Published:Updated:

WEB SERIES: வெப் சீரிஸில் கோலம் போட்ட கோகிலா!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
News
WEB SERIES

ஐந்து சீசன்கள் கொண்ட டென்மார்க் தொலைக்காட்சித் தொடரான பெனோஜாவை பாலிவுட்டுக்குப் பக்காவாகக் கடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

கதை என்னன்னா...

மாமன், மச்சான், மச்சானின் நண்பன் சேர்ந்து ஓப்பியம் மலர்களின் மறைவில் போதைமருந்து கடத்துகிறார்கள். அளவான லாபம், அன்பான குடும்பம் என இருக்கும் இவர்கள் கையில் 300 கோடி ரூபாய் ‘கோலமாவு’ சிக்க, “எவ்ளோ பெரிய மாத்திரை” எனக் குடும்பம் அல்லோலகல்லோலப்படுகிறது. எல்லாப் பொறுப்புகளும் ஆர்யாவுக்கு வருகின்றன. டான், டானுக்கு எல்லாம் டான் என நிறைய வில்லன்கள் அவதரிக்க, துரோகங்களையும் சோகங்களையும் எப்படி இந்தக் கோலமாவு ஆர்யா டீல் செய்து, அடுத்த சீசனில் அடியெடுத்து வைக்கிறாள் என்பதே கதை.

ஸ்டார்ஸ்

வெப் சீரிஸோ திரைப்படமோ, பெண்ணை மையப்படுத்தி எடுப்பதுதான் இப்போதைய டிரெண்ட். ‘ஆர்யா’வின் நாயகி, ‘ரட்சகன்’ படத்தின் நாயகி சுஷ்மிதா சென். கணவர் கொலை செய்யப்பட, தம்பி சிறைக்குச் செல்ல, கலர்ஃபுல் வாழ்க்கை சில நொடிகளில் மொத்தமாய் மாறிப்போகிறது. மூன்று குழந்தைகள், அவர்களுக்கு வரும் பிரச்னைகள் என 9 எபிசோடிலும் சுஷ்மிதாவுக்கு ஓயாத வேலை. ஆனாலும், பக்காவாக நடித்துக்கொடுத்திருக்கிறார். கணவரைச் சந்திக்கச் செல்லும் காட்சியிலும், வில்லன்களை முடித்துக்கட்டத் திட்டம் போடும் காட்சிகளிலும் சுஷ்மிதாவின் அனுபவ நடிப்பு கைகொடுத்திருக்கிறது. மாயா சரோ, பக்கா ஜென்டில்மேனாக நடந்துகொள்ளும் அலெக்ஸ் ஓ நெல் (மதாராசப்பட்டினம் வில்லன்) எனப் பல கதாபாத்திரங்கள் அட்டகாசம் என்றாலும், ‘கட்டப்பா’ டைப் விசுவாசியான சிக்கந்தர் கெர் தான் தொடரின் ஆர்ப்பாட்டமில்லா நாயகன்.

திரைக்குப் பின்னால்

WEB SERIES: வெப் சீரிஸில் கோலம் போட்ட கோகிலா!

ஐந்து சீசன்கள் கொண்ட டென்மார்க் தொலைக்காட்சித் தொடரான பெனோஜாவை பாலிவுட்டுக்குப் பக்காவாகக் கடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள். முதல் சீசன் ஏகபோக வரவேற்பைப் பெற்றிருப்பதால், சுஷ்மிதாவுக்கு இன்னும் சில ஆண்டுகள் வேலை இருக்கிறது. முதலில் இதை சினிமாவாக எடுக்கலாம் என கஜோலை அணுகினார்களாம். பின்னர் கதை மாறி, வெப் சீரிஸாகியிருக்கிறது. நீர்ஜா படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த ராம் மத்வானி இந்தத் தொடரை எழுதி இயக்கியிருக்கிறார்.

ப்ளஸ்

WEB SERIES: வெப் சீரிஸில் கோலம் போட்ட கோகிலா!

ஓப்பியம் மலர்கள், அதன் மூலம் விற்கப்படும் மருந்துகள் எனக் கதையை இந்தியத் தன்மைக்கு மாற்றியதிலேயே கதாசிரியர் ராம் மத்வானிக்கு முதல் வெற்றி. குடும்பத்துக்குள் நடக்கும் துரோகங்கள்தான் கதை. ஆனால், ஒவ்வொரு கதாபாத்திர வார்ப்புக்கான மெனக்கெடலில் ஹிட் அடித்திருக்கிறது ‘ஆர்யா.’

மைனஸ்

WEB SERIES: வெப் சீரிஸில் கோலம் போட்ட கோகிலா!

சில காட்சிகள் ‘நெக்ஸ்ட்’ பட்டனைத் தேட வைக்கின்றன. ஒவ்வொரு எபிசோடையும் 40 நிமிடத்தில் பக்காவாக எடிட் செய்திருக்கலாம். 9 மணி நேரம் ரொம்பவே அதிகம். புராணத் தொடர்பு சுவாரஸ்யம் என கீதையை உள்ளிழுத்திருக்கிறார்கள். ஆனால், அது ஓவர்டோஸ் ஆகிவிடுவது அடுத்த சோகம்.