Published:Updated:

Vijay 67 Update: கொடைக்கானலில் படப்பிடிப்பு; திரைப் பிரபலங்களுடன் இணையும் பிக் பாஸ் பிரபலம்!

விஜய் - அனிருத்

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைவிட இந்தப் படம் பல இடங்களில் கதை பயணப்படும் வகையில் உள்ளது. இதனால் எதிர்பார்க்காத ஏரியாக்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

Vijay 67 Update: கொடைக்கானலில் படப்பிடிப்பு; திரைப் பிரபலங்களுடன் இணையும் பிக் பாஸ் பிரபலம்!

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைவிட இந்தப் படம் பல இடங்களில் கதை பயணப்படும் வகையில் உள்ளது. இதனால் எதிர்பார்க்காத ஏரியாக்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.

Published:Updated:
விஜய் - அனிருத்

விஜய்யின் 'வாரிசு' வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் சென்னை, ஹைதராபாத்தில் ஜரூராக நடக்கிறது. இன்னொரு பக்கம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 67'க்கான படப்பிடிப்புகள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன என்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள். இந்நிலையில் 'விஜய் 67'ல் சின்னத்திரை நடிகர்களும் இணைந்து வருகின்றனர். 'பிக்பாஸ்' ஜனனி சமீபத்தில் இணைந்திருக்கிறார்.. படத்தில் இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள்... படப்பிடிப்பு நிலவரம் என்ன்? என்பது குறித்து விசாரித்தேன்.

விஜய், லோகேஷ் கனகராஜ்
விஜய், லோகேஷ் கனகராஜ்

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு, லோகேஷ் கனகராஜ் - விஜய் இணைந்திருக்கும் 'விஜய் 67' சென்னையில் பூஜையுடன் தொடங்கி, பிரசாத் ஸ்டூடியோவில் சில நாட்கள் நடந்தன. படத்தில் விஜய்யின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். 'திருப்பாச்சி', 'கில்லி', 'ஆதி', 'குருவி' படத்தில் இணைந்து நடித்த இந்த ஜோடி, பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறது. இவர்கள் தவிர மிஷ்கின், சஞ்சய்தத், கௌதம் மேனன் என பலரும் படத்தில் இணைந்திருக்கின்றனர்.

த்ரிஷா
த்ரிஷா

அனிருத் இசையமைப்பில், 'பீஸ்ட்' மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில் பொங்கலுக்கு முன்னதாக பிரேக் விடப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு நாளை மீண்டும் தொடங்குகிறது. கொடைக்கானலில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. அதில் விஜய்யின் போர்ஷன் இல்லை என்கிறார்கள்.

விஜய் - த்ரிஷா
விஜய் - த்ரிஷா

லோகேஷ் கனகராஜின் மற்ற படங்களைவிட இந்தப் படம் பல இடங்களில் கதை பயணப்படும் வகையில் உள்ளது. இதனால் எதிர்பார்க்காத ஏரியாக்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். கொடைக்கானல் ஷெட்யூலைத் தொடர்ந்து காஷ்மீர் செல்கின்றனர். அங்கே தொடர்ந்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு இருக்கலாம் என்றும் தகவல்.