Published:Updated:

Sarathbabu: `முள்ளும் மலரும்', `அண்ணாமலை' படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

சரத்பாபு

`முள்ளும் மலரும்' `வேலைக்காரன்', 'அண்ணாமலை' உள்பட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சரத்பாபு (71) காலமானார்.

Published:Updated:

Sarathbabu: `முள்ளும் மலரும்', `அண்ணாமலை' படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

`முள்ளும் மலரும்' `வேலைக்காரன்', 'அண்ணாமலை' உள்பட பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சரத்பாபு (71) காலமானார்.

சரத்பாபு
தமிழ் சினிமாவில் 1970களின் கடைசி காலகட்டத்தில் அறிமுகமாகி, கதாநாயகனாக, நண்பனாக, வில்லனா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சரத்பாபு. ரஜினியின் `முள்ளும் மலரும்' `வேலைக்காரன்', `அண்ணாமலை' உள்பட பல படங்களில் நடித்து, தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். 

இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சரத்பாபு
சரத்பாபு

இதனிடையே, அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. தெலுங்கு, தமிழ் ஊடகங்களிலும் இதுதொடர்பாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ், "இது பொய்யான செய்தி அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார்" என்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த சரத்பாபு, தனது 71வயதில் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.