சினிமா
பேட்டிகள்
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: “லவ் ப்ரப்போஸல்தான் எனக்கு விசிட்டிங் கார்டு!”

பார்வதி
பிரீமியம் ஸ்டோரி
News
பார்வதி

ஆங்கரிங் பண்ணிட்டிருக்கும்போதே சீரியலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. மீடியாவில் நான் இன்னும் கத்துக்க நிறைய இருக்குன்னு பல வாய்ப்புகளைத் தவிர்த்தேன்.

“பார்ட் டைம் வேலைக்காக ஆங்கரிங் தேர்ந்தெடுத்தேன். அந்த சாய்ஸ் இந்த அளவுக்கு பெஸ்டா அமையும்னு எதிர்பார்க்கலை’' என்கிறார் பார்வதி. சன் டி.வி-யின் `வணக்கம் தமிழா' உட்பட பல நிகழ்ச்சிகளில் வி.ஜே-வாக அறிமுகமானவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

``உங்களைப் பற்றி..?’’

“சொந்த ஊர் கேரளா. ஆனா, குடும்பத்தோடு கோயம்புத்தூர்ல செட்டில் ஆகிட்டோம். படிச்சதெல்லாம் அங்கேதான். காலேஜ் படிக்கும்போதே கேம்பஸ்ல ஐ.டி வேலை கிடைச்சிடுச்சு. வேலைக்காகத் தான் முதன்முறையா சென்னைக்கு வந்தேன்.”

ஆங்கர் to ஆக்டர்: “லவ் ப்ரப்போஸல்தான் எனக்கு விசிட்டிங் கார்டு!”

``ஆங்கரிங் வாய்ப்பு எப்படிக் கிடைச்சது..?’’

“ஐ.டி கம்பெனியில் ஆறு மாசம் வேலை பார்த்தேன். அப்போவே என்னுடைய தேவைகள் எல்லாத்தையும் நானே பார்த்துக்கிட்டேன். ஆறு மாசத்துக்குப் பிறகு ஹையர் ஸ்டடீஸ் பண்ணலாம்னு முடிவெடுத்து அவசரப்பட்டு வேலையை விட்டுட்டேன். என் தேவையை நானே பார்த்துக்கிட்டதால வேலையை விட்டதும் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. அதனால, சின்னச் சின்ன ஈவண்ட்களில் எம்.சி பண்ண ஸ்டார்ட் பண்ணினேன். சோஷியல் மீடியாவில் என் ஒர்க் பற்றின வீடியோக்களை ஷேர் பண்ணினேன். அது நல்ல ரீச் கொடுத்துச்சு. பிறகு பெரிய கார்ப்பரேட் ஈவண்ட்களுக்கு எம்.சி பண்ணிட்டிருந்தேன். திடீர்னு ஒரு நாள் ஜீ தமிழில் இருந்து அவார்டுக்காக ரெட் கார்ப்பெட் ஹோஸ்ட் பண்ணக் கூப்பிட்டாங்க. அந்த அவார்டு ஷோவைத் தொடர்ந்து ஃப்ரீலான்சரா ஜீ தமிழில் சில ஷோக்கள் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். அங்கேயுள்ள ரெபரன்ஸ் மூலமா சன் டி.வி-யில் ஒரு அவார்ட்ஸ் நிகழ்ச்சிக்கு ரெட் கார்ப்பெட்டிற்காக கூப்பிட்டாங்க. அங்கே, என்னோட ஆங்கரிங்கைப் பார்த்துட்டு எந்த ஆடிஷனும் இல்லாம சன் டி.வி ஆங்கராகக் கேட்டாங்க. மறுக்காம அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டேன்.”

ஆங்கர் to ஆக்டர்: “லவ் ப்ரப்போஸல்தான் எனக்கு விசிட்டிங் கார்டு!”

``ஆங்கர் டு சீரியல் பயணம் எப்போ ஆரம்பிச்சது..?’’

“ஆங்கரிங் பண்ணிட்டிருக்கும்போதே சீரியலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. மீடியாவில் நான் இன்னும் கத்துக்க நிறைய இருக்குன்னு பல வாய்ப்புகளைத் தவிர்த்தேன். இந்த சீரியலுக்கு வாய்ப்பு வந்தப்போ ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாலும், தேவயானி மேடத்துடன் லீடு ரோலில் நடிக்கிறதுங்கிறது மிகப்பெரிய விஷயம்னு தோணுனதால டிரை பண்ணிப் பார்க்கலாம்னு ஓகே சொன்னேன். அப்படித்தான் சீரியல் ஆர்ட்டிஸ்ட் ஆனேன்.”

``ஆங்கரிங், நடிகை - என்ன வித்தியாசம்..?’’

“ரெண்டுக்குமே அதிகமான மெனக்கெடல் நிச்சயம் இருக்கணும். ஆங்கரிங் பொறுத்தவரை, ஆன் தி ஸ்பாட்ல ஷோவை நாம எப்படி லீடு பண்றோங்கிறது ரொம்பவே முக்கியம். ஷோவுக்கு என்ன தேவைங்கிறதைப் புரிஞ்சிக்கணும். ஆனா, சீரியல் வேற ஒரு தளம். ‘நமக்கு நடிக்கவே தெரியாது, என்ன பண்ணப் போறோம்’னு பயந்தேன். கேமரா ஆங்கிள் பற்றி எதுவும் தெரியாததனால கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ எல்லாமே பழகிடுச்சு. இந்த சீரியலில் என் கேரக்டர் என் நிஜ கேரக்டரோடு ஒத்துப் போறதனால பெருசா நடிக்கிற மாதிரி தெரியல. ஒரே வித்தியாசம், சீரியலில் எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, நிஜத்தில் ஆகலை... அவ்வளவுதான்!”

ஆங்கர் to ஆக்டர்: “லவ் ப்ரப்போஸல்தான் எனக்கு விசிட்டிங் கார்டு!”

``ஆங்கரிங் பண்ணப்போ அர்ஜுன் தாஸ் உங்களுக்கு ப்ரப்போஸ்லாம் பண்ணினார் போலயே..?

“சன் டி.வி-யில் ‘மாஸ்டர்’ பட புரொமோஷனுக்காக அவர் வந்திருந்தார். அந்த ஷோவை நானும், அஷ்வத்தும் ஹோஸ்ட் பண்ணினோம். ‘கைதி’யிலேயே அவரை எனக்குப் பிடிக்கும். நேர்ல அவரை மீட் பண்ணினது ஹேப்பியா இருந்துச்சு. நாங்க சும்மா ஜாலியா அவர்கிட்ட கெளரியை ப்ரப்போஸ் பண்ணச் சொல்லிக் கேட்டோம். அவர் திடீர்னு எனக்கு ப்ரப்போஸ் பண்றேன்னு சொல்லிட்டார். அது பயங்கர சர்ப்ரைஸிங் மொமன்ட்டா இருந்துச்சு. எப்படியும் அதையெல்லாம் டி.வி-யில் டெலிகாஸ்ட் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா, அது டெலிகாஸ்ட் ஆனதோடில்லாம அந்த கிளிப்பிங் பயங்கர வைரல் ஆகிடுச்சு. சொல்லப்போனா, அந்த நிகழ்வுக்கு அப்புறமாதான் பலருக்கும் என்னைத் தெரிய ஆரம்பிச்சது. அந்த லவ் ப்ரப்போஸல் எனக்கான விசிட்டிங் கார்டா அமைஞ்சது.”

``ஆங்கரிங்கை மிஸ் பண்றீங்களா..?’’

“ரொம்பவே மிஸ் பண்றேன். இப்பவும் டைம் கிடைக்கும்போது ஆங்கரிங் பண்ணிட்டிருக்கேன். சமீபத்தில் `சைமா விருது' நிகழ்ச்சியில் ரெட் கார்பெட் பண்ணினேன். அங்கே மறுபடியும் என்கூட ஒர்க் பண்ணின ஆங்கர் எல்லாரையும் மீட் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.”