Published:Updated:

``இத்தனை வருடங்களில் இவ்வளவு அழகாக உன்னை நான் பார்த்ததில்லை!" -விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பதிவு

நயன்தாரா-விக்னேஷ்சிவன்

இன்று நயன்தாராவுக்குப் பிறந்த நாள் என்பதால், பாடல் எழுதுவதில் கைதேர்ந்த விக்னேஷ் சிவன், தன் காதல் மனைவி நயன்தாராவுக்கு க்யூட்டாக கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

``இத்தனை வருடங்களில் இவ்வளவு அழகாக உன்னை நான் பார்த்ததில்லை!" -விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சிப் பதிவு

இன்று நயன்தாராவுக்குப் பிறந்த நாள் என்பதால், பாடல் எழுதுவதில் கைதேர்ந்த விக்னேஷ் சிவன், தன் காதல் மனைவி நயன்தாராவுக்கு க்யூட்டாக கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
நயன்தாரா-விக்னேஷ்சிவன்

நடிகை நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். கியூட்டான காதல் ஜோடிகளாக வலம் வந்த நயன்தாரா-விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். பின்னர், வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த விசயத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்திருந்தார்.

இந்நிலையில் இன்று நயன்தாராவுக்கு பிறந்த நாள் என்பதால் பாடல் வரிகளில் கைதேர்ந்த விக்னேஷ்சிவன், தன் காதல் மனைவி நயன்தாராவிற்கு கியூட்டாக கவிதை நடையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

"நயன், இது உன்னுடனான ஒன்பதாவது பிறந்த நாள் எனக்கு உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு பிறந்த நாளும் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நிறைய நினைவுகளைக் கொண்டது, வித்தியாசமானது.

ஆனால், இப்போது கணவனும் மனைவியுமாக! அழகான ஆசீர்வதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் தந்தை மற்றும் தாயாக! ஒரு வாழ்க்கையை நாம் தொடங்கியிருப்பதால், இது எல்லாவற்றையும் விட சிறந்த, ரொம்பவும் ஸ்பெஷலான பிறந்த நாள் நமக்கு.

நான் எப்போதும் உன்னை ஒரு சக்திவாய்ந்த நபராகத்தான் பார்த்தேன்! எதையும் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்பவர் ! இத்தனை வருடமும் உங்களை ஒரு வித்தியாசமான நபராகத்தான் உன்னைப் பார்த்தேன்! வாழ்க்கையில் மட்டுமல்லாமல் எல்லாவற்றிலும் உன் நேர்மையால் எப்போதும் ஈர்க்கப்பட்டேன்! மனநிறைவுடன் இருக்கிறாய்!

ஆனால் இன்று !

நான் உன்னை ஒரு தாயாக பார்க்கும் போது! இதுவே உன்னுடைய மகிழ்ச்சியான, முழுமையான தோற்றம் என்று உணர்கிறேன். இப்போது நீ முழுமை அடைந்துவிட்டாய்! இப்போது நீ மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறாய்! இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கிறாய்! குழந்தைகள் உன்னை முத்தமிடுவதால் இப்போதெல்லாம் நீ மேக்கப் போடுவதில்லை. இத்தனை வருடங்களில் இவ்வளவு அழகாக உன்னை நான் பார்த்ததில்லை.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்

உன் முகத்தில் இப்போது இருக்கும் என்றும் மாறாத இந்தப் புன்னகையும், மகிழ்ச்சியும்! இப்போதிலிருந்து உன்னுடன் நிரந்திரமாக இருந்துவிட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

இப்போது நான் தன்னிறைவு அடைந்து விட்டதாக உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும்... திருப்தியாகவும் நன்றியுடனும் இருப்பதாக உணர்கிறேன்! எங்கள் சிறிய குழந்தைகளுடன் நாம் ஒன்றாக வளரும் எங்களின் பிறந்தநாளெல்லாம் இது போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "என் உயிர் & உலகம் என எல்லாம் என்றும் நீதான், லவ் யூ...பொண்டாட்டி, தங்கமே... பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை லேடி & சூப்பர் ஸ்டார்" என்று நெகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.