Published:Updated:

ரஜினி மன்ற நிகழ்ச்சி ரத்தானதன் பின்னணி; அரசியல் தொடர்புடைய 3 பேர் காரணமா?!

ரஜினி

தமிழ்நாடு முழுக்க இருந்து ரசிகர்கள் பணத்தைச் செலவழிச்சு சென்னை வரணுமாங்கிறதை யோசிச்சுத்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கார்.

Published:Updated:

ரஜினி மன்ற நிகழ்ச்சி ரத்தானதன் பின்னணி; அரசியல் தொடர்புடைய 3 பேர் காரணமா?!

தமிழ்நாடு முழுக்க இருந்து ரசிகர்கள் பணத்தைச் செலவழிச்சு சென்னை வரணுமாங்கிறதை யோசிச்சுத்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கார்.

ரஜினி
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்த `மனிதம் காத்து மகிழ்வோம்' நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல்தான் காரணம் எனச் சொல்கிறார்கள். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 26-ம் தேதி நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியான சோளிங்கர் ரவி செய்து வந்தார்.

பல லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. `மனிதம் காத்து மகிழ்வோம்' என்கிற தலைப்பில் விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டதும், அந்தத் தலைப்பை நடிகர்கள் சிவகார்த்திகேயன், லாரன்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சியை நிறுத்துமாறு நடிகர் ரஜினி காந்த் தரப்பில் கூறியதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள். இது குறித்து விழா தரப்பினரிடம் விசாரித்தோம்.

ரஜினி
ரஜினி

"தலைவர்கிட்ட ஒப்புதல் வாங்கிட்டுதான் அறிவிப்பு வெளியிட்டாங்க. தலைவரும் ஒரு மாவட்ட அளவிலான நிகழ்ச்சிதானேன்னு எளிமையா நடக்கும்னு நினைச்சு சம்மதம் சொல்லிட்டார். ஆனா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து ரசிகர்கள் வருவாங்கன்னும், மத்த மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பிதழ்கள் போயிருக்கு அப்படிங்கறதும் தலைவருக்கு லேட்டாதான் தெரிய வந்தது.

நிகழ்ச்சி வேண்டாம் எனச் சொன்னவர், சோளிங்கர் ரவி செய்ய நினைச்ச உதவிகள் எந்தத் தடங்கலும் இல்லாதபடி போய்சேரவும் உத்தரவிட்டுள்ளார்" என்கிறார்கள், மன்றத்தின் பொறுப்புகளில் இருக்கும் சீனியர் நிர்வாகிகள் சிலர்.

இந்தக் காரணம் உண்மையானதுதான். இருப்பினும் நிகழ்ச்சியை நிறுத்தப்பட்ட பின்னணியில் இன்னொரு முக்கியமான காரணத்தையும் சொல்கிறார்கள்.
ரஜினி
ரஜினி

"நிகழ்ச்சிக்கான டைட்டிலை நடிகர்கள் வெளியிட்டதெல்லாம் சரிதான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ச்சியின் கலர் மாறத் தொடங்கியதுதான் ரத்து செய்யப்பட்டதற்கான முக்கியமான காரணம்" என்கிறார்கள். இது குறித்து கொஞ்சம் விரிவாகவே பேசினார்கள்.

" அரசியல் வேண்டாம்னு தரைலவர் தெளிவாக விளக்கிச் சொன்ன பிறகும்கூட இவரைப் பயன்படுத்தவே பலரும் நினைக்கிறாங்க. 'அரசியலுக்கு வரவேண்டாம், ஆதரவா ஒரு அறிக்கை, பேச்சுன்னு தர மாட்டாரா'னு எதிர்பார்க்குறாங்க நிறைய பேர். இந்த மாதிரியான சூழல்ல இந்த நிகழ்ச்சி மீண்டும் தன்னுடைய அரசியல் வருகைக் குறித்த பேச்சு எழுவதற்கான ஒரு இடமா அமைய வாய்ப்பிருக்க சூழல் உருவாகலாம்னு அவர் நினைத்திருக்கலாம்.

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டே

ஏன்னா, முழுக்க ரசிகர்களுக்காகவே நடத்தத் திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் மெது மெதுவா அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளே நுழையத் தொடங்கினதை தலைவர் எதிர்பார்க்கலை.

சைதை துரைசாமி, ஏ.சி சண்முகம், திருநாவுக்கரசர், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சிலரின் பங்கு இந்த நிகழ்ச்சியில் இருக்கறதா தெரியவந்திருக்கு. இவர்கள் அனைவரும் அவரின் நண்பர்களாக இருந்தாலும் அரசியல் சார்ந்தவர்களாக இருப்பதாலும், அடுத்த மக்களவைத் தேர்தல் பணிகள் தொடங்க இருக்கிற சூழலில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கிடலாம்னு தோணவே, யோசிக்காம உடனே நிகழ்ச்சியை நிறுத்தச் சொல்லிட்டார்" என்கிறார்கள் இவர்கள்.