Published:Updated:

`ரஜினி 169' படத்திலிருந்து நெல்சன் டிராப்... திடீர் வதந்தி பரவியதன் காரணம் என்ன தெரியுமா?

ரஜினி 169

ரஜினி படத்தை நெல்சன் இயக்கமாட்டார் என்ற வதந்தி எப்படிக் கிளம்பியது என விசாரித்ததில் நமக்குக் கிடைத்த தகவல் இது.

Published:Updated:

`ரஜினி 169' படத்திலிருந்து நெல்சன் டிராப்... திடீர் வதந்தி பரவியதன் காரணம் என்ன தெரியுமா?

ரஜினி படத்தை நெல்சன் இயக்கமாட்டார் என்ற வதந்தி எப்படிக் கிளம்பியது என விசாரித்ததில் நமக்குக் கிடைத்த தகவல் இது.

ரஜினி 169

'பீஸ்ட்' படத்தின் ரிசல்ட்டினால், இயக்குநர் நெல்சன் அடுத்து இயக்க உள்ள 'ரஜினி 169' படம் துவங்கப்படாது என்றும், நெல்சனைத் தூக்கிவிட்டு, வேறு ஒருவரை வைத்து ரஜினி படம் ஆரம்பிக்கப் போவதாகவும் நேற்று கோடம்பாக்கம் முழுவதும் தகவல்கள் பரவின. 'இது வெறும் வதந்திதான்' என இதற்கு நெல்சன் தரப்பிலிருந்து மறைமுகமாகப் பதில் வந்தது. அவர் தன் ட்விட்டர் முகப்புப் பக்கத்தில், தன்னுடைய படங்களின் லிஸ்ட்டில் 'தலைவர் 169' என ரஜினியின் படத்தையும் தற்போது இணைத்துள்ளார். இதன் மூலம், அவர் ரஜினியை இயக்குவது உறுதியாகிறது.

ரஜினி படத்தை நெல்சன் இயக்கமாட்டார் என்ற வதந்தி எப்படிக் கிளம்பியது என விசாரித்ததில் நமக்குக் கிடைத்த தகவல் இது.
நெல்சன் - ரஜினி
நெல்சன் - ரஜினி

'பீஸ்ட்' படம் வசூலில் பெரிய வெற்றியடைந்து வந்தாலும், படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தாண்டி, படத்தின் இயக்குநர் நெல்சன் குறித்து தாறுமாறான விமர்சனங்களை நெட்டீசன்கள் வீசி வருகின்றனர்.

சமீபத்தில் தனியார் டிவி சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., '''பீஸ்ட்' விஜய் ஒருத்தரையே நம்பி எடுக்கப்பட்ட படம். இளம் இயக்குநர்கள் பெரிய ஹீரோ கிடைச்சார்னு கன்டன்ட்டை நம்பாமல் ஹீரோவோட ரசிகர்களை நம்பி, ரெண்டு பாடல்கள், ஐந்தாறு ஃபைட்களை வச்சா போதும்னு நினைச்சு படமெடுக்கிறாங்க. கனமான விஷயத்தை எடுக்கும் போது திரைக்கதையில் மேஜிக் இருக்கணும். ஒரு ஹீரோ கிடைச்சிட்டார்னு இப்படி ஒரு சப்ஜெக்ட்டை எடுக்க வேணாம். நல்லா ஸ்டெடி பண்ணி பண்ணியிருக்கணும்" எனச் சொல்லியிருந்தார்.

இதனை அடிப்படையாக வைத்து, விஜய்யின் அப்பாவே சொல்லிவிட்டார் எனக் கருதிய சேனல் ஒன்று, தயாரிப்பு நிறுவனத்தை வெறுப்பேற்றவே இப்படி ஒரு செய்தியைக் கிளப்பியதாகச் சொல்கிறார்கள். ரஜினி படத்தில் நெல்சன் இருக்கமாட்டார் என வதந்தி பரவிய நிலையில் நெல்சன் தரப்பு படு அப்செட் ஆகிவிட்டது. உண்மையைத் தெளிவுபடுத்தும் விதமாக நேற்று மாலையே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நெல்சன்.

ரஜினி 169
ரஜினி 169

ரஜினி - நெல்சன் கூட்டணியை ரஜினியும் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர் தனது ட்விட்டரில் 'ரஜினி 169'க்கான போட்டோஷூட்டிலிருந்த தன் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளதாகவும் தயாரிப்புத் தரப்பிலிருந்து செய்திகள் கசிகின்றன.