கட்டுரைகள்
Published:Updated:

``போட்ல இருந்து விழுந்து, ரத்தத்தோட மிதந்துட்டு இருந்தேன்''

விஜய் ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் ஆண்டனி

என்னுடைய நடிப்பில் அதிகம் பிசினஸ் பண்ணாத படம் இதுதான். `கே.ஜி.எப்', `பாகுபலி' படங்களோட பார்ட் 2 மாதிரி, `பிச்சைக்காரன் 2' வந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்.

டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி, `பிச்சைக்காரன் 2' படத்தின் ஷூட்டிங்போது பெரும் விபத்தையும் சந்தித்தார். முகம் உடம்பெல்லாம் ஏகப்பட்ட `டிங்கரிங்' வேலை முடித்து மீண்டு(ம்) ஃப்ரெஷ்ஷாக நம் முன் வந்திருக்கிறார். படம், பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு படத்தைப் பற்றிப் பேசினார் ஆண்டனி...

சிரில் ராஜா, விஜய் ஆண்டனியாக மாறிய கதை?

``பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. இதுதான் உண்மையான பெயர். காலேஜ் முடிச்சிட்டு சென்னைக்கு வேலை தேடி அலைஞ்சப்போ, என்னுடைய பெயரை `அக்னி'ன்னு மாத்தி வெச்சுக்கிட்டேன். மதம் சார்ந்த அடையாளம் எதுவும் இருக்கக் கூடாதுன்னுதான் இப்படிப் பெயரை மாத்திக்கிட்டேன். இப்போகூட ஆஸ்கார் ரவிச்சந்திரன், டைரக்டர் சசி சார் எல்லாரும் என்னை அக்னின்னுதான் கூப்பிடுவாங்க. `சின்னப் பாப்பா, பெரிய பாப்பா' டைட்டில் சாங்ல `அக்னி'ன்னுதான் பேர் போட்டிருப்போம். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்தான் `விஜய் ஆண்டனி'ன்னு பெயர் மாற்றினார். அவருடைய பையன் விஜய் பெயரைச் சேர்த்து இப்படிப் பேர் வெச்சார்...''

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

சின்ன வயசுல இருந்தே சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்பட்டீங்களா?

``படிப்பு வரல. அப்பா கிடையாது. அப்பா இருந்திருந்தா அவருடைய பிசினஸ் பார்த்திருப்பேன் என நினைக்கிறேன். அதுக்கும் வாய்ப்பு இல்ல. என்னை மாதிரியான சாதாரண மக்களுக்கு சீக்கிரம் பணக்காரனா ஆகுறதுக்கு சினிமாதான் ஒரே வழின்னு தெரியும். ஏன்னா, சினிமால ரஜினி,் கமலைப் பார்த்து வளர்ந்தவன். இதனால, சினிமாவுக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, டான்ஸ் தெரியாது. மியூசிக் மட்டும் கொஞ்சம் தெரியும். அப்போ, சினிமால ரிலீஸான ட்யூன் கூட என்னுடைய ட்யூன் கம்பேர் பண்ணி சந்தோஷப்படுவேன். சொல்லப்போனா, மணிரத்னம் சாருக்குத்தான் மியூசிக் பண்ணுவேன்னு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டிருப்பேன். ரொம்ப நம்பிக்கையோடு இருப்பேன். அப்படியே சென்னை வந்து சவுண்ட் இன்ஜினீயர் ஆனேன். இதுக்கு அப்புறம் மியூசிக் டைரக்டர், ஹீரோ, இப்போ டைரக்டர்னு டிராவல் போயிட்டிருக்கு...''

மியூசிக் டைரக்டரா ஹிட் கொடுத்தவர், இப்போ பெருசா இசையமைக்கிறது இல்லையே?

``மியூசிக் டைரக்டரா சின்சியரா வேலை பார்த்தேன். இனியும் அப்படித்தான். நான் இசையை மிஸ் பண்ணல. ஏன்னா, என்கிட்டதான் இருக்கு. எங்கேயும் போகல. இப்போ, அதைவிட முக்கியமா டைரக்‌ஷன் பண்ணிட்டிருக்கேன். இதுல, புரொடியூஸ், எடிட்டிங் எல்லாம் பண்ணிட்டிருக்கிறதால நேரம் இல்ல. அடுத்த படத்துல மியூசிக் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். கண்டிப்பாப் பண்ணுவேன்.''

`பிச்சைக்காரன் 2' டைரக்‌ஷன்?

``இந்தப் படத்தை டைரக்‌ட் பண்ணணும்னு ஆசைப்படல. `பிச்சைக்காரன்' படத்தை சசி டைரக்‌ட் பண்ணினார். அவர் பார்ட் 2 எடுத்தா நல்லா இருக்கும்னு போனேன். ஆனா, அவர் ரொம்ப பிஸியா இருந்தார். கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் வெயிட் பண்ணுற மாதிரி இருந்தது. அதனால, நானே டைரக்டர் ஆகிட்டேன். முதல் பத்து நாள் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஏன்னா, எல்லாத்துக்கும் என்கிட்டதான் கேள்வி கேட்பாங்க. முதல் ஷெட்டியூல் எடுத்தப்போ படத்துல இருக்குற எல்லா ஆர்ட்டிஸ்ட் இருந்தாங்க. ஹேண்டில் பண்ணுறது கஷ்டமா இருந்தது. ஜான் விஜய், ஹரீஸ், ராதாரவி, ஹீரோயின் மற்றும் நான்... பிறகு போகப் போக சமாளிச்சாச்சு!''

ஷூட்டிங்ல பிரஷர் இருந்ததாலதான் விபத்து நடந்ததா?

``மலேசியாவில் டூயட் பாட்டு ஷூட்டிங் நடந்துட்டிருந்தது. அப்போ, boat ஓடிக்கிட்டிருந்தேன். கேமராவை ஒட்டி ஓட்டிட்டுப் போயிட்டேன். அடுத்து, ரெண்டாவது ரவுண்ட் போனப்போ இன்னும் க்ளோஸ் போகலாம்னு போனேன். அலை அதிகமா அடிச்சுட்டிருந்திருக்கு. அப்படியே கீழே விழுந்துட்டேன். தாடை, மூக்குல நல்ல அடி... அப்படியே தண்ணில விழுந்து ரத்தத்தோட மிதந்துட்டு இருந்தேன். அப்புறம் ஹாஸ்பிடல் போயி ஒருவழியா சரியாகி வந்திருக்கேன். கடந்த ரெண்டு நாளாதான் வெளியுலக மக்களை சந்திக்கிறேன்.''

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

இந்த விபத்து பயத்தைக் கொடுக்கலையா?

``அதெல்லாம் இல்ல. இந்த மூக்கு, மூஞ்சியெல்லாம் இல்லாமல் போனால்கூட சினிமாலதான் இருப்பேன். பிஸியா வேலை பார்த்திருப்பேன். முகம், அழகுக்காக மக்கள் பார்க்கல. கதைக்காகத்தான் வர்றாங்க. கதை நல்லா இல்லைனா, உலக அழகன் நடிச்சிருந்தாகூட படம் ஓடாது. ஒருத்தருடைய குணம்தான் முக்கியம். ஒருவர் பழகும் விதம்தான் முக்கியம்.''

நீங்கள் நடிச்ச படங்களே எத்தனையோ இருக்கும்போது, `பிச்சைக்காரன் 2' ஏன்?

``என்னுடைய நடிப்பில் அதிகம் பிசினஸ் பண்ணாத படம் இதுதான். `கே.ஜி.எப்', `பாகுபலி' படங்களோட பார்ட் 2 மாதிரி, `பிச்சைக்காரன் 2' வந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சேன். ஆனா, இது பிரமாண்டமான படம் கிடையாது. ஒரு சின்ன ஐடியாதான்... ஆனா, 1 - 2 இது ரெண்டுமே முழுக்க முழுக்க வேற மாதிரி இருக்கும். வித்தியாசமாவும் இருக்கும். முதல்ல படத்தோட திரைக்கதைதான் எழுதினேன். ஒவ்வொரு ரீலா கதை எழுத ஆரம்பிச்சு எட்டு ரீல் வரை கதை எழுதி முடிச்சேன். இப்படித்தான் முழு ஸ்கிரிப்ட் தயார் பண்ணினேன்...''

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

எந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆசை?

``ஹாலிவுட் ஸ்டைலில் john wick மாதிரியான படத்துல நடிக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு ஏத்த மாதிரி ஸ்கிரிப்ட் எழுதலாம்னு இருக்கேன்.''

நிறைய இசையமைப்பாளர்கள் மியூசிக் கான்செர்ட் பண்ணிட்டிருக்காங்க. விஜய் ஆண்டனி கான்செர்ட் எப்போ எதிர்பார்க்கலாம்?

``எனக்கும் எண்ணம் இருக்கு. ஆனா, என்னுடைய மியூசிக் பேண்ட் இப்போ இல்ல. நிறைய பிராக்டிஸ் தேவை. திரும்பவும் எல்லாப் பாடல்களையும் கேட்டு வொர்க் பண்ணணும். ஸ்டேஜில் லைவ் performance பண்ணணும். குறைஞ்சது நாலு மாசம் தேவைப்படும். இப்போ, ஆக்டிங் பிஸியா இருக்கு. சீக்கிரம் கான்செர்ட் பண்ணுவேன்.''