சினிமா
Published:Updated:

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

தமிழ் சினிமா
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் சினிமா

ஒரு பையன், தான் விரும்புற ஒரு பொண்ணை நேர்ல பார்த்துப் பேசணும்கறதுக்காக இப்ப பஸ் ஸ்டாண்ட்டுல தவம் கிடக்கற அவசியமில்ல

ஒருகாலத்தில் சொல்லாமலே காதல், பார்க்காமலே காதல் என்று விதவிதமான காதல் படங்களும், ‘காதல் என்பது...’ என்று வினோதமான விளக்கங்களும் வந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில், இப்போது ‘96’, ‘பியார் பிரேமா காதல்’ என்று அத்திபூத்தாற்போலத்தான் காதல் சினிமாக்கள் வெளிவருகின்றன. தமிழ் சினிமாக்களில் ‘காதல்’ குறைந்துவிட்டது ஏன்?

‘`முழுமையாகக் காதலைப் பத்தி மட்டும் பேசும் படங்கள் குறைஞ்சது உண்மைதான்” என்றபடி ஆரம்பிக்கிறார் ‘காதல் கோட்டை’ இயக்குநர் அகத்தியன்.

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

“எண்பது, தொண்ணூறு காலகட்ட காதலர்கள் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுப் பேசிக்கறதோ, கடிதம் எழுதுறதோ, அவங்களுடைய சந்திப்புக்கு இடையூறா இருக்கற சூழல்களோ இப்ப கிடையவே கிடையாது. இப்ப காதலின் தன்மை மாறிப்போச்சு. ஒரு அறையில உட்காந்துட்டே ஒரு பையன்கிட்டேயோ இல்ல ஒரு பொண்ணுகிட்டேயோ எல்லாத்தையும் பேசி முடிவு செய்ய முடியுது.

ஒரு பையன், தான் விரும்புற ஒரு பொண்ணை நேர்ல பார்த்துப் பேசணும்கறதுக்காக இப்ப பஸ் ஸ்டாண்ட்டுல தவம் கிடக்கற அவசியமில்ல. வாட்ஸ் அப்பிலேயே பேசிக்கற வசதி வந்திடுச்சு. காதலின் தன்மையே மாறியதும், உருகி உருகிக் காதலிக்கும் படங்களுக்கு அவசியமில்லாமப் போயிருக்கலாம். ஆனா இப்பவும் இந்தச் சூழலுக்கு ஏற்ப காதல் படங்கள் கொடுத்தால் மக்கள் ரசிக்கத் தயாராத்தான் இருக்காங்க...’’ என்கிறார்.

‘`கடந்த பதினைந்து வருஷமாகவே சினிமாவுல மென்மையான மனித உணர்வுகள் பதிவுசெய்யப்படலை...’’ எனத் தன் கருத்துகளை முன்வைக்கிறார் இயக்குநர் கதிர். ‘இதயம்’, ‘காதல் தேசம்’, ‘காதலர் தினம்’ என எவர்கிரீன் படங்களைக் கொடுத்தவர்.

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

‘`தயாரிப்பாளர்களும் நடிகர்களும் வன்முறைகளும் ஆக்‌ஷனுமான கதைகளைத்தான் விரும்புறாங்க” என்றவர், “மக்கள் ரசனைகள் அப்படியேதான் இருக்கும். அதுக்கேத்த மாதிரியான காதல் படங்கள் வெளியானால் மக்கள் வரவேற்பாங்க. எல்லாக் காலகட்டங்களிலும் நூறு வகையான காதல்கள் இருந்திருக்கு. இப்பவும் அவ்ளோ வகை காதல்கள் இருக்கு. எண்பதுகள்ல கடிதம் எழுதுனோம். இப்ப மொபைல் வந்திடுச்சு. டைப் பண்றோம். ஆனா, அந்தக் காதல் அப்படியேதானே இருக்கு! காதல் உணர்வுகள் ஒண்ணுதானே! அதனால காதல் எல்லாக் காலமும் இருந்துட்டேதான் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார்.

‘காதல்’ திரைப்படத்தின் மூலம் காதல், மதுரை வாழ்வியல், சென்னையின் நகரக்கலாசாரம், சாதிவெறி ஆகியவற்றை அழகியலுடன் சித்திரித்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் விரிவாகவே அலசுகிறார்.

‘`உலக சினிமாவை ரசிக்கறவங்களால காதல் படங்களின்மீது கடும் விமர்சனங்கள் வர ஆரம்பிச்சிடுச்சுன்னு நினைக்கறேன்.. ஏன்னா அவங்க நிறைய ஜானர்கள்ல விதவிதமான படங்கள் பார்க்கறாங்க. இங்கே அவங்க ஏதாவது ஒரு காதல் படத்தைப் பார்த்தால்... ‘எப்பப் பார்த்தாலும் காதல் படங்கள்தானா?’ன்னு விமர்சனங்களை வீசிடுறாங்க.

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

அப்பெல்லாம் புரொடக்‌ஷன் கம்பெனி பக்கம் கதையோடு போனாலே, ‘அருமையான லவ்... நிறைய பாடல்கள் வச்சு ஒரு கதை இருந்தா சொல்லுங்க’ன்னு விரும்பிக் கேட்ட காலம் உண்டு. ஆனால் இப்போ காதலைத் தாண்டி வேற வேற ஜானர்களில் படங்கள் வர ஆரம்பிச்சிடுச்சு. இது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.

ஆனாலும், காதல் சரியான முறையில எடுக்கப்படும்போது, அதை மக்கள் வரவேற்பாங்க. சேருறது மட்டும் காதல் இல்ல, ஒருத்தருக்கு ஒருத்தர் மனப்பூர்வமா பேசிப் பிரியறதும்கூட காதல்தான். காதலை அதன் மெல்லிய உணர்வு கெடாமல் கொடுக்கும்போது எல்லாக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்னு நினைக்கறேன். ஓ.டி.டி வந்த பிறகு தியேட்டர்கள்ல கூட்டம் குறைஞ்சிட்டுதுன்னு சொல்றது எவ்வளவு உண்மையோ அதைப்போல, நல்ல படத்தை தியேட்டருக்குக் கொண்டு வந்திருக்கலாமேன்னு சொல்லறதும் உண்மை. அதனாலதான் மீண்டும் ஒரு லவ் சப்ஜெக்ட் பண்ணிட்டிருக்கேன்” என்கிறார் பாலாஜி சக்திவேல்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு ராமையும் ஜானுவையும் வைத்து உருகும் காதல் படம் தந்த இயக்குநர் சி.பிரேம் குமார் தற்கால எதார்த்தத்தை முன்வைக்கிறார்.

‘`முரளி சாரோட ‘இதயம்’ பாக்கும்போது நான் ரொம்ப சின்னப் பையன். ‘இதயம்’ல முரளிக்கு வந்த ஒரு வலியை அந்த வயசில நானும் உணர்ந்திருக்கேன். ஏன்னா, அப்பெல்லாம் நாம ஒரு பொண்ணுகிட்ட பேசினாலே வீட்டுக்குப் புகார் போயிடும். தொண்ணூறுகள்ல ஒரு பொண்ணை லவ் பண்ணிட்டு, இன்னொரு பொண்ணை லவ் பண்ண முடியாது. ஒரு பொண்ணை மனசார நினைச்சு, அதுக்குக் கல்யாணமானாலும்கூட அந்தக் காதலும் மரியாதையும் குறையவே குறையாது. இப்ப அதெல்லாம் மாறிடுச்சு.

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

முன்னாடி காலங்கள்ல காதல் எட்டாக்கனி. ஆனா, இப்ப ரொம்ப எளிதாகிடுச்சு. காதல் திருமணங்கள் நிறையவே நடக்குது. ஸோ, சாதாரண விஷயங்கள படமா எடுக்கும்போது சுவாரசியமிருக்காதேன்னு தவிர்த்திருக்கலாம். அப்ப கல்லூரியில் படிக்கறவங்கள கணக்கெடுத்தா, ஒரு வகுப்பில் உள்ள முப்பது பேர்ல ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும்தான் வெற்றிகரமா காதலிச்சு, திருமணம் வரை போயிருப்பாங்க. இப்ப ஒரு பொண்ணே தன் வீட்டுல, ‘என் பாய் ஃப்ரெண்டோடு பிரேக் அப் ஆகிடுச்சு’ன்னு அவ அப்பாகிட்டேயோ, அண்ணன்கிட்டேயோ தைரியமா சொல்ல முடியுது. அது அவங்கவங்க மனப்பக்குவத்தைப் பொறுத்தது’’ என்கிறார் பிரேம் குமார்.

‘`இப்ப உள்ள ஹீரோக்கள் சீக்கிரமே ஆக்‌ஷன் படங்கள் பண்ணணும்னு விரும்ப ஆரம்பிக்கறது ஒரு காரணமா இருக்கலாம்’’ என்று திரையுலக நிலவரத்திலிருந்து தன் கோணத்தை முன்வைக்கிறார் `பியார் பிரேமா காதல்’ இயக்குநர் இளன்.

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?
தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

‘`சமீபத்துல விஜய் சாரைச் சந்திச்சேன். அவர்கிட்ட ‘நீங்க இப்ப ஏன் சார் லவ் ஸ்டோரி பண்றதில்லை’ன்னு கேட்டேன். சிரிச்சுக்கிட்டே அவர், ‘நான் இப்ப லவ் பண்ணினா யார் பார்ப்பாங்க?’ன்னு தன்னடக்கமா கேட்டார். நீங்க லவ் ஸ்டோரி பண்ணினா எல்லாரும் பார்க்க ரெடியா இருக்காங்கன்னு சொன்னேன். உடனே அவர், ‘என் வயசுக்கேத்த மாதிரி லவ் ஸ்டோரீஸ் வந்தா பண்ணலாம்’னு சொல்லியிருக்கார். ஸோ, ஹீரோக்கள் லவ் ஸ்டோரி பண்ணினா அது யதார்த்தமான ஸ்டோரியா இருக்கணும்னு விரும்புறாங்க.

தமிழ் சினிமா தவிர்க்கிறதா காதலை?

இன்னொரு விஷயம், இங்கேயும் லவ் ஸ்டோரி பண்றதுக்கான அந்த வயசுக்கான ஹீரோக்கள் குறைவா இருக்காங்க. ஒரு அழகான காதல் கதையை எழுதி முடிச்சதும் அதை யார்கிட்டேயெல்லாம் சொல்லலாம்னு யோசிச்சா, நமக்கு ஆப்ஷனே குறைவா இருக்கு! அதுகூட ஒரு காரணமா இருக்கலாம்’’ என்கிறார்.

அரசியல் சினிமாக்கள், பேய்ப்படங்கள், பிளாக் ஹியூமர் படங்கள் என்று வெகுதூரம் வந்துவிட்ட தமிழ் சினிமா மீண்டும் காதலை ஏந்துமா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.