இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை (30.09.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது. இதனிடையே புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது, சமீபத்தில் நான் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் 150 நாட்களில் முடித்துவிட்டோம் என்றேன். நான் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நான் பிராங்க் செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவர் திரும்பத் திரும்ப 150 நாட்களில் உண்மையிலேயே படம் முடிந்து விட்டதா என்று கேட்டபோது உண்மைதான் 150 நாட்களில் முடித்துவிட்டோம் என்றேன். அதன்பின்னர் அதைக்கேட்ட ராஜமெளலி தயவு செய்து அதை சொல்லாதே எனக்கு பயமாக இருக்கிறது என்றார். ஏனென்றால் பாகுபலி படத்தின் 2 பாகங்களை முடிக்க எனக்கு 5 வருடங்கள் ஆனது என்றார். இதை எப்படி உங்களால் செய்ய முடிந்தது, எப்படியெல்லாம் நீங்கள் வேலை செய்தீர்கள் போன்ற எல்லா விஷயங்களையும் மணிரத்னத்திடம் கேட்டு தெரிந்து கொண்டார். அப்படியான மாஸ்டர்தான் மணிரத்னம்” என்று ஜெயம் ரவி கூறியிருக்கிறார்.