Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த மே மூன்றாவது வாரம் என்ன படம் பார்க்கலாம்!

What to watch on Theatre & OTT: மே மூன்றாவது வாரம்

இந்த மே மாதம் மூன்றாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த மே மூன்றாவது வாரம் என்ன படம் பார்க்கலாம்!

இந்த மே மாதம் மூன்றாவது வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

What to watch on Theatre & OTT: மே மூன்றாவது வாரம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் (தமிழ்)

யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர்

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், கரு. பழனியப்பன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. வெங்கட கிருஷ்ண ரோகந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கை தமிழ் அகதிகளின் பிரச்சினைகளைக் கதைக் களமாகக் கொண்ட இப்படம் (மே 19ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் -2 (தமிழ்)

பிச்சைக்காரன் -2
பிச்சைக்காரன் -2

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் 2016ம் வெளியாகி நல்ல வரவேற்ப்பைப் பெற்ற திரைப்படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தின் வெற்றியை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார். இப்படம் (மே 19ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

8. A.M Metro (இந்தி)

8. A.M Metro
8. A.M Metro

ராஜ் ரச்சகொண்டா இயக்கத்தில் குல்ஷன், சயாமி கெர், உமேஷ் காமத், கல்பிகா கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி திரைப்படமான '8. A.M Metro' இன்று (மே 19ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பரபரப்பான மெட்ரோ ரயிலில் சந்தித்து நண்பர்களாகி பின்னர், காதலர்களாக மாறும் ஜோடிகள் எதிர்கொள்ளும் சிறு சிறு பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கிடையான காதலை பரபரப்பில்லாமல் நிதானமான திரைக்கதையில் சொல்லும் திரைப்படம் இது.

Fast X (ஆங்கிலம்)

Fast X
Fast X

வின் டீசல், மைக்கேல் ரோட்ரிக்ஸ், ஜோர்டானா ப்ரூஸ்டர், டைரஸ் கிப்சன், லூடிக்ரஸ், ஜேசன் ஸ்டாதம், ஜான் செனா மற்றும் ஜேசன் மாமோவா உள்ளிட்டோர் நடிப்பில் லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் இன்று (மே 19ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'Fast X'. இப்படம் Fast 9 இன் தொடர்ச்சியாக 10வது பாகமாக வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன், திரில்லர், ஸ்டண்ட், கார் சேஸிங் என விருவிருப்பான கதைக்களத்துடன் இப்படம் அமைந்துள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்...

மாடர்ன் லவ் சென்னை (தமிழ்) - Amazon Prime Video

மாடர்ன் லவ் சென்னை
மாடர்ன் லவ் சென்னை

`தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் வாசகர்கள் தங்களின் காதல் அனுபவங்களைக் கட்டுரைகளாக மாற்றி அனுப்ப ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில்  'மாடர்ன் லவ்' என்ற பெயரில் இக்கதைகள் வெவ்வேறு பாணியில், அந்தந்த நகரங்களுக்கு ஏற்ப மாற்றி எடுக்கப்பட்டது. அந்தவகையில் தமிழிலும் ஆறு எபிசோடுகள் கொண்ட முதல் சீசன் காதல் ஆந்தாலஜியாக 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் (நேற்று) மே 18ம் தேதி `Modern Love Chennai' என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர்கள் பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜு முருகன், பாலாஜி தரணிதரன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் எனப் பலரும் இந்த காதல் ஆந்தாலஜியை இயக்கியுள்ளனர்.

மாருதி நகர் Police Station (தமிழ்) - Aha

மாருதி நகர் Police Station
மாருதி நகர் Police Station

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிக்பாஸ் புகழ் ஆரவ், சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் (இன்று) மே 19ம் தேதி 'Aha' ஓடிடி தளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாருதி நகர் Police Station'. மர்மான முறையில் காணாமல் போல ஒருவரை கண்டுபிடிக்கும் வழக்கின் விசாரனையில் நடக்கும் போலிஸ் கிரைம் திரில்லைரை பின்னணியாகக் கொண்ட திரைப்படம் இது.

Kathal: A Jackfruit Mystery (இந்தி) -Netflix

Kathal: A Jackfruit Mystery
Kathal: A Jackfruit Mystery

யஷோவர்தன் மிஸ்ரா இயக்கத்தில் சன்யா மல்ஹோத்ரா, ராஜ்பால் நௌரங் யாதவ், விஜய் ராஸ் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (மே 19ம் தேதி) 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தி மொழி திரைப்படம் 'Kathal: A Jackfruit Mystery'. உள்ளூர் அரசியல்வாதியின் விலையுயர்ந்த பலாப்பழங்கள் தொலைந்து விடுகின்றன. இந்த வினோதமான வழக்கைத் தீர்ப்பதில் ஒரு இளம் பெண் போலீஸ் அதிகாரி பிடிவாதமாக இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையில் நடக்கும் நகைச்சுவையான சம்பவங்கள்தான் இத்திரைப்படத்தின் கதை.

Inspector Avinash (இந்தி) - Jio Cinema

Inspector Avinash
Inspector Avinash

நீரஜ் பதக் இயக்கத்தில் ஷலீன் பானோட், சோஹித் சோனி, ஆயிஷா எஸ். ஐமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'Inspector Avinash'. 1997 இல் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட ஆக்‌ஷன், திரில்லர் வெப்சீரிஸான இது 'Jio Cinema' ஓடிடி தளத்தில் நேற்று (மே 18ம் தேதி) வெளியாகியுள்ளது.

White House Plumbers (ஆங்கிலம்) - Jio Cinema

White House Plumbers
White House Plumbers

ஐந்து-பகுதித் தொடராக வெளியாகியுள்ள இந்த வெப்சீரிஸ், அரசியல் கூட்டாளிகள் தாங்கள் பாதுகாக்க முயன்ற ஜனாதிபதி பதவியை தற்செயலாக எப்படிக் கவிழ்த்தார்கள் என்ற உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஷலீன் பானோட், சோஹித் சோனி ஆயிஷா, எஸ். ஐமன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸை அலெக்ஸ் கிரிகோரி, பீட்டர் ஹய்க் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த வெப்சீரிஸ் 'Jio Cinema' ஓடிடி தளத்தில் கடந்த மே 15ம் தேதி வெளியாகியுள்ளது.

Succession season 4 (ஆங்கிலம்) - Jio Cinema

Succession
Succession

ஆண்ட்ரிஜ் பரேக் இயக்கத்தில் பிரையன் காக்ஸ், ஜெர்மி ஸ்ட்ராங், கீரன் கல்கின் உள்ளிட்டோர் நடிப்பில் 'Jio Cinema' ஓடிடி தளத்தில் கடந்த மே 15ம் தேதி வெளியாகியுள்ள நகைச்சுவை கலந்த வெப்சீரிஸ் 'Succession season 4'. 2018ம் ஆண்டு வெளியான 'Succession' வெப்சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் நான்காவது சீசனாக இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ளது.

Muted (ஸ்பேனிஷ்) - Netflix

Muted
Muted

இயக்குநர்கள் ஐட்டர் கேபிலோண்டோ (படைப்பாளர்), கேப் இபானெஸ், ஐட்டர் கேபிலோண்டோ ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்பானிஷ் மொழி திரில்லர் வெப் சீரிஸ் 'Muted'. அரோன் பைபர், அல்முடேனா அமோர், கிறிஸ்டினா கோவானி, ஐட்டர் லூனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த வெப் சீரிஸ் (மே 19ம் தேதி) 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி...

ருத்ரன் (தமிழ்) - SunNXT

ருத்ரன் விமர்சனம்
ருத்ரன் விமர்சனம்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'SunNXT' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Agent (தெலுங்கு) - SonyLiv

Agent
Agent

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த தெலுங்கு திரைப்படம் 'Agent'. இப்படத்தில் அகில் அக்கினேனி, மம்மூட்டி, சாக்ஷி வைத்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ayalvaashi (மலையாளம்) - Netflix

Ayalvaashi
Ayalvaashi

இர்ஷாத் பராரி இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், லிஜோ மோல் ஜோஸ், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த நகைச்சுவை திரைப்படம் 'Ayalvaashi'. மலையாள திரைப்படமான இது, தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Kadina Kadoramee Andakadaham (மலையாளம்) - SonyLiv

Kadina Kadoramee Andakadaham
Kadina Kadoramee Andakadaham

முஹாசின் இயக்கத்தில் ஜானி ஆண்டனி, ஆனந்த் பிபால், ஜாஃபர் இடுக்கி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த மலையாள மொழி திரைப்படம் 'Kadina Kadoramee Andakadaham'. இப்படம் தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Pookkaalam (மலையாளம்) - SonyLiv

Pookkaalam
Pookkaalam

கடந்த ஏப்ரலில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த மலையாள மொழி திரைப்படம் 'Pookkaalam'. கணேஷ் ராஜ் இயக்கத்தில் விஜயராகவன், கே.பி.ஏ.சி. லீலா, பசில் ஜோசப் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ant-Man and the Wasp: Quantumania (ஆங்கிலம்) - Hotstar

Ant-Man and The Wasp: Quantumania
Ant-Man and The Wasp: Quantumania

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பெய்டன் ரீட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ant-Man and The Wasp: Quantumania'. ஜெஃப் லவ்னஸ், ஜாக் கிர்பி ஆகியோர் இதை எழுதியுள்ளனர். பால் ரட், இவாஞ்சலின் லில்லி, ஜோனதன் மேஜர்ஸ், மைக்கேல் டக்ளஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.  MCU-வின் Phase 5-ன் முதல் படமான இது, திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது 'Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bones and All (ஆங்கிலம்) - Amazon Prime Video

Bones and All
Bones and All

லூகா குவாடாக்னினோ இயக்கத்தில் Timothée Chalamet, Taylor Russell, Mark Rylance உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்த ஹாலிவுட் திரைப்படம் 'Bones and All'. காதல், திரில்லர், ஹாரர் கலந்த திரைப்படமான இது, தற்போது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.