அத்தியாயம் 1
Published:Updated:

"நான் மதுரக்காரன் லதாதான் மீனாட்சி!"- விஜயகாந்த்

விஜயகாந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயகாந்த்

அரசியல் ஆர்வம் சின்ன வயசுலேயிருந்து வந்ததாச்சே!

" வணக்கம். வணக்கம்! ” - லுங்கியும் டி - ஷர்ட்டுமாக இருக்கிற விஜயகாந்த், வெள்ளைச் சிரிப்புடன் வரவேற்கிறார். " அப்துல்கலாம் இந்தியாவுக்கே ஜனாதிபதியா இருந்தாலும், அவரோட அம்மாவுக்குப் பிள்ளை, அண்ண னுக்குத் தம்பிதானே அந்த மாதிரிதான் நானும். வெளியேதான் நடிகன், கேப்டன், தலைவனெல்லாம்! வீட்டுக்கு வந்துட்டா எம் பொண்டாட்டிக்குப் புருஷன், புள்ளைகளுக்கு அப்பன். அவ்வளவுதான்! வீடுங்கிறது என்னங்க... கார்,

இது மதுர ஸ்டைல்!

பங்களா, ஏ.சி- மட்டுமா? அது இல்லீங்க! ' சாப்பிட்டீங்களா? ' னு அன்பா விசாரிக்க வீட்ல ஒரு ஆளு இல்லேன்னா, அப்புறம் அது என்ன வீடு? அது என்ன வாழ்க்கை? நம்ம வீடு செங்கல்லு, சிமென்ட்டோட அன்பையும் குழைச்சுக் கட்டுனதுங்க! ”

அப்பப்போ பத்து மார்க்!

என்கிறார் ஸ்பிரிங் முடிகள் துள்ள!

Vijayakanth family
Vijayakanth family

" நமக்கு வசதி தரைதான். டைனிங் டேபிள் இருந்தாலும், அதுல உட்கார்ந்து சாப்பிட்டா, ஏதோ ஓட்டல்ல சாப்பிடுற மாதிரி இருக்கு. தரையில அக்கடானு சப்பணம் போட்டு எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும். மதுரையில நாங்க அப்படித்தான் வளர்ந்தோம். மொத்தம் பதினோரு பிள்ளைங்க. எல்லாரும் கூட்டமா உட்கார்ந்து கதை பேசிக்கிட்டே சாப்பிடுவோம். அந்தப் பழக்கம் காலாகாலத்துக்கும் நம்ம வீட்லயும் இருக்கணும்ல!

நான் எந்த அளவுக்கு அன்பான ஆளோ, அந்த அளவுக்குக் கோபக்காரன். முன்னெல்லாம் எதுக்கெடுத்தாலும் சுர்ர்ருனு கோபம் பொத்துக்கிட்டு வரும். இப்போ யோகா பண்ண ஆரம்பிச்ச பிறகு, ஒரு நிதானம் வந்திருக்கு. எதிராளி பண்ற தப்பையும் கூட தடால் புடால்னு திட்டாம, பக்குவமா எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவாங்க. தினம் ஒரு மணி நேரம் யோகா, தியானம் ரெண்டும் செய்து பாருங்க.... வித்தியாசம் உங்களுக்கேதெரியும்!

சினிமாவில் இருக்கோம். ஃபைட்டுதான் நமக்கு அடையாளமே! அதிலும் லெக் ஃபைட் என்னோட ஸ்டைல்.. அதுக்கு உடம்பை உறுதியா வெச்சுக்கணுமே! காலையில் யோகா, சாயந்திரம் உடற்பயிற்சி. டி.வி நியூஸ் பார்க்கிறதும் அந்த நேரம்தான். ஒரே நேரத்தில் ரெண்டு வேலை செய்த திருப்தி கிடைக்கும்.

எங்க நாய்க்குட்டி. பேரு... சீஸர்! என் செல்லம். நம்ம வீட்ல ஒரு பிள்ளை மாதிரி வளருது. மதுரையில ரைஸ் மில்லில் இருந்தப்போ, என் இடுப்பு உசரத்துக்கு ஒரு நாய் வளர்த்தேன். அது பேரும் சீஸர்தான்! மில்லில் சீஸர் இருந்தா, ஒரு மிலிட்டரியே நம்மகூட இருக்கிற மாதிரி! ராத்திரி நான் தூங்கப் போகும்போது, கல்லாப் பெட்டி சாவியை சீஸரிடம் குடுத்துருவேன். ராத்திரி முழுக்க அது சாவியைத் தன் வாயில் கவ்விக்கிட்டே திரியும். உசுரே போனாலும் சரி, என்னைத் தவிர வேற யார்கிட்டேயும் அதைத் தராது. அந்த அளவுக்கு விசுவாசமான தோஸ்து! அந்த நாய் செத்துப்போன மில்லில் சீஸர் இருந்தா அதுவே மிலிட்டரி மாதிரி!

Vijayakanth family
Vijayakanth family

பிறகு, நம்ம வீட்டில் எடுத்து வளர்க்கிற எல்லா நாய்களுக்கும் சீஸர்னுதான் பேர்! கல்யாணமான புதுசுல, ஒரு சீஸர் என்னோட இருந்துச்சு. அப்போ பிரேமலதா என் பக்கத்தில் வந்தாலே, சீஸருக்குக் கோபம் வந்து ' உர்ர்ருனு உறும் ஆரம்பிச்சுடும். லதா எனக்குப் பயப்பட்டாங்களோ என்னவோ, சீஸருக்கு அப்படிப் பயப்படுவாங்க. அப்புறம் கறிச் சோறு ஆக்கிப் போட்டு, சீஸரையே கட்சி மாத்திட்டாங்கனு வைங்க!

அரசியல் ஆர்வம் சின்ன வயசுலேயிருந்து வந்ததாச்சே! பேப்பரை எடுத்து விரிச்சு உட்கார்ந்தா அதுலேயே மூழ்கிடு வேன். பசங்களுக்காக இங்கிலீஷ் பத்திரிகைகளும் வாங்குவோம். நம்மளப் பத்தி நியூஸ் ஏதாவது வந்திருந்தா படிச்சுச் பிள்ளைக பெரிய ஆளா வரணும்!

சொல்லுவாங்க. ஷூட்டிங் இருந்தால், காலைல எட்டு மணிக்குக் கிளம் பிடுவேன். இல்லேன்னா லும் நடிகர் சங்கம், விழாக்கள், பூஜைகள்னு ஏதாவது வேலைகள் இருந்துட்டே இருக்கும். இப்போ அரசியல் வேலைகளும் ஆரம்பிச்ச பிறகு, சாப்பிட, தூங்க நேரம் இல்லாம பரபரப்பா அலையறேன். எனக்கு ஆடம்பரம் பிடிக்காது.

என் நாம உழைக்கிற ஜாதி. அதனால் வெளியே எங்கே போனாலும் வெள்ளைச் சட்டை, வேட்டிதான்! அம்பாஸடர் கார்தான் வாகனம்!

சென்னையில் இருந்தால் மதியம் ரெண்டு மணியோ, மூணு மணியோ வீட்ல அம்மா கையால, மனைவி கையால சாப்பிட்டாதான் அது சாப்பாடு. அப்படியே பத்து நிமிஷம் தூக்கம். மதியத்துக்கு மேல மனுக்கள் பார்க்க ஆரம்பிச்சுடுவேன். அரசியலுக்கு வர்ற துனு முடிவாகிப் போச்சு. மக்களுக்கு என்ன பிரச்னைனு தெரியாம இருக்கக் கூடாதே! கல்யாண நிகழ்ச்சிக் குப் போனாலும், மூட்டையில் கட்டிக் கொண்டு வர்ற அளவுக்கு மனுக்களைக் கொண்டு வந்து குவிக்கிறாங்க.

ஜனங்களோட இந்த நம்பிக்கைதான் அரசியல்ல இறங்கலாம்கிற தைரியத்தை எனக்குத் தந்துச்சு.

Vijayakanth
Vijayakanth

லதா மேடம் என்னைவிட பிஸியான ஆளு. பசங்க ஸ்கூலு, காலேஜ் வேலைகள், கல்யாணம், அது இதுனு விழாக்கள் போய் வர்றதுனு பரபரனு இருப்பாங்க. ஆனாலும், பசங்களுக்கு ஷூ பாலீஷ் சரியா இருக்கானு பார்க்கிறது வரைக்கும் எல்லா வேலைகளையும் கச்சிதமா செய்துடுவாங்க. எங்க எல்லோருக்கும் டிரெஸ் டிஸைனர் அவங்கதான். எனக்கு லுங்கி, வேட்டி இருந்தாலே போதும். ஆனா, அவங்க அடம் பிடிச்சு, டி - ஷர்ட், ஜீன்ஸ்னு போடவெச்சு அழகு பார்ப்பாங்க. வீட்டில் இருந்தா, என்னால என்னென்ன உதவி பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணி, பத்து மார்க் வாங்க ஆசைப்படுவேன். ஆனா, அதெல்லாம் ராமர் பாலம் கட்டினப்போ, அணில் போட்ட கல்லு அளவுதான்! என்னடா இவன்.... மனைவி, மனைவினு சொல்றானேனு பார்க்காதீங்க. மதுரக்காரனுக்கு மீனாட்சி இல்லாம எந்தக் காரியம் நடக்கும், சொல்லுங்க?

பசங்க சாயந்திரம் ஸ்கூல்விட்டு வந்ததும், ' என்ன சொல்லித் தந்தாங்க? ' னு கேட்பேன். எனக்குப் புரியுதோ இல்லையோ, அவங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேட்பேன். நமக்குதான் படிக்கிற வாய்ப்பில்லாம போச்சு. நம்ம பிள்ளைகளாவது படிச்சுப் பெரிய ஆளா வரணும்னு ஒரு அப்பனா என்னோட ஆசை. பெரியவன் விஜய பிரபாகரன் பத்தாவது வகுப்பு போறான். சின்னவன் சண்முக பாண்டியன் ஏழாம் வகுப்பு போறான். ரெண்டு பேருக்கும் கானா பாட்டுன்னா உசுரு. ஃபுட்பால் ஆடறதுன்னா சந்தோஷம். நாம வீட்ல இருக்கிற நேரமே கொஞ்சமா... அதனால பசங்களைக் கை நீட்டி அடிக்கிறதில்லை. அவங்களோடு ' டிரம்போலியன்

ஜம்ப் ' எல்லாம் விளையாடி, நண்பன் போலதான் நடத்துவேன்.

Vijayakanth and wife
Vijayakanth and wife

பசங்க சொல்லிச் சொல்லி, இப்ப கிரிக்கெட் பார்க்கிறது ரொம்பப் புடிக்குது. ரூல்ஸ் எல்லாம் தெரியாது. நமக்கு இந்தியா ஜெயிக்கணும். அவ்வளவுதான்! ' என்னப்பா..... ' கேப்டன்'னு பேர் வெச்சிக்கிட்டு, இந்த கங்குலி சொதப்புறாரே? ' னு பசங்க ஜாலியா ஜோக்கடிப்பாங்க. வீட்ல இருந்தேன்னா பசங்களோட நிச்சயம் ஜாலியா கிரிக்கெட் ஆடுவேன். அதிலேயும் பெத்த பிள்ளைங்ககூட ஆடித் தோக்கறதில் ஒரு தனி சுகம்!

எங்க வீட்டு பூஜை ரூம் ரொம்ப ஸ்பெஷல். அல்லா, இயேசு, இந்து சாமிங்க எல்லாம் என் வீட்டு பூஜை ரூம்ல இருக்கும். எல்லாமே சாமிதானே! எங்களுக்குத் தெரிஞ்ச விதத்துல எல்லா சாமிகளையும் கும்பிடுவோம். ' இன்னிக்குப் பொழுது எல்லாருக்கும் நல்லா இருக்கணும்'னு மனசார வேண்டிக்கிட்டு என் வேலையைப் பார்க்க கிளம்பிடுவேன். நமக்குத் தொழில்தான் சாமி!

(01.05.2005 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)