கட்டுரைகள்
Published:Updated:

சேட்டிலைட் உலகின் அன்லாக் 'ரகசியங்கள்'!

சித்ரா ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்ரா ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்

புதுப்பொண்ணு சித்ரா... ‘ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்’ முடித்த உற்சாகத்தில் இருந்தார்.

சேட்டிலைட் சேனல்களின் உலகம்... கொரோனா லாக் டெளன் சமயமும் பரபரப்பாகவே இருந்தது. இப்போது அன்லாக் நடைமுறைகள் காரணமாக புத்துணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது. சின்னத்திரை உலகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என விசாரித்ததில் கிடைத்த சில ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் இங்கே...

சேட்டிலைட் உலகின் அன்லாக்
'ரகசியங்கள்'!
சேட்டிலைட் உலகின் அன்லாக்
'ரகசியங்கள்'!

 புதுப்பொண்ணு சித்ரா... ‘ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்’ முடித்த உற்சாகத்தில் இருந்தார். ‘‘ ‘அந்தப் பொண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நீங்க முடிஞ்சா அந்தப் பொண்ணுகிட்ட என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்ல முடியுமா ப்ளீஸ்..!’- எங்க முதல் சந்திப்புல என்கிட்ட இதான் கேட்டார். அதாவது, அவருக்குப் பிடிச்ச இன்னொரு பொண்ணுகிட்ட நான் அவருடைய காதலுக்குத் தூது போகணுமாம். ‘ஏங்க என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது’ன்னு கேட்டுடலாம்னு தோணுச்சு. ஆனா, முன்னாடியே பழகிட்டோமேன்னு பொறுத்துக்கிட்டு, அந்தப் பொண்ணுகிட்ட போய் ‘ரொம்ப நல்லவர்ங்க, நல்லாப் பார்த்துப்பார்’னெல்லாம் சொன்னேன். ஒரு வருசம் கழிச்சு கட் பண்ணுனா, எங்க ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கு. இப்ப யார்கிட்ட தன்னைப் பத்திச் சொல்லச் சொன்னாரோ அவங்க எங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டுப் போறாங்க!’’ எனச் சிரிக்கிறார் சித்ரா.

ஷிவானி
ஷிவானி

 ஓவியா, சித்ரா ஆகியோருக்கு சோஷியல் மீடியாவில் கிடைத்த ஆர்மியெல்லாம் டிவி புகழால் கிடைத்தவையே. இந்த வரிசையில் இப்போது `போட்டோஷூட்’ புகழ் ஷிவானி. அவரது ஆர்மி எண்ணிக்கை மில்லியனைத் தாண்டிவிட்டது.

சித்ரா-குமரன்
சித்ரா-குமரன்

 ஜோடியாக நடித்து வாழ்க்கையில் இணைந்தவர்கள் இருக்கிற இதே டிவியில்தான், ஜோடியாக நடித்து சீரியல் ஹிட் ஆனாலும், நிஜத்தில் பாம்பும் கீரியுமாக இருக்கிறவர்களும் இருக்கிறார்கள். ‘சரவணன் மீனாட்சி’ ரியோ-ரச்சிதா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா-குமரன் ஜோடியை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம்.

நட்சத்திரா
நட்சத்திரா

படம்:கிரண் சா

 லாக் டௌனுக்குப் பிறகு `நாயகி’ சீரியலில் முற்றிலும் புதிதான களத்தில் அறிமுகமானபோது, `கேரக்டருக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ எனக் கொஞ்சம் மிரண்டிருந்தார் நட்சத்திரா. ஆனால், சில எபிஸோடுகளிலேயே சீரியல் கூடுதல் விறுவிறுப்புடன் ரசிகர்களை ஈர்க்க, பொண்ணு இப்ப செம ஹேப்பி. ‘அம்பிகா மேடம் மாதிரியான சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் நெருக்கமாகப் பழகவும் வாய்ப்பு தந்திருக்கு `நாயகி’ என்கிறார்.

 சீரியல் இயக்குநர்களைப் பொறுத் தவரை இப்போதுள்ள இயக்குநர்களை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். முதல் வகை... பக்கா புரொபஷனல். ஸ்பாட்டில் திட்டமிட்டபடி வேலை நடக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். பிரேக் நேர அரட்டைகளைக் கண்டு கொள்வதுமில்லை, கலந்து கொள்வது மில்லை. ‘நாயகி’ இயக்குநர் குமரன் இந்த வகை.

குமரன், பிரவீன் பென்னட்
குமரன், பிரவீன் பென்னட்

அடுத்து ஜாலிகேலியா வேலை வாங்குபவர்கள். ஷூட்டிங் பரபரப்பில் கடுகடுத்தாலும், பின்னர் சிரித்துப் பேசி சூழ்நிலையை சகஜமாக்கிவிடுவார்கள்.

`ராஜா-ராணி’ இயக்குநர் பிரவீன் பென்னட் அப்படிப்பட்டவர்.

மூன்றாவது வகை டெரர் பார்ட்டிகள். ஒரு டாப் ரேட்டிங் சீரியல் இயக்குநர் இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பார். சில மாதங்களுக்கு முன் `தங்களைக் கடுமையாகப் பேசிவிட்டார்’ என இவர் மீது சில நடிகைகள் எழுப்பிய புகார் காவல் நிலையம் வரை சென்றது.

சேட்டிலைட் உலகின் அன்லாக்
'ரகசியங்கள்'!

 ‘அவருடைய பதவிதான் நமக்கு ஒரு தயக்கத்தைத் தரும். ஆனா மனுஷன் கேஷுவலான ஆளுங்க’-ஜீ தமிழ் சேனலின் புரோகிராமிங் ஹெட் தமிழ்தாசன் குறித்த பரவலான பேச்சு இது. தலைமைப்பொறுப்பில் இருந்தாலும் இன்றைக்கும், ஆரம்பத்தில் வைத்திருந்த அதே பழைய டிஸ்கவர் பைக்கில்தான் அலுவலகம் வருகிறார். சேனலின் விருது விழா என்றாலும் மேடையின் முன்பு அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் குஷன் இருக்கைகளில் இவரைப் பார்க்க முடியாது. ஸ்டேஜுக்குப் பின்புறம் `கன்சோல்’ ஏரியாவிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருப்பார். அதேபோல் எத்தனை பெரிய நிகழ்ச்சி என்றாலும் உடை விஷயத்திலும் மிகவும் சிம்பிள்!

பிரியங்கா
பிரியங்கா

படம்:கிரண் சா

தமிழ்த் தொலைக் காட்சி உலகில் இப்போது கலகலத் தொகுப் பாளர்களுக்குப் பற்றாக் குறை என்றுதான் சொல்ல வேண்டும். டிடி, பாவனா, ரம்யா, நட்சத்திரா, தியா மேனன் என ஒருவருக் கொருவர் டப் கொடுத்தது ஒருகாலம். பிறகு பிரியங்கா, ஜாக்குலின் என வந்தார்கள். ஜாக்குலின், நட்சத்திரா இருவரும் சீரியல்களில் செட்டில் ஆக, `இப்போது ஒன் வுமன் ஆர்மி’யாக ரவுண்ட் வருகிறார் பிரியங்கா. மறுபக்கம், செகண்ட் இன்னிங்ஸில் அடித்து ஆடும் அர்ச்சனாவையும் விட்டால், ரசிகர்களைக் கவரும் தொகுப்பாளர் களுக்குப் பஞ்ச மாகத்தான் இருக்கிறது.

 பல சீரியல்களின் ஷூட்டிங்குகள் இப்போது சென்னை, பூந்தமல்லி ஈ.வி.பி பிலிம் சிட்டி வளாகத்தில் தான் நடந்து வருகின்றன. (பிக் பாஸ் வீடும் இந்த வளாகத்தில்தான் உள்ளது). போட்டி சேனல்களாக இருந்தாலும்கூட, அருகருகே ஷூட் நடப்பது, நட்சத்திரங்கள் சாட்டிங், மீட்டிங்கிற்கு உதவுகிறதாம். பல நேரங்களில் ஒரு சேனல் ஆர்ட்டிஸ்ட், திடீரென இன்னொரு சேனலில் தோன்றுவதன் பின்னணியில் இந்த மீட்டிங்குகளே இருக்கின்றன.

 கொரோனா லாக் டௌனுக்குப் பிறகு பல சீரியல்கள் பல்வேறு காரணங்களால் நிறுத்தப் பட்டன. அதே நேரம், உண்மையிலேயே ‘கொரோனா’வால் நிறுத்தப் பட்ட ஒரு தொடர் என்றால், ‘ராசாத்தி’ சீரியலைச் சொல்லலாம். நடிகர் செந்திலை டிவிக்கு அழைத்து வந்ததே அந்த சீரியல்தான். அதில் ஹீரோவாக நடித்த ஆதிபாலா ஆந்திராவைச் சேர்ந்தவர். அவருக்குக் கொரோனா வந்து, தற்போது குணமாகி விட்டார். ஆனாலும்கூட, மறுபடி சென்னை வருவதையும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதையும் விரும்ப வில்லையாம் அவர்.

 நிழலில் நடிக்கத் தொடங்கி நிஜ வாழ்க்கையில் இணைந்தவர்களின் பட்டியல்... சேத்தன் – தேவதர்ஷினி, ராஜ்கமல் – லதா ராவ், செந்தில் – ஸ்ரீஜா, ரச்சிதா – தினேஷ், சஞ்சீவ் – ஆல்யா என ரொம்பவே பெரியது. இந்தப் பட்டியலில் விரைவில் இணைய இருக்கிற இரண்டு ஜோடிகள்... ‘திருமணம்’ தொடரின் ஷ்ரேயா-சித்து மற்றும் ஆயிஷா-விஷ்ணு.

ஷ்ரேயா-சித்து
ஷ்ரேயா-சித்து
ஆயிஷா-விஷ்ணு
ஆயிஷா-விஷ்ணு

 சீரியல்களில் நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளை அவர்கள் நடிக்கும் சீரியல்களைத் தாண்டி, தங்களது மற்ற நிகழ்ச்சிகளின் புரமோஷனுக்கும் பயன்படுத்திக்கொள்வது சேனல்களின் வழக்கம். ஆனால் இத்தகைய புரோமோ ஷூட் எதிலும் கலந்துகொள்ள மறுத்துவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். நடிகர்களில் ‘செம்பருத்தி’ கார்த்திக், நடிகைகளில் ரச்சிதா ஆகியோர் `புரோமோ ஷூட்டில் கலந்துகொள்வதில்லை’ என்பதை பாலிசியாகவே வைத்திருக்கிறார்கள்.

கார்த்திக்
கார்த்திக்
ரச்சிதா
ரச்சிதா

 இர்ஃபான், பிரேம், `பிளாக் பாண்டி’ உள்ளிட்ட ‘கனா காணும் காலங்கள்’ டீம் இப்போதும் வாட்ஸப் குரூப்பில் நட்பு பாராட்டியே வருகின்றனர். குழுவில் யார் வீட்டிலாவது ஏதாவது விசேஷம் என்றால் மொத்தமாகத் திரண்டு விடுகின்றனர். ரீ யூனியன் மீட்டிங் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகச் சொல்கிறார்கள்!