Published:Updated:

"இதனால் நான் பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன்!"- பரவும் வதந்திகளால் ஆதங்கப்பட்ட தமன்னா

தமன்னா

"விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் காதல் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்!" - தமன்னா

Published:Updated:

"இதனால் நான் பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன்!"- பரவும் வதந்திகளால் ஆதங்கப்பட்ட தமன்னா

"விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் காதல் வதந்தியைப் பரப்பி வருகின்றனர்!" - தமன்னா

தமன்னா

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு இவர் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. தமன்னா, விஜய் வர்மாவுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தமன்னா இது தொடர்பாகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தமன்னா
தமன்னா

அதில், “விஜய் வர்மாவுடன் ஒரு படம் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் இதுபோன்ற காதல் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதைப் பற்றிக் கூற வேறு எதுவுமில்லை. நடிகர்களை விட நடிகைகளே  இதுபோன்ற திருமண வதந்திகளுக்குள் சிக்குகின்றனர். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நடிகைகள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே பல முறை திருமணம் செய்து  கொண்டதாகச் செய்திகள் வருகின்றன.

தமன்னா, விஜய்  வர்மா
தமன்னா, விஜய் வர்மா

அந்த வகையில் எனக்கு டாக்டர், தொழிலதிபர் என்று பலரைத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் நான் பலமுறை திருமணம் செய்துகொண்டதாக உணர்கிறேன். உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால் எல்லோரும் உற்சாகமாவார்களா, இல்லை இதுவும் வதந்தி என  நினைப்பார்களா என்று தெரியவில்லை!" என்று விளையாட்டாகக் கூறியிருக்கிறார்.