Published:Updated:

`எனக்கு இன்னொரு முகம் இருக்கு!' - ராணுவ அதிகாரியாக மிரட்டும் ஜோதிகா

ஜோதிகா

'ராட்சசி' படத்தில் ராணுவ அதிகாரியாகவும் நடித்திருக்கிறார் ஜோதிகா.

Published:Updated:

`எனக்கு இன்னொரு முகம் இருக்கு!' - ராணுவ அதிகாரியாக மிரட்டும் ஜோதிகா

'ராட்சசி' படத்தில் ராணுவ அதிகாரியாகவும் நடித்திருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிற 'ராட்சசி' கல்வி அரசியலைப் பேசுகிற படம் போல் தெரிகிறது. சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் ட்ரெய்லரிலும் ஆசிரியையாக வரும் ஜோதிகாவையே காட்டினார்கள். அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் அவர் ஒரு காட்சியில் கண்ணாடி பாட்டிலை எடுத்து ரௌடி ஒருவரைத் தாக்க முற்படுகிறார். அன்பையும் அஹிம்சையையும் போதிக்கும் ஆசிரியைக்குள் எங்கிருந்து வந்தது அந்த தைரியம்? இந்த இடத்தில்தான் ட்விஸ்ட் இருக்கிறது.

ஜோதிகா
ஜோதிகா

ஜோதிகாவின் அக்கா நக்மா நடித்தாரே 'பாட்ஷா' , அந்தப் படத்தின் கதை போலவே இந்தப் படத்தில் ஆசிரியை ஜோதிகாவுக்கும் இன்னொரு முகம் இருக்கிறது. படக்குழு இதுவரை அந்தக் கேரக்டர் குறித்து எதுவும் பேசவில்லை.

நமது சோர்ஸில் விசாரித்தோம். அதன்படி, துடிப்பான ஓர் இளம் அதிகாரியாக ராணுவப் பணியில் சேர்கிறார் ஜோதிகா. அங்கு இவரது செயல்பாடுகள் பாராட்டப்படுகின்றன. ராணுவத்தில் ப்ரமோஷன் கிடைக்க இருக்கிற ஒரு சமயத்தில் திடீரென தன்னுடைய ராணுவ வேலையை ராஜினாமா செய்து ஆசிரியையாக கிராமத்துக்கு வருகிறார்.

கிராமத்துக்கு ஏன் ஆசிரியையாக வருகிறார்? அங்கு என்ன பிரச்னை என்பதெல்லாம்தான் மீதிக்கதை. ஜோதிகா ராணுவ அதிகாரியாக நடித்த காட்சிகள் சென்னை வண்டலூர் அருகிலுள்ள போலீஸ் அகாடமியில் வைத்தே ஷூட் செய்யப்பட்டனவாம்.

ஜோதிகா
ஜோதிகா
'ராணுவ உடையில் நான் மிடுக்கா இருக்கேன்ல' என ஷூட்டிங் ஸ்பாட்டில் சக ஆர்ட்டிஸ்டுகளிடம் கேட்டபடியே உற்சாகமாக அந்தக் காட்சிகளை நடித்துக் கொடுத்தாராம் ஜோதிகா.
- `ராட்சசி' படத்திலிருந்து...