கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!

 சினிமா காமெடி
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா காமெடி

சினிமா காமெடி

தமிழ் சினிமாவில் வந்த சூப்பர் கார், பைக், ஜீப், பஸ், ஆட்டோக்களைப் பற்றித்தான் நாம இப்போ பார்க்கப் போறோம். எல்லாம் செம க்ரிஞ்ச் மெட்டீரியல். வாங்க, வண்டிய ஸ்டார்ட் பண்ணலாம்!

`படிக்காதவன்' ரஜினியோட லட்சுமி அம்பாஸிடர் இருக்கே… இந்த ஃபியட் பத்மினி, பயங்கர வண்டிங்க! அதாவது இந்த வண்டில போதை வஸ்துக்கள் கடத்தினா உடனே உஷாராகி மோப்பம் பிடிச்சிடும். "லெட்சுமி ஸ்டார்ட் ஆகிடு"னு எவ்ளோ முக்கினாலும், செகப்பு லைட்ட எரியவிட்டு ‘கீ கீ’னு கத்தி களவாணிப் பயலக் காட்டிக் கொடுத்துடும். 90-கள்லயே ஆட்டோ பைலட் மோடு, வாய்ஸ் ரெகக்னைசன், ஃப்ராடு டிடெக்டர் கொண்ட கார் வெச்சிருந்தாரு நம்ம ரஜினி. லேட்டஸ்ட் AI கார்கள்லாம் அந்தாண்ட போங்க! அது மட்டுமில்ல, `ராஜாவுக்கு ராஜா நான்டா பாட்டு'ல இந்த வண்டி செங்குத்தா இருக்குற பில்டிங் மேலே ஏறும்; கடல் மேலே ஓடும் பாருங்க! ஃபியட் கம்பெனிக்காரங்களாலேயே இப்படி ஒரு டெக்னாலஜி பண்ண முடியாது! சூப்பர் ஸ்டார் வண்டில… சும்மாவா பின்னே! என்னோட டவுப்ட் என்னன்னா, இதுக்கு லட்சுமின்னு பேரு வெச்சதுக்குப் பதிலா, பத்மினினே பேரு வெச்சிருந்திருக்கலாம்! ஃபியட்டும் பெருமை அடைஞ்சிருப்பாங்க!

தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!
தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!
தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!

`பாட்டி சொல்லைத் தட்டாதே' படத்தில் வர்ற சூப்பர் கார், லெட்சுமிக்கும் ஒருபடி மேலே! சூப்பர் கார் என்றவுடனே இதை ஏதோ ஃபெராரி, புகாட்டி ரேஞ்ச் சூப்பர் கார்னு நினைச்சுட வேணாம்! இது சாதாரண ஃபோக்ஸ்வாகன் பீட்டில் கார்தாங்க! இதை செகண்ட் ஹாண்டில் வாங்கி படத்துக்கு ஏற்றபடி டெக்னிக்கலாக மாற்றியிருந்தாராம், தயாரிப்பாளர் அருணாவோட அப்பா! அதாவது, இந்த வண்டி ஓடும்போது ரெண்டு பார்ட்டா பிரியும். திரும்ப ஒண்ணா சேரும். அது மட்டுமில்ல, காருக்குள்ளே கலர் கலர் பட்டன்கள் நிறைய இருக்கும். அதை அமுக்கினா வண்டி அந்தரத்துல பறக்கும். 'ஆம்பள' விஷாலோட பறக்கும் காருக்கு முன்னோடியே இது சூப்பர் கார்தான்னா பார்த்துக்கோங்க!

`நட்புக்காக' விஜயகுமார் கார் ரொம்பவே வித்தியாசமான கார். இந்த வண்டி பஞ்சரானா, இதை மெக்கானிக் ஷாப் கொண்டு போய் பஞ்சரெல்லாம் போடத் தேவையில்ல! யாராவது கெட்ட வார்த்தை பேசினாலே போதும்; அந்த வார்த்தைகளை வால் ட்யூப் வழியா ரிசீவ் பண்ணி, ஆட்டோமேட்டிக்கா பஞ்சர் சரியாகி வண்டி ஓட ஆரம்பிச்சிடும். ஃபோர்டு காராக இருந்தாலும் சரி; கான்டெஸாவாக இருந்தாலும் சரி! அதிலேயும் சாக்கில் இருந்து சில்லறைக் காசா கொட்டி ஃபோர்டு ஷோரூமில் ஐகான் கார் வாங்குற சீன் இருக்கே… அதைப் பார்த்துட்டு பல பயபுள்ளைக, இப்போ சாக்கு மூட்டைல சில்லறையைக் கொட்டி கார்/பைக் வாங்குறதை ட்ரெண்டிங் ஆக்கிட்டு வருதுக!

தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!

`முள்ளும் மலரும்' அதிசய ஜீப் பற்றிச் சொல்லியே ஆகணும்! இந்த ஜீப்ல அப்படி என்ன ஸ்பெஷல்னா, பொதுவா ஜீப் மலை மேலே ஏறும்போது ஒரு பக்கமாதானே ஸ்டீயரிங்கைத் திருப்பி ஓட்டுவாங்க. ஆனா நம்ம சரத்பாபு, ‘செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்’ பாட்டுல ‘வளைந்து நெளிந்து போகும் பாதை’னு லிரிக்ஸுக்கு ஏத்த மாதிரி எல்லாப் பக்கமும் ஸ்டீயரிங்கைத் திருப்பி ஓட்டுவார் பாருங்க! அப்போவே 360 டிகிரி ஸ்டீயரிங் உள்ள ஜீப்புங்க இது! மஹிந்திராவுக்கு ஒரு நல்ல ஐடியா கொடுத்திருக்காரு சரத்பாபு!

தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!
தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!

அஜித்தின் ‘வலிமை’ பைக்கைவிட அதிகமா பறந்த ஒரு பைக்னா, அது `காதலன்' பிரபுதேவா பைக்தான். நக்மாவை பைக்ல திருட்டுத்தனமா கூட்டிட்டுப் போறப்போ போலீஸ் துரத்த, பிரபுதேவா ஆக்ஸிலரேட்டரைத் திருகி, ஒரே ஜம்ப்ல பஸ் மேலே தாவிடுவார். அடுத்தடுத்து வரிசையா நிக்கிற 20 பஸ் மேலேயும் ‘சூப்பர் மேரியோ’ மாதிரி பைக்ல தாவித் தாவித் தப்பிச்சுப் போய்டுவார். அந்த யமஹா பைக்குக்கு இப்போவும் கிரேஸ் இருக்கு! அதே படத்தில் ‘குல்ஃபி’ பாட்டுல ஆக்ஸிலரேட்டரே முறுக்காம நக்மா பைக் ஓட்டுறதையும் நான் வாயைப் பொளந்து பார்த்துருக்கேன்… ஹலோ நான் பைக்கைச் சொன்னேன்!

நம்ம STR சின்ன வயசுல நடிச்ச `ஒரு வசந்த கீதம்' படத்துல, அவர் சைஸுக்கு ஏத்தமாதிரி குட்டியா ஒரு பைக் வெச்சிருப்பார். வில்லன்களோட ரகசியத்தை வீடியோவா எடுத்த STR, அந்தக் கேசட்டோடு அவர் குட்டி பைக்ல தப்பிப்பார். அடியாட்கள் அம்பாஸடர் கார்ல விரட்டிக்கூட அந்த தம்மாத்துண்டு பைக்கைப் பிடிக்க முடியாதுனா பார்த்துக்கோங்க! அப்படிப்பட்ட சூப்பர் குட்டி பைக் அது! இது தந்தைக்கும் மகனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்! ஆனா அது ஒரு டிவிஎஸ் 50சிசி இன்ஜினைப் பொருத்தி ஒரு மோட்டோ க்ராஸ் பைக் மாதிரி ரீ–டிசைன் பண்ணி ஓட்டுனதாகத் தகவல்!

தமிழ் சினிமாவை அதகளம் பண்ணிய கார் பைக்ஸ்!

‘குருவி’ படத்தில் விஜய்ணா பண்ணியதும் ஸ்கோடா கம்பெனியாலேயே முடியாத ஒரு விஷயம். படத்தில் ரேஸ் ஓட்டிக்கிட்டு இருக்கறப்போ காரோ ஆக்ஸிலரேட்டர் கேபிள் பிய்ஞ்சு போனாலும், அந்த நேரத்திலும் சமயோஜிதமா திங்க் பண்ணி, ஆக்ஸிலரேட்டர் கேபிளை வாயாலேயே கடிச்சு இழுத்து, ஆக்டேவியா கார் ஓட்டுற அந்த வெறித்தனம்… ஸ்கோடா கம்பெனியே மிரண்டு போன சம்பவம் அது!

இது போக 6 மணிக்கு மேல ஓடாத வைகைப் புயல் ஆட்டோ, சிங்கமுத்துக்கு மட்டும் 45 கிமீ மைலேஜ் கொடுத்துட்டு - நம்ம வடிவேலுக்கு 50 கிமீ கொடுக்கிற டிவிஎஸ் சேம்ப் மொபெட், சேஸிங் காட்சிகள்ல பறந்து போய் பனைமரங்களை முறிக்கிற ஹரியின் சூப்பர் சுமோக்கள், மண்ணெண்ணெய்ல ஓடுற `கரகாட்டக் காரன்' கார், ஆள் கடத்தலுக்காகவே தமிழ் சினிமா பயன்படுத்திய ஆம்னி வேன்கள்னு இந்த வண்டிகளோட லிஸ்ட் பெருசுங்க!