Published:Updated:

ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத் பாபு; என்ன நடந்தது? நண்பர்கள் சொல்வது இதுதான்

சரத் பாபு

'' உடல்நிலை சோர்வாக இருக்கிறது வர முடியாத சூழல்' என அவர் சொன்னதோடு, படத்தின் விழாக்களுக்கும் அவர் வரவில்லை. சரத் பாபுவின் உடல்நிலை குறித்து பத்திரிகையில் தகவல் வந்ததும்...''

Published:Updated:

ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத் பாபு; என்ன நடந்தது? நண்பர்கள் சொல்வது இதுதான்

'' உடல்நிலை சோர்வாக இருக்கிறது வர முடியாத சூழல்' என அவர் சொன்னதோடு, படத்தின் விழாக்களுக்கும் அவர் வரவில்லை. சரத் பாபுவின் உடல்நிலை குறித்து பத்திரிகையில் தகவல் வந்ததும்...''

சரத் பாபு
நடிகர் சரத் பாபுவின் உடல்நிலை குறித்து சமீபத்தில் சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகிய வண்ணமிருந்தன.

சரத்பாபுவின் நிஜப்பெயர் சத்யம் பாபு தீட்சிதலு. அவருக்கு வயது 71. ரஜினியின் 'முள்ளும் மலரும்', 'நெற்றிக்கண்', 'அண்ணாமலை', 'முத்து' உள்பட தமிழில் பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. 1973-ம் ஆண்டு 'ராமராஜ்யம்' என்ற தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரத்பாபு. 1977-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய 'பட்டினப்பிரவேசம்' படம் மூலம் தமிழுக்கு வந்தார். எண்பது காலகட்ட சினிமாவில் கதாநாயகனாகவும் கவர்ந்திழுத்தவர். பின்னர், வில்லன், குணச்சித்திரம் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது தனிப்பட்ட நடிப்பினால் முத்திரை பதித்தார். தமிழில் கடைசியாக பாபி சிம்ஹாவின் 'வசந்த முல்லை'யில் நடிந்திருந்தார்.

சரத்பாபு
சரத்பாபு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பெங்களூருவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் 'வென்டிலேட்டர்' மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டும் உடல்நிலை முன்னேற்றம் அடையாததால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சரத்பாபுவின் உடல்நிலை குறித்து 'வசந்த முல்லை' பட குழுவினரிடம் பேசினால், 'கடந்த பிப்ரவரில் எங்க படம் வெளியானது. எங்க படத்தின் புரொமோஷனுக்காக சரத்பாபு சாரையும் அழைத்தோம். ஆனால், 'உடல்நிலை சோர்வாக இருக்கிறது வர முடியாத சூழல்' என அவர் சொன்னதோடு, படத்தின் விழாக்களுக்கும் அவர் வரவில்லை. சரத்பாபுவின் உடல்நிலை குறித்து பத்திரிகையில் தகவல் வந்ததும், அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. விரைவில் அவர் நலம் பெற்று வர வேண்டும்'' என்கிறார்கள்.