சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

SHAREபட்டா பரம்பரை: அப்பா இங்கே குழந்தையாகிறார்!

குணசேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
குணசேகர்

எல்லாத்தையும் இழந்துட்டு அடுத்து என்ன பண்ணன்னு தெரியாத நிலைமைக்கு வந்துட்டேன். என் மனைவி தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கிறாங்க

‘என் 58 வயசு வரைக்குமே தோல்வியைத்தான் அனுபவிச்சிருக்கேன். இது கடைசியா எனக்குக் கிடைச்ச வாய்ப்பு, சரியா பயன்படுத்திக்கணும்னு நினைச்சேன்!’ எனப் புன்னகைக்கிறார் குணசேகர்.

‘அறுபது வயசுல இதெல்லாம் இவர் எப்படிப் பண்றார்’னு பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் யூடியூப் தளம் ‘Dad’s Life.’ யூடியூபராக மாறிய கதை குறித்து குணசேகர் நம்மிடம் பகிரத் தொடங்கினார்.

“சொந்த வீடு, காருன்னு எல்லா வசதியும் என்கிட்ட இருந்துச்சு. பெட்ரோல் பங்க் நடத்திட்டிருந்தேன். பலருக்கும் கடன் கொடுத்து ஏமாந்து ஒருகட்டத்துல பங்க்கையும் விக்கிற நிலைமை வந்துடுச்சு. எல்லாத்தையும் இழந்துட்டு அடுத்து என்ன பண்ணன்னு தெரியாத நிலைமைக்கு வந்துட்டேன். என் மனைவி தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கிறாங்க. அவங்க சம்பளத்தை வெச்சுதான் குடும்பத்தை நடத்திட்டிருந்தோம். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பேரோட படிப்புச்செலவையும் என் மனைவிதான் பார்த்துக்கிட்டாங்க. அடுத்து என்ன பண்ணப்போறோம்னு ரொம்பவே உடைஞ்சு போயிருந்தேன். என் மனைவி கொடுத்த தெம்பால் மட்டுமே அதிலிருந்து மீண்டு வந்தேன்.

SHAREபட்டா பரம்பரை: அப்பா இங்கே குழந்தையாகிறார்!
SHAREபட்டா பரம்பரை: அப்பா இங்கே குழந்தையாகிறார்!

கடன் வாங்கி ஒரு போட்டோ ஸ்டூடியோ ஆரம்பிச்சேன். அதுல ஓரளவுக்கு லாபம் கிடைச்சது. 2019-ல் ஸ்டூடியோவை காலி பண்ணச் சொல்லிட்டாங்க. அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்குள்ளே லாக்டௌனும் வந்துடுச்சு. மறுபடி வீட்டுக்குள்ளேயே முடங்கற நிலைமை வந்துச்சு. அப்பதான் என் பையன் பாலாஜி, யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாமான்னு கேட்டான்” என்றதும், அவரின் மகன் சுரேஷ் பாலாஜி தொடர்ந்தார்.

“எப்பவும் அப்பா ஜாலியா ஒரு ஃப்ரெண்ட் மாதிரிதான் என்கிட்ட பழகுவாங்க. அவங்களோட இயல்பைப் படம் பிடிக்க நினைச்சேன். அப்பாவை ஜாலியா மறுபடி பார்க்கணும்னு நினைச்சேன். அதுக்காகவே 2019-ல் சேனல் ஆரம்பிச்சேன். என் அப்பாவோட வாழ்க்கையைச் சொல்ற தனால ‘Dad’s Life’னு பெயர் முடிவு பண்ணினேன். அப்ப பண்ற விஷயங்களை நானே வீடியோ எடுத்து அதை எடிட் பண்ணி அப்லோடு பண்ணுவேன். படிப்படியா சேனல் ரீச் ஆச்சு” என்றதும் குணசேகர் தொடர்ந்தார்.

“கேமரா பின்னாடி நின்னு பழக்கப்பட்ட எனக்கு முன்னாடி நின்னு பேசச் சொல்லும்போது ரொம்பப் பதற்றமாகிடுச்சு. அவன் சொல்லிக் கொடுத்த மாதிரி படிப்படியா பேசக் கத்துக்கிட்டேன். கொஞ்ச கொஞ்சமா நான் பண்ணின வீடியோக்களும் ரீச் ஆக ஆரம்பிச்சது.

SHAREபட்டா பரம்பரை: அப்பா இங்கே குழந்தையாகிறார்!
SHAREபட்டா பரம்பரை: அப்பா இங்கே குழந்தையாகிறார்!

ஒருமுறை ஸ்கூபா டைவிங் போயிருந்தோம். எனக்கு மனசுக்குள்ள பயம். இருந்தாலும் நம்ம வயசில இது முடியாதுன்னு பலரும் நினைக்கிறாங்க. ஆனா, தன்னம்பிக்கை இருந்தா எந்த வயசிலேயும் சாதிக்கலாம்னு நாம நிரூபிச்சுக் காட்டணுங்கிற எண்ணம் இருந்துச்சு. அதே மாதிரி அதிக நேரம் ஸ்கூபா டைவிங் பண்ணினேன். அந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சது. நானும் சரி, என் பையனும் சரி, நல்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் இருப்போம். அவன் சொல்றதை ஏன் கேட்கணும்னு ஒருநாளும் நான் நினைச்சதில்லை. எங்களுக்குள்ள எப்பவுமே எந்த ஈகோவும் இருந்ததில்லை. என் மனைவியும் மகளும் இதுவரை என்னை நேரடியா பாராட்டினதேயில்லை. அவங்க பாராட்டுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன். எனக்குள்ள இருந்த குழந்தைத்தன்மையை ரசிச்சு அதுக்கு உயிர் கொடுத்தி ருக்கான்னு எனக்கு ரொம் பவே பெருமை” என்றவரிடம், மறக்கமுடியாத அனுபவம் குறித்துக் கேட்டோம்.

SHAREபட்டா பரம்பரை: அப்பா இங்கே குழந்தையாகிறார்!

“ஒரு முறை கடலில் சர்ஃபிங் பண்ணப் போயிருந் தோம். வீடியோ எடுத்துட்டு இருக்கும்போது கேமராவும் லென்சும் கடலில் போயிடுச்சு. அதோட மதிப்பு முப்பதாயிரம் ரூபாய். அதிலிருந்து எங்கே போனாலும் கேமரா மேலேயும் ஒரு கண்ணு வச்சிப்பேன்.

குழந்தைங்க மத்தியில் ரீச் ஆனது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. வெளிநாட்டில் இருக்கிற ஒரு சப்ஸ்கிரைபர் எனக்கு வாட்ச், டி-ஷர்ட்லாம் மாசா மாசம் கிஃப்ட்டா அனுப்பி வைப்பார். `குடும்பத்தை விட்டுட்டு இங்கே வேலைக்காகத் தனியா இருக்கேன் சார். உங்க வீடியோக்கள், என் குடும்பத்தோடு இருக்கிற மாதிரி உணர்வைக் கொடுக்குது’ன்னு அடிக்கடி சொல்லுவார். ”பேசும்போதே நெகிழ்கிறார் குணசேகர்.