Published:Updated:

Exclusive: "நாம ஜெயிச்சுட்டோம் மாறா...!" - 5 தேசிய விருதுகள் குறித்து சுதா கொங்கரா நெகிழ்ச்சி

சுதா கொங்கரா - சூர்யா

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து சுதா கொங்கரா விகடனிற்கு பேசியதுபோது, "நாம ஜெயிச்சுட்டோம் மாறா..." என்று மிகவும் மகிழ்ச்சியாகக் கூறினார்.

Exclusive: "நாம ஜெயிச்சுட்டோம் மாறா...!" - 5 தேசிய விருதுகள் குறித்து சுதா கொங்கரா நெகிழ்ச்சி

இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து சுதா கொங்கரா விகடனிற்கு பேசியதுபோது, "நாம ஜெயிச்சுட்டோம் மாறா..." என்று மிகவும் மகிழ்ச்சியாகக் கூறினார்.

Published:Updated:
சுதா கொங்கரா - சூர்யா

68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. அதில் சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா ஆகியத் தமிழ் திரைப்படங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. அதிலும் குறிப்பாக சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது சூரரைப் போற்று திரைப்படம். இந்த மகிழ்ச்சியானத் தருணம் குறித்து சுதா கொங்கரா விகடனிற்கு பேசியதுபோது, "நாம ஜெயிச்சுட்டோம் மாறா..." என்று மிகவும் சந்தோசமாகக் கூறினார்.

இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா

"நான் இதை எக்ஸ்பெட் பண்ணல. சூர்யாவுக்கு விருது கிடைச்சது சந்தோசமா இருக்கு. இது அவரோட கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று யோசிச்சேன். ஆனால் அதையும் தாண்டி இப்படத்தின் வெற்றிக்காக நிறைய பேர் உழைத்தோம். சரியான டீமைத் தேர்வு செய்து நடிக்க வைச்சிருக்கேன் அதுக்கான க்ரெடடிட்சை மட்டும் தான் நான் எடுத்துப்பேன். அதிலையும் குறிப்பாக ஜி.வி பிரகாஷ் குமாருக்கு ஏற்கெனவே பல படத்திற்கான பாடலுக்காக விருதுகள் கிடைச்சிருக்கனும், ஆனா கிடைக்கல. இருந்தாலும் இப்போ என்னோட படத்திற்கு கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு." என்றார்.

மேலும், அபர்னா பாலமுரளி பத்தி பேசும்போது "அந்தப் பொண்ணுக்கு தேசிய விருது கிடைச்சது சந்தோஷம். இப்படத்திற்கான கதையை தொடர்ந்து ஒரு மூணு வருசமா எழுதிட்டே இருந்தேன். இது ஒரு சவாலா இருந்துச்சு. இவ்ளோ விருது கிடைச்சிருக்கிறது சந்தோஷமா இருக்கு" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!