கட்டுரைகள்
Published:Updated:

நடிப்பிற்கு லீவு விடப்போறேன்! - `டாணாக்காரன்' தமிழ் திட்டம்

இயக்குநர் தமிழ்
பிரீமியம் ஸ்டோரி
News
இயக்குநர் தமிழ்

சில கதைகளைக் கேட்கும்போதே, கண்டிப்பா நடிச்சிடணும்னு தோணிடும். சில இயக்குநர்கள் கூப்பிடும்போது போய் நடிச்சிடுவேன். வெற்றியண்ணன்கிட்ட நாம போய் நின்னா போதும், அவரே நடிக்க வச்சிடுவார்.

`போலீஸ் கேரக்டரா... கூப்பிடு தமிழை..!' என கோடம்பாக்கமே சொல்ல ஆரம்பித்துவிட்டதுபோல... தொடர்ச்சியாக பல படங்களிலும் போலீஸாக நடித்து வருகிறார். சமீபத்திய `விடுதலை'யில் மனிதாபிமான போலீஸ் அதிகாரியாக ஸ்கோர் செய்திருப்பவரிடம் பேசினேன்.

நடிப்பில் தீவிரமா இறங்கிட்டீங்க..?

``நான் நடிகரானதே விபத்துதான். வெற்றியண்ணன்கிட்ட (வெற்றிமாறன்) உதவி இயக்குநரா சேர்ந்த முதல்நாள்லேயே எனக்கொரு கேரக்டர் கொடுத்து நடிக்கச் சொல்லிட்டார். ஆனா, சில காரணங்களால நடிக்க முடியாமல் போனது `விசாரணை'யிலும் நடிக்கக் கேட்டார். அடுத்து `வடசென்னை'யிலும் நடிக்க வச்சார். ஆனா, பாதியிலேயே ஓடிட்டேன். அவர் எழுதுற கதைகள்ல எனக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கும். `ஜெய்பீம்' படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் நிறைய தேடி வர ஆரம்பிச்சிடுச்சு. தொடர்ந்து புதுப்புது கதாபாத்திரங்களும் வருது. புதுப்புது இயக்குநர்களோட வேலை செய்யறதால, நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்குது.''

இயக்குநர் தமிழ் எப்படி இருக்கார்? என்ன பண்ணுறார்?

``நல்லா இருக்கார். அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டார். இப்ப கையிலிருக்கும் படங்களை முடிச்சுக் கொடுத்துட்டு நடிப்பிற்கு கொஞ்சம் விடுமுறை விடலாம்னு தோணுது. தீவிரமா எழுத ஆரம்பிச்சிட்டேன். நிச்சயம் இந்த வருஷ கடைசியில இயக்குநரா அடுத்த படத்தை ஆரம்பிச்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு. அடுத்து இயக்குறது கேங்ஸ்டர் படமா இருக்கும்னு விகடன் நேர்காணலிலேயே சொல்லியிருக்கேன்.''

இயக்குநர் தமிழ்
இயக்குநர் தமிழ்

நடிகரா, கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கறதுல எந்த அளவுகோல் வச்சிருக்கீங்க..?

``சில கதைகளைக் கேட்கும்போதே, கண்டிப்பா நடிச்சிடணும்னு தோணிடும். சில இயக்குநர்கள் கூப்பிடும்போது போய் நடிச்சிடுவேன். வெற்றியண்ணன்கிட்ட நாம போய் நின்னா போதும், அவரே நடிக்க வச்சிடுவார். இதுவரை நான் நடித்த படங்கள்ல கொஞ்சம் ஹோம் வொர்க் பண்ணிட்டு நடிச்ச படம்னா, `ஜெய்பீம்'தான். நல்ல இயக்குநர்கள் படங்கள்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு. சில நல்ல கதைகளை மிஸ் பண்ணினப்ப, வலிக்கும். சமீபத்தில் வெளியான `அயலி'யில் அப்பா ரோலில் நான் நடிச்சிருக்க வேண்டியது. அதை மிஸ் பண்ணினது வருத்தமாகிடுச்சு. தொடர்ச்சியா போலீஸ் கதைள்ல நிறைய நடிச்சதால, இப்ப போலீஸா நடிக்கக் கேட்டாலே, அதை தவிர்க்கறேன். ஆனாலும், இயக்குநரா என் அடுத்தடுத்த படங்கள்ல போலீஸ் கதைகளை எதிர்பார்க்கலாம்.''

இயக்குநர் தமிழ்
இயக்குநர் தமிழ்

சினிமா தவிர எதில் ஆர்வம்?

``அரசியல்ல ஆர்வம் இருக்கு. நம் மண் சார்ந்த, தமிழர் நலன் சார்ந்த அரசியலை உன்னிப்பாக கவனிப்பேன். அவங்களோட தொடர்பிலும் இருப்பேன். ஏதாவது ஆர்ப்பாட்டம், போராட்டங்கள்னாலும் போய் கலந்துக்குவேன்.''

அடுத்து நடிக்கற படங்கள்..?

``ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கிவரும், `காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'ல வில்லனா நடிக்கறேன். இயக்குநர் விஜய் சார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வாலி இயக்கத்தில், `இருள் கொண்ட வானம்'னு ஒரு படம், சந்தானம் சாரோட, `வடக்குப்பட்டி ராமசாமி', வெற்றிமாறன் சார் தயாரிப்பில் கோபிநயினார் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிக்கும் `மனுஷி'ன்னு ஒரு படம்னு கைவசம் படங்கள் இருக்கு!''