கட்டுரைகள்
Published:Updated:

“விக்ரமுக்கு சீன் சொல்லப் போனா பயம் வந்துடும்!’’

விஜய் மில்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் மில்டன்

படங்கள்: பிரவீன்குமார்

இயக்குநர் மோகன் ராஜாவைப்போல, அப்பாவின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்ட இயக்குநர் விஜய் மில்டன். ஒளிப்பதிவாளராக, இயக்குராக அசத்திக்கொண்டிருந்தவர், நடிகராக புரொமோஷன் ஆகியிருக்கிறார். ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்' படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்போது விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கிய ‘மழை பிடிக்காத மனிதன்' ரிலீஸுக்கு ரெடி. இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் மீண்டும் ஒரு படம் இயக்குகிறார் விஜய் மில்டன்.

உங்க அப்பா விஜய் ராஜ், இரண்டு படங்களை இயக்கியிருந்தார். முழுப்படமும் முடிந்தாலும் அவை இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், நீங்கள் அரை டஜன் படத்துக்கு மேல் இயக்கியிருக்கீங்க...

‘‘எங்க அப்பாதான் என் ஹீரோ. சினிமாவில் இயக்குநர் ஆகும் கனவுகளுடன் வடக்கன்குளத்தில் இருந்து டிரெயின் ஏறி, ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'ன்னு பாட்டு பாடினபடியே சென்னை வந்ததாகச் சொல்வார். ஆனா, அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையல. ‘பூவரசு’ என்கிற பெயர் வைத்துக்கொண்டு ஜெய்சங்கர், முரளி நடிப்பில் ‘சித்திரம் பேசுதடி' படத்தையும் ‘இதயம் தேடும் இதயம்' படத்தையும் இயக்கினார். ரெண்டுமே ரிலீஸ் வரை முன்னேறி, வெளிவராமலேயே போயிடுச்சு.

“விக்ரமுக்கு சீன் சொல்லப் போனா பயம் வந்துடும்!’’

என் முழுப்பெயர் மில்டன் சீனி. அப்பா என்கிட்ட ‘உனக்கேன் மில்டன்னு பெயர் வச்சேன் தெரியுமா’ன்னு கேட்பார். ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் மாதிரி கவிதைகள் எழுதணும்னு விரும்பி அவர் பெயரை வச்சார். லைப்ரரிக்கு அழைச்சிட்டுப் போய், வாசிப்பை அறிமுகப்படுத்தினார். ‘உனக்கு டைரக்‌ஷனை நான் கத்துத் தர்றேன். தொழில்நுட்பங்களை நீ கத்துக்கோ'ன்னு சொல்லி, திரைப்படக் கல்லூரியில் சேர்த்து விட்டார். இப்படி என்னைச் செதுக்கிய அப்பாவை சினிமாவில் ஜெயிக்க வைக்கணும்னு என் பெயரோடு அவர் பெயரையும் சேர்த்து வச்சதுதான் விஜய் மில்டன். என் படங்களின் டயலாக்கிலோ அல்லது பாடலிலோ அவரது பங்களிப்பும் இருக்கும். என் படங்கள்ல அவருக்கு ‘கோலிசோடா'வும், ‘கடுகு'ம் ரொம்பப் பிடிக்கும். அப்பாவின் கனவை நான் நினைவாக்கினதுல அவருக்கு சந்தோஷம்தான்!''

இயக்குநராக இருந்து நடிகர்கள் ஆன பலரும், ‘நடிக்கணும்னுதான் சென்னைக்கே வந்தேன்'னு சொல்வாங்க... நீங்க எப்படி?

‘‘இயக்குநர் ஆகணும்னுதான் விரும்பினேன். நடிக்கணும்னு நினைச்சதே இல்ல. டிகிரி படிக்காமல்போனதால்தான் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படிச்சேன். நான் இயக்கின ‘பத்து எண்றதுக்குள்ள' படப்பிடிப்பில் விக்ரம் சாருக்கு டயலாக்கைச் சொல்லிக்காட்டினதை அவர் எனக்கே தெரியாமல் வீடியோவுல ஷூட் செய்து காண்பிச்சிட்டு, ‘உங்களுக்குள் ஒரு நடிகன் இருக்கார் மில்டன்'னு சொன்னார். அப்படி அவர் சொன்னதுக்கு அடுத்த நாள்ல இருந்து அவருக்கு சீன் சொல்லப் போனா பயம் வந்துடும். நடிப்புன்னாலே அப்படி தூரம் ஓடுவேன். ஆனா, ராஜுமுருகன், ‘வாங்க பாத்துக்கலாம்'னு சொல்லிக் கூட்டிட்டுப் போயிட்டார். நான் இயக்குநராக அறிமுகமான ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' படத்துல அவர் பாடல்கள் எழுதியிருந்தார். அதிலிருந்து என் நட்பு வட்டத்துல அவர் இருக்கார். பல தடவை அவர் கேட்டும், மாட்டேன்னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா, என் மனசைக் கரைச்சிட்டார். ‘ஜப்பான்'ல நடிச்சிட்டிருக்கேன்.''

“விக்ரமுக்கு சீன் சொல்லப் போனா பயம் வந்துடும்!’’

‘மழை பிடிக்காத மனிதன்' எப்படி வந்திருக்கு?

‘‘இது ஒரு வித்தியாசமான கதை. அந்நிய தேசத்தில் நடக்கற கதைனால வித்தியாசமான லொக்கேஷன் வேணும்னு டையூ, டாமனில் படப்பிடிப்பை நடத்தினோம். சரத்குமார் சார், கன்னட நடிகர்கள் தனஞ்செயா, பிரித்வி அம்பார், மேகா ஆகாஷ்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. என்னோட ‘கோலி சோடா'வை விஜய் ஆண்டனியும் நானும் சேர்ந்து தயாரிக்கறதா இருந்தது. அதில் இருந்தே நாங்க நல்ல நண்பர்களாகிட்டோம். என்னோட கவிதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். முழுப்படமும் முடிஞ்சிடுச்சு. பின்னணி இசை வேலைகளும், கிராபிக்ஸ் வேலைகளும் நடந்துட்டு இருக்கு. கன்னடத்தில் சிவராஜ்குமார் சாரை வச்சு இயக்குநராக அங்கே அறிமுகமானேன். இப்போது மீண்டும் கன்னடத்தில் இயக்குகிறேன். சீக்கிரமே அதுக்கான அறிவிப்பு வெளியாகும்.''