Published:Updated:

``நீ விளையாடுறது என்கிட்ட இல்ல... எமன்கிட்ட!'' - விக்ரம் ஆக்‌ஷனில் கலக்கும் `கடாரம் கொண்டான்' டிரெய்லர்!

விக்ரம், அக்‌ஷரா ஹாசன் நடித்த 'கடாரம் கொண்டான்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

'சாமி ஸ்கொயர்' படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `கடாரம் கொண்டான்’. இந்தப் படத்தில் விக்ரமுடன் நடிக்கிறார் அக்ஷரா ஹாசன். விக்ரமின் 56-வது படமான இந்தப் படத்தை ராஜேஷ் எம். செல்வா இயக்கி உள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசனின் பிறந்தநாளன்று வெளியிட்டிருந்தனர். இந்தப் படத்தில் விக்ரமின் லுக் அனைவராலும் பேசப்பட்டது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் நிறைந்த இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.