Published:Updated:

Thunivu: "`என்னைப் பத்தி மத்தவங்க சொன்னதைத் தள்ளி வச்சிடுங்க'ன்னு அஜித் சொன்னார்!"- சுப்ரீம் சுந்தர்

'துணிவு' ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்

"படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அஜித் சாரைச் சந்திச்சேன். நாங்க எல்லாரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். நைட் டின்னரின் போது அந்தச் சந்திப்பு நடந்தது. ஸ்டன்ட் காட்சிகள் பற்றிப் பேசுவார்னுதான் நினைச்சேன். ஆனா..."- சுப்ரீம் சுந்தர்

Thunivu: "`என்னைப் பத்தி மத்தவங்க சொன்னதைத் தள்ளி வச்சிடுங்க'ன்னு அஜித் சொன்னார்!"- சுப்ரீம் சுந்தர்

"படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அஜித் சாரைச் சந்திச்சேன். நாங்க எல்லாரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். நைட் டின்னரின் போது அந்தச் சந்திப்பு நடந்தது. ஸ்டன்ட் காட்சிகள் பற்றிப் பேசுவார்னுதான் நினைச்சேன். ஆனா..."- சுப்ரீம் சுந்தர்

Published:Updated:
'துணிவு' ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்
`துணிவு' படத்தின் சண்டைக் காட்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பால் படு உற்சாகமாக இருக்கிறார் ஸ்டன்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர். படத்தின் சிங்கிள் டேக் சண்டைக் காட்சிகள், கேமரா ஒர்க் எனப் பல விஷயங்கள் பேசப்பட, தமிழில் தன்னுடைய கம்பேக்கை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் சுப்ரீம் சுந்தர். அவரிடம் படத்தின் அனுபவங்கள் குறித்துப் பேசியதிலிருந்து...

உங்களுக்கும் இயக்குநர் அ.வினோத்துக்கும் எப்படிப் பழக்கம்? 'துணிவு' வாய்ப்பு எப்படி வந்தது?

"'கோலி சோடா' படத்துல வேலை பார்த்த நேரத்துல இயக்குநர் அ.வினோத் அறிமுகமானார். அப்போதிருந்தே எங்களுக்குள்ள நிறைய உரையாடல்கள் நடக்கும். அவரோட ஸ்கிரிப்ட் பத்தியெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பார். 'சதுரங்க வேட்டை' படத்தில் ஸ்டன்ட்டுக்குப் பெரிய ஸ்கோப் இல்லை. இருந்த ஒண்ணு, ரெண்டு ஸ்டன்ட் காட்சிகளை வினோத்தே கொரியோ பண்ணிட்டார். அந்தப் படத்துக்கு பட்ஜெட்டும் ரொம்பக் குறைவாத்தான் இருந்தது.

சுப்ரீம் சுந்தர்
சுப்ரீம் சுந்தர்

அதுக்கு அப்புறம் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் போதும் வினோத் ஸ்கிரிப்ட் சொன்னார். படத்துக்கு நான் ஸ்டன்ட்ஸ் பண்றதா இருந்தது. அப்புறம் சில காரணங்களால் அது நடக்கல. இப்படியிருந்த நேரத்துல கண்டிப்பா நானும் வினோத்தும் ஒரு படத்துக்காக ஒண்ணு சேருவோம்ன்னு நான் நம்பினேன். கடைசில 'துணிவு' படத்துல அது நடந்துருச்சு!"

ஸ்டன்ட்ஸ் சிறப்பா வர, கேமராமேன் நிரவ் ஷா, ஆர்ட் டைரக்டர் மிலன் இவங்களோட பங்களிப்பும் ரொம்ப முக்கியமானது. ஒரு டீமா நீங்க எல்லாரும் சேர்ந்து ஒர்க் பண்ணின அனுபவம் எப்படியிருந்தது?

"'துணிவு' படத்துக்காக வினோத் என்னை மீட் பண்ணிப் பேசினார். ஸ்கிரிப்ட் படிச்சேன். ஸ்டன்ட்டுக்குப் படத்தில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த புராஜெக்ட் பத்தி யார்கிட்டயும் வெளியே சொல்ல வேண்டாம்ன்னு சொன்னார். என்னுடைய மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்கள்கிட்டக் கூடச் சொல்லாம அமைதியா இருந்தேன். அப்புறம் ஹைதராபாத்ல படத்தோட ஷூட்டிங்குக்காக செட் வேலைகள் நடந்துட்டு இருந்துச்சு. செட்டுக்கு முதல்ல போய் பார்த்தேன். அப்போதிருந்தே படத்தோட கேமராமேன் நீரவ் ஷா, ஆர்ட் டைரக்டர் மிலன், நாங்க மூணு பேரும் நிறைய டிஸ்கஷன் பண்ணுவோம். எந்த இடத்துல ஸ்டன்ட் காட்சிகள் வைக்கலாம்ன்னு நான் முடிவு பண்ணி மிலன்கிட்ட சொல்லுவேன். அதுக்கு ஏத்த மாதிரி அவர் செட் அமைத்துக் கொடுத்தார்."

சூப்ரீம் சுந்தர்
சூப்ரீம் சுந்தர்

'டார்க் டெவில்' அஜித்தை முதன் முதலா எப்பப் பார்த்தீங்க? படம் தொடர்பா அவர் உங்ககிட்ட சொன்ன விஷயம் என்ன?

"படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போறதுக்கு முன்னாடி அஜித் சார் மீட் பண்ணினார். நாங்க எல்லாரும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். நைட் டின்னரின் போது அந்தச் சந்திப்பு நடந்தது. ஸ்டன்ட் காட்சிகள் பத்திப் பேசுவார்னு நினைச்சேன். ஆனா, பேமிலி பத்திப் பேசிட்டு, எனக்குச் சாப்பாடு பரிமாறிட்டு நலம் விசாரிச்சுட்டு அவர் கிளம்பிட்டார். அப்பவே இந்தப் படத்துக்காக 15 கிலோ குறைச்சிருந்தார். முதல் முறையா பார்த்தப்போ அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. ஒரு ஆக்‌ஷன் ஹீரோவா பக்கவா ரெடியாகி வந்து நின்னார்ன்னுதான் சொல்லணும்.

அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல மீட் பண்ணுறப்போ, 'மாஸ்டர், என்னைப் பற்றி நிறைய பேர் நிறைய பேசியிருக்காங்க. அதெல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சுடுங்க. ஒரு புதுமுக நடிகரை ட்ரீட் பண்ற மாதிரி எனக்கு வேலை கொடுங்க'ன்னு சொன்னார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. படத்தில் யூஸ் பண்ண வெடிகுண்டுகள் அத்தனையும் ஒரிஜினல். இதை ஷூட்டிங் ஸ்பாட்ல பயன்படுத்தவே கொஞ்சம் பயம் இருந்தது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும் இடம் அது. அதனால், பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அஜித் சார் அதுல ரொம்பக் கவனமா இருந்தார். ஒவ்வொரு பைட் சீன் எடுக்கறதுக்கு முன்னாடியும் நிறைய ரிகர்சல்ஸ் நடந்துக்கிட்டே இருக்கும். அது எல்லாத்துலயும் அஜித் தவறாம கலந்துகிட்டார்."

மலையாளத்துல ஒரு பெரிய ரவுண்டு வந்துட்டீங்க. அப்பவும் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்காதப்ப எப்படி உணர்ந்தீங்க?

"மலையாளத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மம்மூட்டி, செம்பன் வினோத், டொவினோ தாமஸ்ன்னு எல்லா ஹீரோக்கள் படத்திலும் வேலை செஞ்சிருக்கேன். மலையாளத்தில் ரிலீஸான 'அய்யப்பனும் கோஷியும்' படத்துக்காகத் தேசிய விருது வாங்கினேன். 'ஜல்லிக்கட்டு' படத்தின் ஸ்டன்ட் எல்லார் மத்தியிலும் பயங்கரமா பேசப்பட்டுச்சு. ஆனா, தமிழ்ல பெரிய வாய்ப்பு வரலன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்தப்போதான் 'துணிவு' படம் அமைஞ்சது. இது நிச்சயமா ஒரு பெரிய பிரேக்த்ரூன்னு புரிஞ்சுக்கிட்டேன்!"

சுப்ரீம் சுந்தர்
சுப்ரீம் சுந்தர்

'துணிவு' படத்துல எந்தச் சண்டைக் காட்சி உங்களுக்கு ரொம்ப சவாலா இருந்தது?

"இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ்க்கு மட்டும் ரீ-ரைட்டிங் பிராசஸ் இருந்துகிட்டே இருந்தது. ஏன்னா, படம் முழுக்க பேங்க்ல நடக்குற மாதிரி இருக்கும். இதனால, க்ளைமாக்ஸ் காட்சியை பேங்குக்கு வெளியே வெச்ச நல்லாயிருக்கும்ன்னு வினோத் பீல் பண்ணினார்.

அதே சமயம், படத்தில் 360 டிகிரி சண்டைக் காட்சிகள் எல்லோராலும் பேசப்பட்டன. ரொம்ப கஷ்டமான ஃபைட் சீன் அது. கேமரா ரோலிங்ல சுத்திக்கிட்டே இருக்கும். ஸ்டன்ட் பண்றவங்க எல்லாரும் மார்க்குல சரியா நின்னுட்டு இருக்கணும். யாராவது ஒரு ஸ்டெப் மார்க்கை விட்டு வெளியே வந்துட்டாலும் மறுபடியும் முதல்ல இருந்துதான் எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணனும். கிட்டத்தட்ட 13வது டேக்லதான் எல்லாமே ஓகே ஆச்சு. இந்த ஃபைட் சீன் எடுக்கும்போது அஜித் சார் ரொம்பவே கஷ்டப்பட்டார். ஆனா, இன்னைக்கு 'துணிவு' படத்தோட ஸ்டன்ட் நல்லாயிருக்குன்னு எல்லாரும் சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு."