Published:Updated:

``அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!" -விக்னேஷ் சிவன் உருக்கம்!

விக்னேஷ் சிவன்

"அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது" என விக்கேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Published:Updated:

``அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!" -விக்னேஷ் சிவன் உருக்கம்!

"அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது" என விக்கேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன்
காதல் ஜோடிகளான நயந்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து இருவரும் அழகான இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுத்த செய்தியைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தனர்.

இந்நிலையில் நயந்தாரா 'ஜவான்', 'இந்தியன் -2' படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் 'நானும் ரௌடி தான்', 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் நடிகர் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. இதுகுறித்தான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ஏற்படத் தொடங்கிய பொழுது, திடீரென அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவத்தில்லை என்ற தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தன் குழந்தையைக் கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து 'அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது' என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், "என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!! வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.