Published:Updated:

முதல் பெயர்`சத்திய சோதனை', சின்ன லாஜிக் பிழை, நவாஸுதின் சித்திக்! - `ஹே ராம்' சில சுவாரஸ்யங்கள்

ஹே ராம்

முதலில் இப்படத்துக்கு `சத்திய சோதனை' என்றே பெயரிட நினைத்திருக்கிறார் கமல். பிறகுதான், காந்தி உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்று சொல்லப்படும் `ஹே ராம்' டைட்டிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Published:Updated:

முதல் பெயர்`சத்திய சோதனை', சின்ன லாஜிக் பிழை, நவாஸுதின் சித்திக்! - `ஹே ராம்' சில சுவாரஸ்யங்கள்

முதலில் இப்படத்துக்கு `சத்திய சோதனை' என்றே பெயரிட நினைத்திருக்கிறார் கமல். பிறகுதான், காந்தி உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்று சொல்லப்படும் `ஹே ராம்' டைட்டிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஹே ராம்

20 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் `ஹே ராம்.' இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

ஹே ராம்
ஹே ராம்

முதலில் இப்படத்துக்கு `சத்திய சோதனை' என்றே பெயரிட நினைத்திருக்கிறார் கமல். பிறகுதான், காந்தி உதிர்த்த கடைசி வார்த்தைகள் என்று சொல்லப்படும் `ஹே ராம்' டைட்டிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று வரை, மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லபட்ட சம்பவத்தை, திரையில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒரே இந்தியத் திரைப்படம் `ஹே ராம்' மட்டுமே.

காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு, `ஹே ராம்' மறுதிரையிடல் செய்யப்பட்டது. அதில் பேசிய கமல், "நான் யாருடைய பக்தனும் அல்ல. ஆனால், காந்தியடிகளின் ஒளிவட்டத்துக்குப் பின்னால் சென்று பார்க்க வேன்டுமென்கிற ஆசை உண்டு. நேரு, காந்தி இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம், அங்கு அவர்களின் அருகில் நான் இருந்திருக்கக் கூடாதா என ஏங்கியிருக்கிறேன்" என்றார்.

ஹே ராம்
ஹே ராம்

படம் வெளியான சமயத்தில் வெகுஜன ரசிகர்களைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனந்த விகடன் விமர்சனத்தில், உச்ச மதிப்பெண்களில் ஒன்றான 60 மதிப்பெண்கள் பெற்றது. யூடியூபில் பதிவேறியிருந்த இதன் பைரேட்டட் வெர்ஷன் 925k பார்வைகளைக் கடந்திருந்தது.

கமலின் முன்னாள் மனைவி சரிகா, ஆடை வடிவமைப்பு செய்ய, ஸ்ருதிஹாசன் தன் அம்மாவுக்கு உதவியாளராகவும் சிறு கதாபாத்திரத்தில் நடிகையாகவும் பணிபுரிய, அக்‌ஷரா ஹாசனும் கலை இயக்குநர் சாபு சிரில்க்கு உதவியாளராக வேலை செய்தார். சரிகா, சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருதும் வென்றார். இப்படி மொத்தக் குடும்பமும் `ஹே ராம்' படத்துக்காக உழைத்திருந்தது.

அதுல் குல்கர்னி
அதுல் குல்கர்னி

ஒரே நேரத்தில் தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவானது `ஹே ராம்.' ஷாருக்கான் தொடங்கி படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் சொந்தக் குரலில் பேசி நடித்திருந்தார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், சம்பளம் ஏதும் பெறாமல் நடித்துக்கொடுத்தார். ஶ்ரீராம் அப்யன்கராக நடிக்க பிரபல இந்தி நடிகர் மோகன் கோகலேதான் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் படப்பிடிப்புகாக சென்னை வந்த இடத்தில் மாரடைப்பால் மறைய, அதுல் குல்கர்னி ஒப்பந்தமானார். அவரே குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதும் வென்றார்.

படத்தில் வல்லபபாய் படேலின் மகளாக முதன்முதலில் திரையில் தோன்றியிருப்பார் ஸ்ருதி ஹாசன். படத்தின் இறுதியில் காந்தியின் கொள்ளுப்பேரனாக வருபவர் உண்மையிலேயே காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி. அபர்னாவைக் கொல்லும் அல்டாஃப் டைலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஷதாப் கான் `விக்ரம்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த அம்ஜத் கானின் மகன். பிரபல பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக்கும் படத்தில் நடித்திருக்கிறார். பின்னர், அது படத்திலிருந்து நீக்கபட்டுவிட்டது.

துஷார் காந்தி  ( வலதுபுறம் )
துஷார் காந்தி ( வலதுபுறம் )

`ஹே ராம்' படத்தின் பாடல்கள் பலருக்கும் ஃபேவரைட். முதலில் இப்படத்துக்கு இசையமைத்தது வயலின் கலைஞரான எல்.சுப்ரமணியம். ஆஸ்கருக்காக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் விருதுக்கு நாமினேட்டான `சலாம் பாம்பே' எனும் இந்திப் படத்துக்கு இசையமைத்தவர். பிறகு, எல்.சுப்ரமணியத்துக்கும் கமலுக்கும் இடையே சம்பள ரீதியாகக் கருத்து வேறுபாடு ஏற்படவே, இளையராஜாவை அணுகினார் கமல்.

படத்துக்காக ரீரிக்கார்டிங்கை ஹங்கேரியின் பூடாபெஸ்ட் சிம்பனியைக் கொண்டு அமைத்திருப்பார் இளையராஜா. வெளிநாட்டு இசைக்குழுவினரைக் கொண்டு இவ்வாறு ரிக்கார்டிங் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் `ஹே ராம்'தான். படத்தில் வரும் `இசையில் தொடங்குதம்மா’ பாடலுக்கு இளையராஜாதான் முதலில் ஐடியா கொடுத்திருக்கிறார். கமல் அதில் பெரிதாய் ஆர்வம் காட்டாமல்போக, வற்புறுத்தி அப்பாடலை இணைத்திருக்கிறார் இளையராஜா.

ஹோட்டல் மெரினா
ஹோட்டல் மெரினா

காந்தியைக் கொல்ல முயலும் சாகேத் ராம் கதாபாத்திரத்தின் மனநிலையை முழுதாக உள்வாங்கிக்கொள்ள காந்தியைக் கொல்வதற்கு முன் டெல்லியில் கோட்சே தங்கிய ரேடிசன் புளூ மெரினா ஹோட்டலில் (முந்தைய ஹோட்டல் மெரினா) தங்கினாராம் கமல். படத்தில் நாதுராம் கோட்சே அணிந்திருந்த ஆடை, அதன் வண்ணம் முதற்கொண்டு அத்தனை டீடெயிலிங் காட்டியிருப்பார்கள்.

மகாத்மா காந்தியில் தொடங்கி அகழ்வாராய்ச்சியாளர் மார்டிமர் வீலர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுராவர்தி வரை, அந்தந்தக் கதாபாத்திரங்களுக்கு உருவ ஒற்றுமைக் கொண்ட நடிகர்களை நடிக்க செய்திருப்பார் கமல். நேரடி நடவடிக்கை நாள், நவகாளிப் படுகொலைகள், காந்தி படுகொலை என உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை, திரைக்கதையில் நேர்த்தியாகக் கோத்திருப்பார்.

மார்டிமர் வில்லர் பாத்திரம்
மார்டிமர் வில்லர் பாத்திரம்

`ஹே ராம்' தெலுங்கு வெர்ஷனுக்காகக் கமலுக்கு டப்பிங் செய்தவர் பாடகர் மனோ. ஆனால், அம்மொழியில் இன்னும் வெளியாகவில்லை. கூடவே ஆங்கிலத்தில் `the confessions of assassin’ என்ற பெயரில் வெளியிட 2004-ல் வேலையைத் தொடங்கினார்கள். ஆனால், அதுவும் நடக்காமல் போனது. படத்தில், ஓவியர் ஆதிமூலம் வரைந்த காந்தியின் ஓவியம், சாகேத்தின் கைவினைக் கூடத்தில் மாட்டியிருக்கும். உண்மையில், படத்தில் கதை நிகழும் ஆண்டுகளுக்குப் பிந்தைய ஆண்டான 1969-ல்தான் அந்த ஓவியம் வரையப்பட்டது.