கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

வசந்த முல்லை - சினிமா விமர்சனம்

வசந்த முல்லை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வசந்த முல்லை - சினிமா விமர்சனம்

தூக்கமின்மை, அதீத மன அழுத்தத்தால் உண்டாகும் சிக்கலை வைத்து ஒரு பேன்டஸி கலந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா.

மன அழுத்தம் என்னென்ன பிரச்னைகளைக் கொண்டு வரும், ஒரு பயணத்தை எப்படியெல்லாம் மாற்றும் என ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக விவரிக்கிறது இந்த ‘வசந்த முல்லை.'

ஐ.டி ஊழியரான சிம்ஹா, கடுமையான வேலைப்பளுவால் தீவிரமான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார். மருத்துவரின் அறிவுரைப்படி தன் காதலியான காஷ்மீராவுடன், ரிலாக்ஸ் ட்ரிப் சொல்கிறார். இருவரும் ஒரு மலைப்பிரதேசத்தில் இருக்கும் ‘வசந்த முல்லை' என்ற ஹோட்டலில் தங்க, அங்கு அடுத்தடுத்து நிகழும் த்ரில் சம்பவங்களே கதை.

நாயகன் ருத்ராவாக சிம்ஹா, உளச்சிக்கலால் பாதிக்கப்பட்டவராகத் திரையை ஆக்கிரமிக்கிறார். கை நடுக்கம், கண்கள் சிவப்பது, மயக்க நிலை போன்றவற்றை நம்பும்படி திரையில் கொண்டு வந்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் நூறு சதவிகித உழைப்பை வழங்கியிருக்கிறார். நாயகி காஷ்மீராவுக்கு முக்கியமான பாத்திரம். அவரின் முந்தைய படங்களைவிட இதில் நடிப்பதற்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். கௌரவத் தோற்றத்தில் வரும் ஆர்யா, அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

வசந்த முல்லை - சினிமா விமர்சனம்

தூக்கமின்மை, அதீத மன அழுத்தத்தால் உண்டாகும் சிக்கலை வைத்து ஒரு பேன்டஸி கலந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா. 108 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படத்தில் முடிந்த அளவு தன் பரபரப்பான திரைக்கதை மூலம் ஒரு பேன்டஸி உலகுக்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்.

கோபி அமர்நாத்தின் கேமரா, இயற்கைக் காட்சிகளுடனான கார்ப் பயணம், கொட்டும் மழையில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள், கார் சேஸிங் எனப் பல தளங்களில் கூடவே பயணித்து ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. படத்தைச் சுவாரஸ்யம் குறையாமல் க்ரிஸ்ப்பாகத் தொகுத்திருக்கிறார் விவேக் ஹர்ஷன். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை மிரட்டிய அளவுக்குப் பாடல்கள் ஈர்க்கவில்லை.

வசந்த முல்லை - சினிமா விமர்சனம்

படம் பிரதான கதைக்குள் செல்ல எடுத்துக்கொண்ட கால அவகாசத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட இது ஒரு குறும்படத்துக்கான கான்செப்ட் என்ற உணர்வே எட்டிப் பார்க்கிறது. சுவாரஸ்யத்துக்காகச் சேர்க்கப்பட்ட டைம் லூப் உள்ளிட்ட பேன்டஸி விஷயங்கள் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் முடிந்த உணர்வையே தருகின்றன. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இதுவரை சொல்லப்பட்ட கதையை முற்றிலுமாகக் காலி செய்வது, அந்த பேன்டஸி எபிசோடுக்குச் சரியான முடிவில்லாமல் போனது போன்றவை சறுக்கல்கள்.

புதியதொரு கதைக்களம், டெக்னிக்கலாகச் சிறப்பான தயாரிப்பு என்ற இரண்டு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்திய வித்தியாசமான படம் என்ற அளவில் மட்டும் திருப்திப்பட்டுக்கொள்கிறது இந்த ‘வசந்த முல்லை.'