
facebook.com/Hema Chandrasekar
பொங்கலை மொக்கிட்டு நாலு மணி நேரம் ஹைவேஸ்ல வண்டி ஓட்டு றவங்களை ட்ரங்க் அண்ட் டிரைவ்ல உள்ள போடுங்க ஆபீசர்...அம்புட்டு போதையா இரிக்கி!
facebook.com/Dhivya Srinivasan
“பா.ஜ.க-வில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு, ஆனால் பா.ஜ.க மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை - நடிகர் எஸ்.வி.சேகர்’’ அய்யூ அய்யூயோ அய்யூய்யுயோ... ஓ அப்பிடி வருதா, நா கூட லெஃப்ட்ல இருந்து அப்பிடியே போயிடும்னு நெனச்சே. எனக்குத் தெரிஞ்சிருச்சு குமுதா நீ வெய்க்கிற ஒவ்வொரு புள்ளிக்கும் அர்த்தம்க்கீது.

facebook.com/Yuva Krishna
சென்னை எம்.ஜி.ஆர் நகர், ராமாவரம் பகுதிகளில் அப்போது கிளி ஜோசியர்கள் அதிகமாக வசித்தார்கள். நகரின் பெரும்பாலான பிளாட்பாரங்களை அவர்களது ஜோசியக்கடைதான் அப்போது ஆக்கிரமித்திருக்கும். ஒவ்வொரு ஜோசியருமே ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், கலைஞர், இந்திராகாந்தி, அமிதாப்பச்சன் போன்ற விஐபிகளுக்கு ஜோசியம் பார்த்து (!) அவர்களோடு எடுத்துக்கொண்ட வண்ணப்படத்தை வரிசையாக பிரேம் போட்டு வைத்திருப்பார்கள். அப்படியாப் பட்டவர்களுக்கு ஜோசியம் பார்த்த இவர் ஏன் தெருவில் உட்கார்ந்திருக்கிறார் என்று தோன்றும். வெளிநாடுகளுக்குப் பயணித்து வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து போட்டோவாக எடுத்து போட்டுத் தாளித்துக்கொண்டிருக்கும் மோடியையும், எடப்பாடியையும் பார்க்கும்போது அந்தத் தெருவோர ஜோசியர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.
facebook.com/Harisankar Sriram
முடிவெட்டிட்டு வீட்டுக்கு வந்ததும் எப்பவுமே ஏன் ஒருமாதிரி கேவலமா சிரிக் கறாங்கனே தெரியல... நாம கண்ணாடில பார்க்கும் போது அரவிந்த்சாமி மாதிரிதானே தெரிஞ்சோம்..! பொறாமையா இருக்கும்.
facebook.com/Bogan Sankar
சரி,ஒரு சமரசம்.
ராக்கெட்டுகளுக்காகவும் அழுங்கள்.
மனிதர்களுக்காகவும் அழுங்கள்.
facebook.com/Hema Zephyr
கண்ணாடிய எங்கயாது வச்சுட்டு கண்ணு தெரியாம அத தேடுறதுதான் கஷ்டமான விஷயம்னு நெனச்சுட்டு இருந்தேன்.பசியோட சமைக்கறதுதான் இருக்குறது லேயே கஷ்டம்போல... இப்பத்தான் புரியுது.

facebook.com/Sarav Urs
ஹீ: பசிபிக் கடலில் பெரிய நில நடுக்கம் ஏற்பட்டிருக்காம். இதனால ஏற்பட்ட சுனாமியில உலகமே அழியப்போகுதாம்... நம்ம எல்லோரும் இன்னும் 2 மணி நேரத்தில சாகப்போறோம்... இப்போதான் பிபிசில கேட்டேன்... :’(
ஷீ: நேத்து ஏன் எனக்கு நீ போன் பண்ணல... #whyilovegirls...
facebook.com/Rama Lingam
இந்த வருட புது மாப்பிள்ளைகளின் இனியான இணைய செயல்பாடுகள்.
1. பொண்டாட்டி சமையல் பற்றிய புளிப்பு காமெடி
2. பொண்டாட்டியின் கண்டிப்புகள், கட்டுப்பாடுகள் பற்றிய புளிப்பு காமெடி
3. பொண்டாட்டி கர்ப்பமான ஃபீலிங்க்ஸ்
4. பிரசவம் வரை அப்டேட்டுகள்
5. குழந்தை ஒன்னுக்கு அடிப்பது போன்ற ராவுடிகள்...ல்
twitter.com/mohanramko
கட்டிப்பிடி வைத்தியத்தை முதலில் சொன்ன கமல் ஒரு தீர்க்கதரிசி

twitter.com/ItsJokker
ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்கும், மனைவி வைக்கிற குழம்பும் ஒண்ணுதான். என்னதான் வெரைட்டியா செஞ்சு, வித விதமா பேரு வெச்சாலும் நமக்கு எல்லாமே ஒரே மாதிரிதான் தெரியும்..!
twitter.com/manipmp
“ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர்” - செல்லூர் ராஜு #தட் கந்தசாமி ஒரு சோக்காலி மொமன்ட்
twitter.com/shivaas_twitz
தோசையைக் கல்லில் ஊற்றிவிட்டு தோசைக் கரண்டியைத் தேடுவதெல்லாம், விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னலுக்காகக் காத்திருக்கும் பரபரப்பு நிமிடங்கள்
twitter.com/indhiratweetz
உடம்பு சரியில்லன்னு சொன்னாலே “பீரியடா?”ன்னுதான் கேக்குறானுக. காய்ச்சல், தலைவலியெல்லாம் கணக்குலயே வராதுபோல.

twitter.com/ItsJokker
அடப்பாவிகளா, நதிநீர் இணைப்போம்னு சொன்னீங்களே, கடைசியில பேங்க இணைச்சிட்டிருக்கீங்களே.!
twitter.com/mrpaluvets
“நீங்க இல்லைன்னா நாங்க என்னண்ணா பண்ணுவோம் இங்க” - வனிதா அக்கா to சேரப்பா. யாராவது ஒருத்தர் turn எடுத்து வெங்காயத்த வெட்டுங்க. இதெல்லாம் ஒரு கேள்வியா?
shivaas_twitz
சொந்தக்காரங்களுக்கு ஆன்லைன்ல பஸ் டிக்கெட் புக் பண்ணிக் கொடுக்குறதுல பிரச்னை என்னன்னா...பஸ் போர்டிங் பாயின்ட்டுக்கு வர லேட் ஆனாகூட நம்ம மேல கோபப்படுறாங்க. என்ன தம்பி புக் பண்ணியிருக்க..?!
twitter.com/sathyathetruth/
இமான் பாட்டெல்லாம் கரோக்கேல ஓடவிட்டு எந்தப் பாட்டுன்னு கண்டுபிடிக்கச் சொல்லி க்விஸ்ஸே நடத்தலாம்.

twitter.com/skpkaruna/
தகவல் தொழில்நுட்பம், சாலை, ஆகாயப் போக்குவரத்து எல்லாம் நவீனமாகிவிட்ட இந்தக் காலத்தில் ஒரு மாநிலத்தையே தகவல் தொடர்பின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்திருக்க முடியும் எனும் சாத்தியம் வியப்புதான்! மக்கள் ஆட்சியில், அரசு இயந்திரத்தின் அதிகாரக் கரங்களின் வலிமை திகிலூட்டுகிறது.
twitter.com/mekalapugazh/
முதல்வர் ஊரில் இல்லாதபோதுகூட துணைமுதல்வருக்குக் கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படவில்லை என்றால், அந்தத் துணைமுதல்வர் என்பதற்கான விளக்கம்தான் என்னவாக இருக்கும்?