Published:Updated:

What to watch on Theatre & OTT: ஃபர்ஹானா டு Good Night - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

What to watch : மே மாதம் இரண்டாவது வாரம்

இந்த மே மாதம் இரண்டாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

Published:Updated:

What to watch on Theatre & OTT: ஃபர்ஹானா டு Good Night - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

இந்த மே மாதம் இரண்டாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

What to watch : மே மாதம் இரண்டாவது வாரம்

சிறுவன் சாமுவேல்

சிறுவன் சாமுவேல்
சிறுவன் சாமுவேல்

இயக்குநர் சாது பர்லிங்டன் இயக்கத்தில் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'சிறுவன் சாமுவேல்'. இப்படத்தில் அஜிதன், விஷ்ணு, அபர்ணா, பிலிபோஸ் மற்றும் செல்லப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இராவண கோட்டம் (தமிழ்)

இராவண கோட்டம்
இராவண கோட்டம்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இராவண கோட்டம்'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

ஃபர்ஹானா (தமிழ்)

ஃபர்ஹானா
ஃபர்ஹானா

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஃபர்ஹானா'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Good Night (தமிழ்)

Good Night
Good Night

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Good Night'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

கஸ்டடி (தமிழ்/தெலுங்கு)

கஸ்டடி
கஸ்டடி

இயக்குநர் வெங்கட பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ் பைலுங்குவல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Chatrapathi (இந்தி)

Chatrapathi
Chatrapathi

வி வி. விநாயக் இயக்கத்தில் சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா, நுஷ்ரட் பருச்சா, கரண் சிங் சாப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தித் திரைப்படம் 'Chatrapathi'. இது ராஜமௌலி இயக்கிய தெலுங்குப் படத்தின் ரீமேக். இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Music School (இந்தி)

Music School
Music School

பப்பாராவ் பையாலா இயக்கத்தில் ஸ்ரேயா சரண், பிரகாஷ் ராஜ், ஷர்மன் ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Music School'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Love Again (ஆங்கிலம்)

Love Again
Love Again

ஜிம் ஸ்ட்ரோஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸாம் ஹியூகன், செலின் டியான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Love Again'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Asterix and Obelix: The Middle Kingdom (ஆங்கிலம்)

Asterix and Obelix: The Middle Kingdom
Asterix and Obelix: The Middle Kingdom

Guillaume Canet இயக்கத்தில் Guillaume Canet, Gilles Lellouche, வின்சென்ட் கேசல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்ச் - ஆங்கில மொழித் திரைப்படம் 'Asterix and Obelix : The Middle Kingdom'. இத்திரைப்படம் நேற்று (மே 12ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்...

Air (ஆங்கிலம்) - Amazon Prime Video

Air
Air

பென் அஃப்லெக் இயக்கத்தில் மேட் டேமன், ஜேசன் பேட்மேன், பென் அஃப்லெக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Air'. இத்திரைப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் நேற்று (மே 12ம் தேதி) வெளியாகியிருக்கிறது.

The Mother (ஆங்கிலம்) - Netflix

The Mother
The Mother

நிகி காரோ இயக்கத்தில் ஜெனிபர் லோபஸ், லூசி பயஸ், ஓமரி ஹார்ட்விக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'The Mother'. இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் நேற்று (மே 12ம் தேதி) வெளியாகியிருக்கிறது.

Newsense (தெலுங்கு) - Aha

Newsense
Newsense

ஸ்ரீபிரவின் குமார் இயக்கத்தில் நவ்தீப், பிந்து மாதவி, மஹிமா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி வெப்சீரிஸ் 'Newsense'. இந்த வெப்சீரிஸ் 'Aha' ஓடிடி தளத்தில் நேற்று (மே 12ம் தேதி) வெளியாகியிருக்கிறது.

Dahaad (இந்தி) - Amazon Prime Video

Dahaad
Dahaad

ரீமா காக்டி மற்றும் ஜோயா அக்தரின் ஆக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, குல்ஷன் தேவையா, விஜய் வர்மா, சோஹும் ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Dahaad'. இந்த வெப்சீரிஸ் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் நேற்று (மே 12ம் தேதி) வெளியாகியிருக்கிறது.

Taj: Reign Of Revenge (இந்தி) - Zee5

Taj: Reign Of Revenge
Taj: Reign Of Revenge

விபு பூரி இயக்கத்தில் தர்மேந்திரா, நசிருதீன் ஷா, ஆஷிம் குலாட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Taj: Reign Of Revenge'. இந்தத் தொடரின் இரண்டாவது சீசனான இது 'Zee5' ஓடிடி தளத்தில் நேற்று (மே 12ம் தேதி) வெளியாகியிருக்கிறது.

தியேட்டர் டு ஓடிடி...

யாத்திசை (தமிழ்) - Amazon Prime Video

யாத்திசை
யாத்திசை

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சுபத்ரா, சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சொப்பன சுந்தரி (தமிழ்) - Disney Plus Hotstar

சொப்பன சுந்தரி
சொப்பன சுந்தரி

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

திருவின் குரல் (தமிழ்) - Netflix

திருவின் குரல்
திருவின் குரல்

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திருவின் குரல்'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சாகுந்தலம் (தெலுங்கு, தமிழ்) - Amazon Prime Video

'சாகுந்தலம்'
'சாகுந்தலம்'

குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Vichitram (மலையாளம்) - Amazon Prime Video

Vichitram
Vichitram

அச்சு விஜயன் இயக்கத்தில் ஷைன் டாம் சாக்கோ, கனி குஸ்ருதி, லால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விசித்திரம்'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

விக்ரம் வேதா (இந்தி) - Jio Cinema

விக்ரம் வேதா
விக்ரம் வேதா

தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படம், இந்தி மொழியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவானது. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Jio Cinema' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Triangle of Sadness (ஆங்கிலம்) - SonyLiv

Triangle of Sadness
Triangle of Sadness

ரூபன் ஆஸ்ட்லண்ட் இயக்கத்தில் ஹாரிஸ் டிக்கின்சன், சார்ல்பி டீன், டோலி டி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Triangle of Sadness'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.