Published:Updated:

இது கவிஞர் வீட்டு தூரிகை!

தூரிகை
பிரீமியம் ஸ்டோரி
News
தூரிகை

டிசைனிங் தவிர ‘பீயிங் விமன்’ என்ற ஆன்லைன் டிஜிட்டல் பத்திரிகை ஒண்ணு நடத்தறேன்.

‘உன் சமையலறையில்...’ தொடங்கி, ‘உன்ன நினைச்சு நினைச்சு உருகிப் போனேன் மெழுகா’ வரை மெலடி, கானா, அதிரடி எனக் கலந்து கலக்கியவர் கபிலன். அப்பாவைப் பின்பற்றிப் பாட்டெழுத வருகிறார் அவர் மகள் தூரிகை.

கபிலன் வீட்டுத் தூரிகைக்குக் கவி பாட மட்டுமல்ல, காஸ்ட்யூம் டிசைனிங்கும் தெரியும். மியூசிக் ஆல்பங்களுக்குப் பாடல்கள் எழுதுவது, சின்னத்திரை சீரியல் நட்சத்திரங்களுக்கும் மாடல் களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்வது, இணைய இதழ் நடத்துவது என தூரிகையின் 24 மணி நேரமும் வேலை வேலைதான். தூரிகையும் பிடிப்பாராம் தூரிகை.

இது கவிஞர் வீட்டு தூரிகை!

‘`டிசைனிங் தவிர ‘பீயிங் விமன்’ என்ற ஆன்லைன் டிஜிட்டல் பத்திரிகை ஒண்ணு நடத்தறேன்.பெண்களுக்கான சலுகைகள் முதல் சைக்காலஜிவரைக்கும் எல்லாத்துக்குமான தளம் அது. ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெஹானா மேடம் என் ஃபிரெண்டு. திடீர்னு ஒருநாள் என்னைக் கூப்பிட்டு அவங்களுடைய ஆல்பத்துக்குப் பாட்டு எழுதறியான்னு கேட்டாங்க. ‘என்ன தவம் செய்தேன்...’ என்ற அந்த அம்மா பாடலை ஒரே நாள்ல எழுதி முடிச்சேன். அவங்களுக்கே இன்னோர் ஆல்பத்துக்கும் எழுதியிருக்கேன். தூரிகை கபிலன்.காம் என்ற பெயர்ல வலைப்பூ வெச்சிருக்கேன். அதுல நிறைய பிரபலங்களைப் பேட்டி எடுத்து எழுதறேன்.

இது கவிஞர் வீட்டு தூரிகை!

சினிமாவுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பு வருது. ஆனா அதுக்கு நான் இன்னும் நிறைய தயாராகணும்னு தோணுது. ஆல்பத்துக்கு எழுதினதுக்கு நிறைய பாராட்டுகளும் நல்ல வரவேற்பும் கிடைச்சது. அப்பா என்ன சொல்வாரோன்னு எனக்குள்ள ஒரு பயம் இருந்தது. ஆல்பம் ரிலீசாகிற வரைக்கும் அவருக்கும் அந்த பயம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். பெயரைக் கெடுத்துடக்கூடாதேன்னு நினைச்சிருப்பார். ஆனா ஆல்பம் ரிலீசான பிறகு அவர் முகத்துல நிம்மதியையும் நம்பிக்கையையும் பார்த்தேன். நான் பாஸாயிட்டேன்ல?

இது கவிஞர் வீட்டு தூரிகை!

நான் எழுத வந்தது விபத்து. ஆனா அப்பா பிறவி மேதை. தமிழ் இலக்கணமெல்லாம் படிச்சு, முனைவர் பட்டம் வாங்கினவர். கபிலனின் மகள் என்பது எனக்கு பலம்தான். செலிபிரிட்டியின் குழந்தையா இருக்கிறது எவ்வளவு சுகமானதோ, அதே அளவுக்கு சவாலானதும்கூட. அந்தக் குழந்தைகளுக்குத்தான் அந்தக் கஷ்டம் புரியும். திறமை உள்ள எத்தனையோ பேர் தம்மேல வெளிச்சம் விழாதான்னு காத்திட்டிருப்பாங்க. ஆனா பிரபலங்களின் குழந்தைங்க மேல அந்த வெளிச்சம் முதல்லயே விழுந்துடும். அப்புறம்தான் திறமை இருக்கா இல்லையான்னு பார்ப்பாங்க. அந்தத் திறமை இல்லைன்னா தாக்குப்பிடிக்க முடியாது. இன்னாரோட பொண்ணு இப்படிப் பண்ணிட்டாங்கன்னு சட்டுனு சொல்லிடுவாங்க. அதையெல்லாம் ரொம்ப கவனமா கையாளணும்.’’

இது கவிஞர் வீட்டு தூரிகை!

“வாரிசு என்பதை மீறி, தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்களுக்கான வெற்றிடத்தை நிரப்பும் திட்டம் இருக்கா தூரிகை?”

‘`எழுத்துல ஆண் பெண் பாகுபாடு பார்க்க வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். ஆர்வம்தான் அடிப்படை. அப்பாவைப் பார்த்து எனக்கு அந்த ஆர்வம் வந்திருக்கலாம். தாமரையின் வரிகளில், வார்த்தைகளில் ஒரு பவர் இருக்கும். அந்த பவர் இருக்கிறவங்க தாக்குப் பிடிக்கிறாங்க. யாருடைய சாயலும் இல்லாம நமக்குன்னு ஒரு ஸ்டைலை உருவாக்க வேண்டியதும் இங்கே அவசியம். எனக்கும் அதே விதிதான்’’ என்பவர், மீண்டும் அப்பா பெண்ணாகிறார்.

இது கவிஞர் வீட்டு தூரிகை!

‘`அப்பாவோட பாடல்கள் எல்லாமே எனக்கு ஸ்பெஷல். அதுலயும் ரஹ்மான் சார் காம்போல அப்பா எழுதின எல்லாமே என் ஃபேவரைட்ஸ் ‘என்னோடு நீ இருந்தால்’. தெகிடில ‘விண்மீன்’ ரொம்பப் பிடிக்கும். லேட்டஸ்ட்டா ஜெயில் படத்துல ‘காத்தோடு காத்தானேன்’ பிடிக்குது.

அப்பாவுக்கு நான்தான் ஸ்டைலிஸ்ட். இப்போ வரைக்கும் அவர் எங்கே போனாலும் என்கிட்டதான் டிரெஸ் சாய்ஸ் கேட்பார். அப்பா படமே பார்க்க மாட்டார். அப்பாவும் நானும் சேர்ந்து பார்த்த கடைசி படம் ‘ஐ’. அவருடைய உலகம் புத்தகங்கள். அதிகம் பேசிக்க மாட்டோம். அநாவசியமா எதிலும் தலையிட மாட்டார். நிறைய சொல்லிக் கொடுப்பார். வீட்டுக்குள்ளே சினிமாவை அனுமதிச்சதில்லை. ‘திறமையை நம்பு. அநாவசிய மான விஷயங்களில் தலையிடாதே. நீ செய்யற ஒவ்வொரு காரியத்துக்கும் நீதான் பொறுப்பு. கவனமா இரு’ன்னு மட்டும் அட்வைஸ் பண்ணினார். பாட்டு எழுதறதுலேருந்து சோஷியல் மீடியாவில் போஸ்ட் போடற வரைக்கும் எல்லாத்துக்கும் இது பொருந்தும்.’’

இது கவிஞர் வீட்டு தூரிகை!
இது கவிஞர் வீட்டு தூரிகை!

``பொறுப்பான மகளாகப் பேசுபவரின் எதிர்கால அடையாளம் இன்ஜினீயரா, டிசைனரா, பாடலாசிரியரா?’’

இது கவிஞர் வீட்டு தூரிகை!

‘`நிச்சயமா இன்ஜினீயரிங் இல்லை. டிசைனிங் என் புரொஃபஷன். பாடல்கள் எழுதறது என் பேஷன். காஸ்ட்யூம் டிசைனரா வொர்க் பண்ணணும்னு ஐடியா இருக்கு. ஆனா சினிமாவில்தான் வொர்க் பண்ணணுமான்னு தெரியலை. டிசைனிங்கைப் பொறுத்தவரை முகம் சுளிக்கவைக்கிற மாதிரி பண்ணுறதில்லைங்கிறது என் கொள்கை. யாஷிகாவுக்கு ஒருமுறை டிசைன் பண்ணினேன். அவங்க உடல் முழுக்க மூடற மாதிரியான டிரெஸ்ல இருக்கிற படங்களை சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்ண மாட்டாங்க. அவங்களுக்காக செலவு பண்ணி காஸ்ட்யூ மெல்லாம் ரெடி பண்ணி போட்டோ ஷூட் பண்ணி னோம். ஆனா அவங்க படங்களை போஸ்ட் பண்ணலை. ‘இது என் ஜானரே இல்லை. உடம்பு முழுக்க மூடற மாதிரி காஸ்ட்யூம்ஸ் கொடுத்துட்டீங்க. அதனால போஸ்ட் பண்ணலை’ன்னு சொன் னாங்க. கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தது. ஆனாலும் என் கொள்கையில நான் உறுதியா இருந்தேன், இருப்பேன்.’’

தூரிகையின் சொற்களிலும் அவர் சொன்ன பவர் தெரிகிறது.