Published:Updated:

Vijay 68: உறுதியான விஜய் - வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி; புதிய படத்தின் பரபர அப்டேட் இதுதான்!

நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 68' படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Published:Updated:

Vijay 68: உறுதியான விஜய் - வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி; புதிய படத்தின் பரபர அப்டேட் இதுதான்!

நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'விஜய் 68' படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 67வது படமான `லியோ'வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
விஜய் - வெங்கட் பிரபு - யுவன்
விஜய் - வெங்கட் பிரபு - யுவன்

கெளதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்காணக் காத்திருகிறது. இதையடுத்து விஜய்யின் 68வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாகவே இருந்தது. இதில் தெலுங்கு இயக்குநர்கள் உட்படப் பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில், யுவன் மற்றும் வெங்கட் பிரபு சமீபத்தில் விஜய்யைச் சந்தித்துப் பேசியது பெரும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 'விஜய் - வெங்கட் பிரபு - யுவன்' காம்போவில் ஒரு படம் ரெடி, விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கப்போகிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவியது.

Vijay 68
Vijay 68

இதனை உறுதி செய்யும் வகையில் விஜய் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில், எதிர்பார்த்தபடி, விஜய்யின் அடுத்த படமான 68வது படத்துக்கு வெங்கட் பிரபுதான் இயக்குநர், யுவன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை 'பிகில்' படத்தைத் தயாரித்த 'AGS' நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்தின் 25வது படமாகவும் இருக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாராகவிருக்கும் விஜய் 68 படத்தின் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.