Published:Updated:

90-ஸ் கிட்ஸுக்கு வடிவேலு; 80-ஸ் கிட்ஸுக்கு கவுண்டமணி; அன்று`டணால்' தங்கவேலு!| இன்று,ஒன்று,நன்று - 15

`டணால்' தங்கவேலு!

கந்தசாமி முதலியாரின் பதிபக்தி நாடகம் 'சதிலீலாவதி' படமாகத் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அறிமுகமான அதே படத்தில் தான் தங்கவேலுவும் திரை உலகில் அறிமுகமானாரு.

Published:Updated:

90-ஸ் கிட்ஸுக்கு வடிவேலு; 80-ஸ் கிட்ஸுக்கு கவுண்டமணி; அன்று`டணால்' தங்கவேலு!| இன்று,ஒன்று,நன்று - 15

கந்தசாமி முதலியாரின் பதிபக்தி நாடகம் 'சதிலீலாவதி' படமாகத் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அறிமுகமான அதே படத்தில் தான் தங்கவேலுவும் திரை உலகில் அறிமுகமானாரு.

`டணால்' தங்கவேலு!
தமிழ் திரையுலகில் டணால் தங்கவேலு என்று அழைக்கப்படும் K.A. தங்கவேலு பிறந்த தினம் இன்று.

ஒரு நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் தமிழ் மக்களோட மனசுல நீங்காத இடம் புடிச்சவரு தங்கவேலு. 90s கிட்ஸ் க்கு விவேக் வடிவேலு போல 80s கிட்ஸுக்கு கவுண்டமணி செந்தில் போல 60s கிட்ஸுக்கு அன்று டணால் தங்கவேலு.

இன்று வடிவேலு வின் வசனங்கள் இணையத்தைக் கலக்குவதுபோல அன்று திண்ணை, டீக்கடை என அனைத்திலும் தங்கவேலு வின் வசனங்கள் தான் நிறைந்திருந்தன.

‘டணால்’ தங்கவேலு
‘டணால்’ தங்கவேலு

1917 ஆம் ஆண்டு ஜன 15 புதுச்சேரியில் உள்ள காரைக்காலில் பிறந்தாரு தங்கவேலு. இளம் வயதிலேயே தாயின் மரணம், குடிகார தந்தை என பெரும் அவதிக்குள்ளாகிருக்கார். தங்கவேலு சின்ன வயசுல இசை மேல் தீராத காதல் கொண்டிருந்தாரு. அதோட விளைவா ஆரம்ப காலத்தில திருட்டுத்தனமா நாடகங்கள் பார்க்கத் தொடங்கினாரு.

என்னதான் இசை, நாடகம்ன்னு ஆசைகள் இருந்தாலும் குடும்ப கஷ்டம் அது எல்லாத்தையும் மறக்க வச்சுருச்சு. அதன்பிறகு, காலத்தின் கட்டாயத்தால தன்னோட பத்து வயசுல குடும்ப கஷ்டம் காரணமா யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக்குழுவில நடிக்க தொடங்கினாரு. அந்த காலத்தில நாடகத்தில சிறுவர்களுக்கு பெண் வேடமிட்டு நடிக்க வைப்பது வழக்கம். சின்ன வயசுல இவரு ஒல்லியாவும் அழகாகவும் இருந்ததுனால பெண் வேடம் இவருக்கு கனக்கட்சிதமா பொருத்திருந்துச்சு.

இவ்வாறு பல நாடகக் குழுவில நடித்த பிறகு தன்னுடைய நண்பரான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில நடிக்கத் தொடங்கினாரு. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலு வும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பி போல பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் பதிபக்தி நாடகம் தான் 'சதிலீலாவதி' படமாகத் தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அறிமுகமான அதே படத்தில் தான் தங்கவேலுவும் திரை உலகில் அறிமுகமானாரு. சதிலீலாவதி திரைப்படத்திற்கு பிறகு 15 ஆண்டுகளாய் திரைப்பட வாய்ப்பு எதுவும் இல்லை.

‘டணால்’ தங்கவேலு
‘டணால்’ தங்கவேலு

அன்றாட வாழ்வுக்கு திண்டாடும் நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டாரு. பின்னர், கலைவாணர் என்.எஸ்.கே வின் 'மணமகன்' திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். டி.ஆர்.ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த "சிங்காரி'' திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக தனக்குத் தனி இடத்தை உருவாக்கினார். இந்த படத்தில் பல இடங்களில் டணால் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதால் கிடைத்த அடைமொழியே "டணால் தங்கவேலு" என்பதாகும். அதன் பின் அமரகவி, பணம் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார்.

மிக ஒல்லியாக இருந்ததால் வசதியாக இருக்கும் எனக் கருதி வயதான வேடங்களை ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்பட பல படங்களில் 60 வயது நபராக நடித்தார். இவரது திரைப்படைப்புகளில் குறிப்பிடத்தக்கது கல்யாணப்பரிசு திரைப்படம். இப்படத்தில் வரும் மன்னாரன் கம்பெனி மேனேஜர் காமெடி தமிழ் திரைப்படங்களில் சிறந்த பத்து காமெடிகளில் ஒன்று என்ற இடத்தைப் பிடிக்கும்.

கல்யாணப் பரிசு திரைப்படம் இவரது திரை வாழ்வில் மட்டுமின்றி இல்லற வாழ்விலும் பேசுபொருளாக மாறியது. ஏனென்றால், அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை எம். சரோஜாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் ஜோடியாக 50 படங்களில் நடித்துள்ளார்கள். இன்று நாம் ரசிக்கும் வடிவேலு கோவை சரளா ஜோடி போல அன்று இந்த ஜோடி. அனைத்து கதாபாத்திரங்களும் ஏற்று நடிக்கக்கூடிய வெகுசில கலைஞர்களில் இவரும் ஒருவர்.

நகைச்சுவை மட்டுமின்றி முகபாவம், உச்சரிப்பு என நுட்பமாக நடிக்கும் திறன் பெற்றவர்.கண்களை உருட்டி நடிப்பதில் வல்லவர் இவர். தமிழ் மொழி மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் தீராத பற்று கொண்டவர். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்கமாட்டேன் என்று சபதம் எடுத்து வாழ்நாள் முழுவதும் பின்பற்றி வந்தார். தனது இறுதி நாள் வரை திமுக வின் தீவிர உறுப்பினராக இருந்தார். இவர் மறைந்த போது மரியாதை செலுத்தும் வகையில திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
‘டணால்’ தங்கவேலு
‘டணால்’ தங்கவேலு

தன்னுடைய 50 வருட திரைப்பயணத்துல 1275 திரைப்படங்கள் நடித்திருந்தாரு. 1968 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1989 இல் கலைவாணர் விருது பெற்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன்னு அனைத்து டாப் நடிகர்களோடயும் நடித்திருக்கார். தனக்கு சிறு வயதுல இருந்து கடைசிவரை உறுதுணையாக இருந்த கலைவாணர் என்.எஸ்.கே வின் உருவப்படத்தை நன்றியைத் தெரிவிக்கும் விதமாக செயினாக அணிந்திருந்தார். 1994 ஆம் ஆண்டு 77 வயதில காலமானார்.