Published:Updated:

விருமாண்டி பட ஸ்டைலில் 1954-ல் `அந்த நாள்' எடுத்த வீணை எஸ்.பாலசந்தர் | இன்று ஒன்று நன்று - 18

வீணை எஸ்.பாலசந்தர்

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ்.பாலசந்தரைக் குறிப்பிடுகிறார்.

Published:Updated:

விருமாண்டி பட ஸ்டைலில் 1954-ல் `அந்த நாள்' எடுத்த வீணை எஸ்.பாலசந்தர் | இன்று ஒன்று நன்று - 18

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ்.பாலசந்தரைக் குறிப்பிடுகிறார்.

வீணை எஸ்.பாலசந்தர்

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவில் இந்திய திரையுலகத்தோட மிக முக்கியமான இயக்குனர் மணிரத்னம் ஒரு தமிழ் இயக்குனரைப் பத்தி சிலாகிச்சுப் பேசினார். தமிழ்ல இப்போ நம்ம ரொம்ப புதுமையான கதைகளைப் பத்தி பேசுறோம். ஆனா, பல வருஷங்களுக்கு முன்னாடியே ஒரு மனுஷன் இந்த மாதிரி கதைகளை எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சார். அபபடினு சொல்லி ஒரு கதையை சொன்னாரு. கதையை சொல்லி முடிச்சிட்டு அந்தக் கதையை இப்போ கார்த்திக் சுப்பராஜ் சொன்னா நமக்கு ஆச்சர்யமா இருக்கும். இந்கத கதையை பல வருஷத்துக்கு முன்னாடியே ஒருத்தர் சொன்னாரு அவர் தான் வீணை எஸ்.பாலசந்தர் அப்படினு மணிரத்னம் பேசினார்.

 வீணை எஸ்.பாலசந்தர்
வீணை எஸ்.பாலசந்தர்

மணிரத்னம் புகழந்து பேசின வீணை எஸ். பாலச்சந்தர் 1954-லயே அகிரா குரசோவா படத்தைப் பார்த்து இன்ஸ்பையராகி தமிழ்ல அந்த நாள்னு ஒரு படம் எடுத்தார். சிவாஜி கணேசன் நடிச்ச அந்தப் படம் பாடல்கள், புராண வசனம்னு தமிழ் சினிமாவோட எந்த கட்டமைப்புலையும் அடங்காது. கமல்ஹாசனோட விருமாண்டி, மணிரத்னத்தோட ஆய்த எழுத்து படங்கள்ல முயற்சி பண்ணின ரோஷோமன் எபெக்ட் திரைகதை உக்தியை 1954-லயே தமிழ்நாட்டுல ஒரு டைரக்டர் முயற்சி பண்ணினது ஆச்சரியமான விஷயம். 50-களிலயே உலக சினிமா பரிட்சையமான வீணை எஸ்.பாலசந்தர் இவரைப் பத்தின ஒரு குட்டி பிளாஷ்பேக் ஒண்ணு போவோம்.

தன்னுடைய 7 வயசுல மேடையேறி இசை உலகில புகழ்பெற்ற இவர், வரும் நாட்களில் வீணை மீது கொண்ட அதீத காதலால் வீணை வித்வானாக மாறினார். 1927 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சுந்தரம் ஐயர் - செல்லம்மாள் தம்பதிக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர். இசை மீது இவர் கொண்ட பற்றுக்கு இவரோட தந்தையின் இசை நாட்டமே காரணம் எனலாம்.

 வீணை எஸ்.பாலசந்தர்
வீணை எஸ்.பாலசந்தர்

இசைத்துறையில் மட்டுமின்றி திரைத்துறையிலும் சாதனைகள் பல புரிந்த மாமனிதர் இவர். உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களில் ஒருவரான இவர், திரை உலகில் நிகழ்த்திய சாதனைகளுக்கும் ஈடு இணையே இல்லை. திரைத்துறையில இசை, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பின்னணி பாடல் எனப் பல்வேறு களங்களில் கால்பதித்து அதில் வெற்றிக்கனியும் சுவைத்தவர். இசை, திரைப்படம் என இரண்டு துறைகளிலும் வெற்றி கண்டாலும், இவரது அதீத காதல் என்னவோ இசை மீதே இருந்தது. 10 வயசுலேயே திரையுலகில கால்தடம் பதித்தாரு பாலசந்தர்.

1932 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சாந்தாராம் இயக்கிய சீதா கல்யாணம் என்ற படத்தில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக நடித்து தன்னுடைய திரைப்பயணத்த தொடங்கினாரு. இந்த படத்தில இவரோட தந்தை, அண்ணன், அக்கா ன்னு எல்லோருமே முக்கிய கதாபாத்திரங்களில நடிச்சுருந்தாங்க.ஆனா, பத்தோடு ஒன்றாக உட்கார்ந்து கஞ்சிரா வாசிக்கும் சிறுவனான பாலசந்தர், ரசிகர்களோட கவனத்த தன்னோட பக்கம் திரும்ப வச்சாரு. காரணம், முறைப்படி கற்றுத் தேர்ந்த கலைஞனைப்போல் இருந்த இவரோட வாசிப்பு தான். இயக்குனர் சாந்தாராம் இவரோட நடிப்ப பாராட்டி தபேலா செட் ஒன்று பரிசளித்தாராம். 12 வயசுல சிதார் கருவி வாசிச்சு தனிக்கச்சேரி நடத்தற அளவுக்கு திறன் பெற்றிருந்தாராம். பிறகு வீணை வாசிக்க பயிற்சி பெறத் தொடங்கி அதிலும் வல்லமை பெற்றார். கர்நாடக இசை தவிர்த்து, இந்துஸ்தானி, மேற்கத்திய இசைன்னு அனைத்திலும் வல்லமை பெற்றிருந்தார்.

வீணை எஸ். பாலச்சந்தர்
வீணை எஸ். பாலச்சந்தர்

1942 ஆம் ஆண்டு இவருக்கு ஆல் இந்தியா ரேடியோ ல வேலை கெடச்சது. அந்த நாட்களில் தான் அவர் நிறைய இசை கருவிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றாரு. இந்தியா ல மட்டுமில்லாம உலகம் முழுதும் உள்ள பல நாடுகளுக்கு சென்று இசை கச்சேரிகள் செய்தார்.மேஜிக் ம்யூசிக் ஆஃப் இந்தியா’, ‘சவுன்ட்ஸ் ஆஃப் வீணா’, ‘இம்மார்ட்டல் சவுண்ட் ஆஃப் வீணா’ உள்ளிட்ட பல இசைத் தட்டுகளை வெளியிட்டுள்ளார். வீணையில் அவர் யாருடைய பாணியையும் பின்பற்றவில்லை. குருவின் துணையில்லாம அவரே வீணை கத்துக்கிட்டதால அவர் எப்பவுமே I only say I had manaseega reference, no manaseega guru" ன்னு சொல்லுவாராம்.

கச்சேரிக்கு போறப்ப வீணை-ய வேற யார்கிட்டேயும் தரமாட்டாராம். தூங்குற நேரம் தவிர்த்து மத்த எல்லா நேரங்களிலும் வீணையை கையிலேயே வைத்திருப்பாராம்.விமான பயணங்களின் போது கூட சிறப்பு அனுமதி பெற்று பாதுகாப்பாக எடுத்துச் செல்வாராம். வீணை கொண்டு தன் விரல்களால் பல முயற்சிகள் மேற்கொண்டு அற்புதங்களை நிகழ்த்தி இருக்காரு.வழக்கமா இசைக்கலைஞர்கள் ஜிப்பா போட்டு இருந்த காலகட்டத்தில மேல்நாட்டு உடைகள் உடுத்தி சும்மா டிப்டாப்பாக இருந்தவர் பாலசந்தர்.

வீணை எஸ். பாலச்சந்தர்
வீணை எஸ். பாலச்சந்தர்

செய்யற வேலைய சிறப்பாக செய்யறது யாருக்கும் வளைந்து கொடுத்து போகாம இருக்கறது தவறுகள தட்டிக்கேட்கறதுனு இவரோட நல்ல குணங்கள சொல்லிக்கிட்டே போகலாம். நல்லவனுக்கு காலமில்லை ன்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்க மாதிரி இவரோட இந்த பண்புகள் னாலேயே இவர் நிறைய சங்கடங்களையும் சந்திச்சு இருக்காரு.1948 ல இது நிஜமா என்கிற பேய்ப்படத்தில ஹீரோவாக நடிச்சாரு. 1960 ல தமிழ்த் திரைப்பட இயக்குநரா தன்னோட பயணத்த தொடங்கினார். இவர் இயக்கிய படங்களுக்கு இவரே இசையும் அமைத்தும் வந்தாரு.

'இது நிஜமா’, ‘என் கணவர்’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘பூலோக ரம்பை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி, இசையமைத்து, நடித்தார். இவர் இயக்கிய ‘அந்த நாள்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். பிறகு ‘அமரன்’, ‘அவனா இவன்’, ‘பொம்மை’, ‘நடு இரவில்’ உள்ளிட்ட திகில் படங்களையும் இயக்கினார். தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் 'அந்த நாள்' .ஏவிஎம் தயாரிப்பில் வெளியானது இந்த படம். வித்தியாசமான படம் இது. பிளாஷ்பேக் உத்திகளை அதிகம் பயன்படுத்தி கதையை நகர்த்திய முதல் படமும் இதுதான். விருமாண்டி போன்ற படங்களுக்கு இதுவே முன்னோடி. தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ். பாலச்சந்தரைக் குறிப்பிடுகிறார்.

அந்த நாள்
அந்த நாள்

எஸ்.பி கிரியேஷன்ஸ் என்ற அவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் உருவானது. இந்த பேனரில் அவனா இவன் வெளியானது. சிறந்த த்ரில்லர் படம் அது. அடுத்தது பொம்மை. பொம்மை படம் தமிழ்சினிமாவின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று.இந்த படத்தில் ஒரு புதுமையை செய்தார் பாலசந்தர். படத்தின் அத்தனை டெக்னீஷியன்களையும் திரையில் தோன்றி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். படத்தின் உச்சகட்ட காட்சிக்கு முன்பு திரையில் ஷார்ட்ஸ் உடன் தோன்றும் நாகரீக பாலசந்தர் ஒவ்வொருகலைஞரையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்வார். இளம்வயது சுசீலா,ஜானகி, ஜேசுதாஸ் என பின்னாளில் புகழடைந்த இளம் கலைஞர்களை பார்க்கலாம். கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியது பாலசந்தர்தான். அவர் இயக்கி, இசையமைத்த ‘பொம்மை’ படத்தில் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை….’ என்று பாடி தனது தமிழ்த்திரைப் பயணத்தைத் தொடங்கினார் ஜேசுதாஸ்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

த்ரில்லர் பட இயக்கத்தில இவரைத் தமிழ் நாட்டின் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்று சொல்லலாம். இவர் எடுத்த ‘நடு இரவில்’ என்கிற படம் இன்னைக்கு வர தமிழ் சினிமா வின் நம்பர் ஒன் த்ரில்லர் படமாக இருக்கு.1965ல் வெளியான 'நடு இரவில்' தான் அவர் கடைசியாக இயக்கியது. சினிமாவே தன்னை ஆக்ரமித்துக் கொண்டதால், அதிலிருந்து விலகிக் கர்நாடக சங்கீதத்துக்கே தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்.

நடு இரவில்
நடு இரவில்

"இசை என்பது ஒரு தெய்வீகக் கலை. அதில் கண்டபடி புதுமைகளைப் புகுத்துவது சரியல்ல. ரசிகர்களுக்கு ஏற்றவாறு இசையில் மாற்றம் செய்வது அதன் தரத்தைக் குறைக்கும். தூய இசையை ரசிப்பதற்கேற்றவாறு ரசிகர்களின் தரத்தை, அவர்களது இசையறிவை உயர்த்துவதுதான் இசைக் கலைஞனின் மிக முக்கியக் கடமை" என்பது அவரது கருத்து. இசையிலும் திரையுலகிலும் பல சாதனைகளைப் படைத்த வீணை.எஸ்.பாலசந்தர் அவர் வாழ்வில் அவை இரண்டும் எப்படிப்பட்டவை என்பது குறித்து ஒருமுறை கூறியுள்ளார். அதில் "நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் வீணை கிடைத்தது. நிறைய பாவம் செய்திருக்க வேண்டும். அதனால் சினிமா வாய்த்தது" என்றார்.

தன் திறமையை வேறுயாரும் அளவிட அனுமதிக்காத மனிதர் அவர். பத்மபூஷண் விருது, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி விருது வழங்கிய சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது,உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார்.'வீணா சக்ரவர்த்தி', 'இசைக்கடல்', 'நாதயோகி' என்றெல்லாம் போற்றப்பட்டார்.

வீணை எஸ். பாலச்சந்தர்
வீணை எஸ். பாலச்சந்தர்

1990, ஏப்ரல் 13-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாய் நகரில் வீணைக் கச்சேரி நடத்த போயிருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அங்கேயே காலமானார்.