Published:Updated:

Varisu Audio Launch: "சிம்பு மட்டுமல்ல, அனிருத்தும் ஒரு பாட்டு பாடியிருக்கார்!" - தமன் நெகிழ்ச்சி

வாரிசு விஜய்

"'சூர்யவம்சம்' 175-வது நாள் விழாவில் வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய்தான் எனக் கூறினேன். கலைஞர்கூட என்னிடம்..." சரத்குமார் பேச்சு.

Published:Updated:

Varisu Audio Launch: "சிம்பு மட்டுமல்ல, அனிருத்தும் ஒரு பாட்டு பாடியிருக்கார்!" - தமன் நெகிழ்ச்சி

"'சூர்யவம்சம்' 175-வது நாள் விழாவில் வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய்தான் எனக் கூறினேன். கலைஞர்கூட என்னிடம்..." சரத்குமார் பேச்சு.

வாரிசு விஜய்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் `வாரிசு' இசை வெளியீட்டு விழா ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் 'வாரிசு' திரைப்படம் குறித்தும் விஜய் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

"ஹாய் செல்லம், லவ் யூ..." என 'கில்லி' பட சிக்னேச்சர் டைலாக்குடன் தனது பேச்சை ஆரம்பித்த பிரகாஷ் ராஜ், "ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் தளபதியோட 14 வருஷத்துக்கு அப்புறம் ஒரு படம் பண்றேன். சரத்குமார் என் இளைய தம்பி, வயசே ஆகாது இவருக்கு! ஷூட்டிங் நடக்கும்போது விஜய் வீட்டுக்குக் கூப்பிடுவார். குடும்பம் மாதிரி பார்த்துப்பாரு.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

'வாரிசு' யாருன்னு பார்த்தா அது விஜய்தான். விஜய் மாதிரி நடிகர்களால்தான் மொழியைத் தாண்டி திறமைகளைக் கொண்டு வர முடியும். 'வாரிசு' முதல் நாள் ஷூட்டிங்கில் விஜய்யின் கண்ணுக்கு கண் பார்த்து ஒரு வசனம் பேசினேன். அந்த காட்சி முடிந்தவுடன் 'செல்லம்... இந்தக் கண்ணைப் பார்த்து எவ்ளோ நாளாச்சுன்னு' விஜய் நெகிழ்ந்து பேசினார். விஜய் ரசிகர்களுக்காகப் பலவற்றைப் பார்த்து செய்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில விஜய் ரொம்பவே பிரமாதமாக நடிச்சிருக்காரு. முதல் முதலாக இங்கே சொல்கிறேன். நான் விஜய்யின் ரசிகனாக மாறிவிட்டேன். வெற்றிக்கு வாரிசு, விஜய்... நீங்க உங்க குடும்பத்தோட, தமிழ்நாடோட, இந்தியாவோட வாரிசு... நீங்க எல்லாரையும் நேசிக்க வேண்டியது நிச்சயம். இந்தத் திரைப்படம் நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம்." என்றார்.

இதையடுத்துப் பேசிய சரத்குமார், "'சூர்யவம்சம்' 175-வது நாள் விழாவில் வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய்தான் எனக் கூறினேன். கலைஞர்கூட என்னிடம் 'நீயே ஹிட் படம் கொடுத்துருக்க. நீயே ஏன் அப்படி சொன்ன'ன்னு கேட்டாரு. ஆனா, என் மனசுல இருந்து அதை நான் சொன்னேன். இன்னைக்கு அது நிஜமாகியிருக்கு!" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இடையில் மேடையில் `ரஞ்சிதமே' பாடலை பாடி முடித்துவிட்டு மானசி பேச நினைக்கையில் மைக் வேலை செய்யவில்லை. அவருக்கு வேறு யாரும் மைக்கை மாற்றி வழங்காத நிலையில், விஜய்யே தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று வேறு மைக்கை வாங்கிக் கொடுத்தார்.
மானசிக்கு மைக் கொடுத்த விஜய்
மானசிக்கு மைக் கொடுத்த விஜய்

'வாரிசு' இசையமைப்பாளர் தமன் பேசுகையில், "'பூவே உனக்காக' சமயத்துல எஸ்.ஏ.ராஜ்குமார் சார்கிட்ட மியூசிக் வாசிச்சிருக்கேன். நான் தீவிரமான விஜய் ரசிகன். விஜய் சாருக்காக போஸ்டர் எல்லாம் ஒட்டிருக்கேன். என் பையன் பத்தாவது படிக்கிறான். ஒவ்வொரு நாளும் ஸ்கூல் போகும்போது, நல்லா மியூசிக் போட்டு என் மானத்தைக் காப்பாத்திடுன்னு சொல்லிட்டே போவான்.

விஜய், தமன்
விஜய், தமன்

இயக்குநர் வம்சி மாட்டு வண்டிக்கு அலாய் வீலு போட்டு சுத்திருக்காரு. அதுதான் இந்த 'வாரிசு'. படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் மும்முரமா போயிட்டு இருக்கு. இன்னும் இரண்டு நாளில் எல்லாத்தையும் முடிச்சு வம்சிக்கிட்ட படத்தைக் காட்டப்போறேன். என் 27 வருடக் காத்திருப்புதான் 'வாரிசு'. சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு இன்றைக்குதான் வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது. நான் வாங்கிய விருதுகளைவிட உங்களின் பாராட்டுகள்தான் எனக்கு பெருசு!" என்றவர் மேடையிலேயே கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசியவர், "சிம்பு ஒரு தளபதி ஃபேனா வந்து பாடிக் கொடுத்தாரு. ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் அனிருத்தை வெச்சு ஒரு பாட்டு ரெக்கார்டு பண்ணியிருக்கோம்!" என்றார்.