Published:Updated:

Dhanush Exclusive : `கேப்டன் மில்லர்', `D50' தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி; தனுஷ் படங்கள் அப்டேட்

`கர்ணன்' படப்பிடிப்பின் போது..

இதற்கிடையே தனுஷின் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்குகிறது. இதற்காக இன்று குற்றாலத்திற்கு புறப்பட்டுவிட்டார் தனுஷ்.

Published:Updated:

Dhanush Exclusive : `கேப்டன் மில்லர்', `D50' தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி; தனுஷ் படங்கள் அப்டேட்

இதற்கிடையே தனுஷின் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்குகிறது. இதற்காக இன்று குற்றாலத்திற்கு புறப்பட்டுவிட்டார் தனுஷ்.

`கர்ணன்' படப்பிடிப்பின் போது..
சில ஆண்டுகளாக படம் தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்த தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் விரைவில் மீண்டும் படம் தயாரிக்க உள்ளது என சில மாதங்களுக்கு முன்னரே செய்தி வெளியிட்டிருந்தோம்.

மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கிவிட்டது வொண்டர்பார் நிறுவனம். அதன் 15வது தயாரிப்பாக `கர்ணன்' கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

தனுஷ்- மாரி செல்வராஜ்
தனுஷ்- மாரி செல்வராஜ்

`கர்ணன்' படத்தை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து படம் பண்ணுவேன் என தனுஷ் முன்பே அறிவித்திருந்தார். ஆனால் சரியான தயாரிப்பாளர்கள் அமையாமல் தள்ளிக் கொண்டே போனதால் தனுஷும் அடுத்தடுத்த படங்களுக்கு சென்றுவிட்டார். நேற்று `கர்ணன்' வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டது என்பதால் மாரி செல்வராஜ் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட தீர்மானித்தார். உடனே மாரி செல்வராஜை தன் வீட்டிற்கு அழைத்து, அடுத்த படம் குறித்து அறிவித்திருக்கிறார். தனுஷுடன் `ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

'கர்ணன்'
'கர்ணன்'
RAHUL DEO

மாரி செல்வராஜ் இப்போது உதயநிதியை வைத்து இயக்கியிருக்கும் `மாமன்னன்' படத்தின் போஸ்ட்புரொடக்‌ஷன் வேலைகள் நிறைவடைந்துவிட்டது. அடுத்து அவரது தயாரிப்பில் சிறுவர்கள் நடிக்கும் `வாழை' படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என்கிறார்கள். இதற்கிடையே தனுஷின் `கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு மீண்டும் நாளை தொடங்குகிறது. இதற்காக இன்று குற்றாலத்திற்கு புறப்பட்டுவிட்டார் தனுஷ்.

'கேப்டன் மில்லர்' பூஜையின் போது
'கேப்டன் மில்லர்' பூஜையின் போது

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் அதன் படப்பிடிப்பு மே மாதம் வரை நடைபெறலாம் என்கிறார்கள். இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு சன் பிக்சர்ஸின் D50 படத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ்.

தனுஷின் 50வது படத்தை முடித்த பிறகே, மாரி செல்வராஜ் படம் தொடங்கும் என்றும், இதற்கான வேலைகள் ஜூன் மாதத்தில் இருந்து ஆரம்பித்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.