ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
கார்ஸ்
Published:Updated:

நான் வென்யூ வெறியை! - சின்னத்திரை நடிகை ஸ்வேதா சுப்பிரமணியன்

சுவேதா சுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
News
சுவேதா சுப்பிரமணியன்

டிவி செலிபிரிட்டி கார்: ஹூண்டாய் வென்யூ

‘‘ஒருவருடைய வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருக்கும் சக்தி, ஒரு காருக்கு இருக்குன்னு சொன்னா உங்களால அதை நம்ப முடியுமா? யாருக்காக, எதுக்காக வாழணும்னு ஒருவித மன அழுத்தத்தில் இருந்தவரை மீட்டுத் துள்ளிக் குதித்து ஓடச் செய்யுற ஆற்றல் காருக்கு இருக்கு... அதுவும் என் காருக்கு இருக்கு! அதுதான் இப்போதைக்கு என் செல்லம்; பேபி எல்லாமே!'’ எனப் புன்னகைக்கிறார், சுவேதா சுப்பிரமணியன். சின்னத்திரை நடிகை, தொகுப்பாளர் என நமக்குப் பழக்கப்பட்ட முகம்.

அவர் செல்லம், பேபி என்று செல்லம் கொஞ்சுவது, லேட்டஸ்ட்டாக தான் வாங்கிய ஹூண்டாய் வென்யூவைத்தான். வென்யூதான் தன் முதல் குழந்தை எனப் பாவித்து, அதை டெலிவரி எடுத்த நாளைப் பிறந்த நாளாகவெல்லாம் கொண்டாடும் கார் பிரியை... இல்லை வென்யூ வெறியை சுவேதா சுப்பிரமணியன். ‘கொஞ்சம் ஓவராத்தான் பேசுறாங்களோ’ என்று நான் நினைத்தாலும், ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் தன் கார் மீது வைத்திருக்கும் பாசம் தெறிக்கிறது.

‘‘நான் பொறந்ததுக்கு அப்புறமாகத்தான், முதன்முதலா எங்க வீட்ல கார் வாங்கினதாக என் அப்பா அடிக்கடி சொல்லுவார். அப்போ எங்ககிட்ட டொயோட்டா கரோலா வெள்ளை நிற கார் இருந்துச்சு. அப்பா அதை ரொம்ப கேர் எடுத்து பார்த்துப்பார். என்னோட நான்காவது பொண்ணுதான் இந்தக் கார்னு பெருமையா சொல்லுவார். அவர்கிட்ட இருந்துதான் காரை எப்படி நேசிக்கணும் என்கிற எண்ணம் எனக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன்.

2012-ல் அப்பாவுக்காக ஒரு கார் வாங்கினேன். ஹோண்டா சிவிக், மாருதி ஸ்விஃப்ட் – இது ரெண்டும்தான் என் ட்ரீம் கார். எதிர்பாராதவிதமா 2020-ல் என்கிட்ட வந்ததுதான் ஹூண்டாய் வென்யூ. ரொம்பவே பர்சனல் கனெக்ட் எனக்கும் அந்தக் காருக்கும் இருக்கு. அது ஜஸ்ட் ஒரு கார்னு என்னால யோசிக்கவே முடியாது. நிஜமா அது ஒரு அழகான விஷயம். அதை அனுபவிச்சிருந்தா மட்டும்தான் நான் சொல்றதை உணர முடியும்.

2013-ல் லைசன்ஸ் வாங்கிட்டேன். எப்போவாச்சும் ஓட்டுவேன். ஆனா, தனியா டிராபிக்ல ஓட்ட ரொம்ப பயப்படுவேன். என் ஃப்ரெண்ட்ஸ் காரை ரிவர்ஸ்ல சூப்பரா எடுத்துக் கொடுத்திடுவேன். ஆனா, தனியா ஓட்டிட்டுப் போக கொஞ்ச பயமும், தயக்கமும் இருந்துச்சு. மறுபடியும் கார் ஓட்டணும்னு நினைச்சதுக்கு முக்கியக் காரணமே ஓலாவும் உபரும்தான். நைட் நேரத்துல ஷூட்டிங் முடிஞ்சா வீட்டுக்குப் போக ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். திடீர்னு கேன்சல் பண்ணுவாங்க.. அவங்ககூட சண்டை போட்டுட்டு இருக்கணும்; அதெல்லாம் எதுக்குன்னுதான் அப்பப்ப கார் ஓட்டிட்டு இருந்தேன்.

நான் வென்யூ வெறியை! - சின்னத்திரை நடிகை ஸ்வேதா சுப்பிரமணியன்

வென்யூவில் முதன் முதலா அம்மா, அப்பாவுடைய திருமண நாளான மே 6, 2021-ல் அவங்க ரெண்டு பேரையும் மகாபலிபுரத்துக்குக் கூட்டிட்டுப் போனேன். அப்ப நான் கார் ஓட்டுறதைப் பார்த்து, `எவ்வளவு சூப்பரா ஓட்டுறா என் பொண்ணு’ன்னு ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அதுக்கப்புறம் கேரளா, கோயம்புத்தூர்னு வென்யூவோட டிராவல் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

வென்யூ பேபி வந்த பிறகு என் வாழ்க்கையே மாறிப் போச்சுன்னுதான் சொல்லணும். என்னுடைய முதல் குழந்தை அந்தக் கார் என்பதால்தான் அதுக்கு `வென்யூ பேபி'ன்னு பெயர் வச்சிருக்கேன். நான் லைஃப்ல ரொம்பவே மோசமான மனநிலையில் இருந்தப்ப எனக்குன்னு இருந்தது இந்தக் கார் மட்டும்தான்! என்னை மோட்டிவேட் பண்ணி இந்த உலகத்தை வேறொரு கோணத்துல பாருன்னு உற்சாகப்படுத்தினதுதான் என் வென்யூ!

கேள்விக்குறியா இருந்த என் வாழ்க்கையை ரெண்டு வருஷத்துல வென்யூ தலைகீழாக்கிடுச்சு. யாருக்காக உயிர் வாழணும் என்கிற கேள்வி எனக்குள்ள வந்த சமயம், `உனக்காக நான் இருக்கேன்ல.. எனக்காக ஓடு, சம்பாதிச்சு இஎம்ஐ கட்டு!'ன்னு வென்யூ சொன்ன மாதிரி இருந்துச்சு. அதுக்காகவே மறுபடி ஓட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு தடவை ஒவ்வொரு விஷயத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்து, என்னை மீண்டும் பிறக்கச் செய்யுற என் வென்யூ பேபியை நான் செலிபரேட் பண்ணாம யாருங்க செலிபரேட் பண்ணுவாங்க? அதனால்தான் ஆகஸ்ட் 31, 2020 செமையா டெகரேட் எல்லாம் பண்ணி செலிபரேட் பண்ணிட்டு இருக்கேன். சொன்னா நம்பமாட்டீங்க… கொஞ்சம் எமோஷனலான கார் என்னோட கார்!’’ என தனது காரை இறுகப் பற்றிக் கொண்டு முத்தமிட்டார்.

-