து நிற்க... அஸின் குமுறிக் குமுறிக் கேள்வி கேட்டு, ‘பாசம்னா உனக்கு என்னனு எப்படித் தெரியும்?’ நீதான் அநாதையாச்சே!’ என்று வெடிக்க... ‘நானா அநாதை?’ என்று தன் பிளாஷ்பேக்கை விஜய் எடுத்துவிட... அப்புறம் முழுக்க கிராமத்தில் நடக்கிறது கதை!

சிவகாசி  #VikatanReview
சிவகாசி #VikatanReview

 ஊரை அடித்து உலையில் போடும் சொந்த அண்ணன் பிரகாஷ்ராஜை கலகல கலாட்டாக்களால் மண்ணைக் கவ்வ வைத்து, கடைசியில் அவருக்கு எதிராகத் தங்கையைத் தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்து... எனக் கலக்கி எடுக்கிறார் விஜய். சிலோன் பெளலர்களை டோனி விளாசுகிற  மாதிரி, சிக்குகிற அத்தனை பேரையும் அடித்து வெளுக்கிறார். அவ்வப்போது அட்வைஸாலும் போட்டுத் தாக்குவதுதான்... ஸாரி! சில இடங்களில் தத்துவம் என்று பெயரில் தத்துப் பித்துவம் தலைகாட்டுவதும், பெண்மைக்கு இலக்கணம் வகுக்கிறேன் பேர்வழி என்று லேசாக நோகடிக்கிற வசனங்கள் பேசுவதும், தேவையே இல்லீங்ணா! உள்ள ரூட். இன்னும் கூட ஜாலியாகச் செய்திருக்கலாம்.அருவாளோடு வந்து, விஜய்யைக் கட்டிப்பிடிக்கச் சொல்லும்போதும் சரி, விஜய்க்கு ஈடாக டான்ஸில் சுழலும் போதும் சரி...  ‘ஆகா'ஸின். ஆனால், என்ன அவமானப்படுத்தினாலும் விஜய் காலையே அஸின் சுற்றி வருவதில் லாஜிக் இல்லை சாமியோவ்!விஜய்யின் தோஸ்த்தான பிளாட்பார வக்கீல் வெங்க்கியாக வரும் எம்.எஸ். பாஸ்கர்.... அப்பப்போ சிரிக்கூ!'நீ என் பெண்டாட்டியைக் கற்பழிச்சிட்டே!' என விஜய் உடான்ஸ் விடும்போது, ‘எவ புருஷன்டா நீ?’ என பிரகாஷ்ராஜ் பதற்றமாக எதிர்க் கேள்வி எழுப்புகிற ஜோரில் தியேட்டரே அதிர்கிறது.

சிவகாசி  #VikatanReview
சிவகாசி #VikatanReview

 ரசிகமணிகளுக்காக ரகளையான மசாலா விருந்து தர வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டதாலோ என்னவோ, ‘தூள்’ பட  லேடி தாதா, ‘கில்லி’ பட மதுரை மைனர், ‘திருப்பாச்சி’ பட பாசக்கார அண்ணன் என வெற்றிப் படங்களின் ‘ஹிட்’ கேரக்டர்களின் சாயலில் அப்படியே அடித்திருக்கிறார் பேரரசு.சொந்த குடும்பத்துச் சொத்துக்களை - மொத்தமாக அபகரித்து, அவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தும் தன் மாமியாரிடம் பிரகாஷ்ராஜ் கோழிக் குஞ்சாக பம்முவது ஏன்? தன் மகளின் புருஷன் ஒரு எம்.எல்.ஏ-வாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக பிரகாஷ்ராஜுக்காக மூளி மங்கம்மா பணத்தைக் கொட்டிக்கொண்டே இருப்பதும் ஒவர் கற்பனை!

சிவகாசி  #VikatanReview
சிவகாசி #VikatanReview

இசை, ஸ்ரீகாந்த்தேவா. ‘வாடா தோழா’ ரசிகார்ப்பணம் என்றால்... ‘வடு மாங்கா’ குத்தார்ப்பணம்!பின்பாதிக்கு ஈடாக முன்பாதியிலும் விறுவிறுப்பு காட்டியிருந்தால், முழுநீள விருந்தாக இருந்திருக்கும்.விஜய்க்கு இன்னொரு வெற்றி வெடி!

- விகடன் விமர்சனக்குழு

(20.11.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)