Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த வாரம் இத்தனை ரீலிஸா? வீக்கெண்டில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

What to watch on Theatre & OTT

இந்த டிசம்பர் இரண்டாம் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த வாரம் இத்தனை ரீலிஸா? வீக்கெண்டில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த டிசம்பர் இரண்டாம் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

What to watch on Theatre & OTT

நாய் சேகர் ரிட்டன்ஸ் (தமிழ்)

நாய் சேகர் ரிட்டன்ஸ்
நாய் சேகர் ரிட்டன்ஸ்

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்கும் இப்படத்தில் ஆனந்த் ராஜ், ரெடின் கிங்ஸ்லி, யூடியூபர் பிரஷாந்த், குக் வித் கோமாளி பாலா, ஷிவாங்கி, ஷிவானி, ராவ் ரமேஷ், முனிஷ்காந்த், மனோபாலா, வெங்கல் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரலாறு முக்கியம் (தமிழ்)

வரலாறு முக்கியம்
வரலாறு முக்கியம்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'வரலாறு முக்கியம்'. விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், ஷாரா, மொட்ட ராஜேந்திரன்  உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

எஸ்டேட் - Estate (தமிழ்)

எஸ்டேட்
எஸ்டேட்

அசோக் செல்வன் மற்றும் சுனைனா நடிப்பில் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹாரர் திரைப்படம் 'எஸ்டேட்'. கலையரசன், ரம்யா நம்பீசன், பிரகாஷ் கருணாநிதி. டேனியல் அன்னி போப், கிரண் கொண்டா, விஜய் வில்வக்ரிஷ், ராஜா திவாகர், அருண் மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பாபா (தமிழ்)

பாபா
பாபா

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பாபா'. ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜியின் ஆன்மிகத் தத்துவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 10ம் தேதி) புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Saudi Vellakka (மலையாளம்)

Saudi Vellakka
Saudi Vellakka

தருண் மூர்த்தி இயக்கத்தில் தேவி வர்மா, லுக்மான், சுஜித் சங்கர், பினு பப்பு, தன்யா அனன்யா, ரம்யா சுரேஷ், வின்சி அலோஷியஸ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித்திரைப்படம் 'Saudi Vellakka'. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பஞ்சதந்திரம் (தெலுங்கு)

பஞ்சதந்திரம்
பஞ்சதந்திரம்

பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, சுவாதி, ஷிவாத்மிகா ராஜசேகர், லேகா, திவ்யா ஸ்ரீபாதா, ராகுல் விஜய், சுபாஷ், சத்யதேவ் காஞ்சரணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பஞ்சதந்திரம்'. இயக்குநர் ஹர்ஷா புலிபாகா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படைப்பு நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Gurthunda Seethakalam (தெலுங்கு)

Gurthunda Seethakalam
Gurthunda Seethakalam

நாகசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சத்யதேவ் காஞ்சரனா, தமன்னா, மேகா ஆகாஷ், காவ்யா ஷெட்டி, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Vijayanand (கன்னடம்)

Vijayanand
Vijayanand

ரிஷிகா சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரகாஷ் பெலவாடி, பாரத் போபண்ணா, அர்ச்சனா கோட்டிகே, அனிஷ் குருவில்லா உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது பிரபல VRL நிறுவனத்தை நிறுவியவரின் பயோபிக்.

Dr. 56 (கன்னடம்)

Dr. 56 (கன்னடம்)
Dr. 56 (கன்னடம்)

ராஜேஷ் ஆனந்தலீலா, பிரவீன் ரெட்டி டி, பிரியாமணி, ரமேஷ் பட், மஞ்சுநாத் ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைடப்படம் 'Dr. 56'. இயக்குநர் ராஜேஷ் ஆனந்தலீலா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைடப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்களில் வெளியாகியுள்ளது.

Salaam Venky (இந்தி)

Salaam Venky
Salaam Venky

பாலிவுட் நடிகையான கஜோல் நடிப்பில், தமிழ்ப் படங்களில் நடித்து 90'களில் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Salaam Venky'. 'Duchenne Muscular Dystrophy' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன் மற்றும் அவரின் தாய்க்கும் இடையேயான அன்பான உறவைப் பற்றிப் பேசும் இத்திரைடப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Vadh (இந்தி)

Vadh
Vadh

நானா படேகர், அனுபமா வர்மா, புரு ராஜ் குமார், அருண் பக்ஷி, நக்குல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜ் பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

விட்னஸ் 'Witness' (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்) -SonyLiv

விட்னஸ் 'witness'
விட்னஸ் 'witness'

மலக்குழியில் இறங்க நிர்பந்திக்கப்பட்டு உயிரிழந்த தன் மகனின் மரணத்திற்கு நியாயம் கேட்க அதிகாரத்தை எதிர்க்கும் தாயின் போராட்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் இந்த விட்னஸ் 'Witness'. இயக்குநர் தீபக் இயக்கத்தில் ரோஹினி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சண்முக ராஜா, அழகம் பெருமாள், சுபத்ரா ராபர்ட், ராஜீவ் ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ரத்தசாட்சி (தமிழ் - Aha)

ரத்தசாட்சி
ரத்தசாட்சி

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதிகள் என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘ரத்தசாட்சி’. இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில்  இப்படத்தை இயக்கியுள்ளார். கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் வினோத், ஆறு பாலா, வினோத் முன்னா, அர்ஜுன் ராம், OAK சுந்தர், பிரவீன், ஹரிஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 'Aha' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

Fall (தமிழ், தெலுங்கு, மலையாளம்)

Fall
Fall

அஞ்சலி நடிப்பில் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளத் வெப் சீரிஸ் 'Fall'. திரில்லர் தொடரான இதில் எஸ்.பி.பி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

Roy (SonyLiv - இந்தி)

Roy
Roy

சூரஜ் வெஞ்சரமூடு, சிஜா ரோஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள மலையாள த்ரில்லர் திரைப்படம் 'ராய்'. சுனில் இப்ராஹிம் இயக்கியுள்ள இப்படத்துக்கு முன்னா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 'SonyLiv' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

Blurr (இந்தி)

Blurr
Blurr

டாப்ஸி பண்ணு, குல்ஷன் தேவையா, கிருத்திகா தேசாய் நடிப்பில் அஜய் பால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Blurr'. இத்திரைப்படம் 'Zee5' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

CAT (இந்தி - Netflix)

CAT
CAT

ரன்தீப் ஹூடா, கோரல் பாம்ரா, ஹஸ்லீன் கவுர், டேனிஷ் பிரதாப் சூட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'CAT'. இயக்குநர்கள் பல்விந்தர் சிங் ஜான்ஜுவா, ருபிந்தர் சாஹல், ஜிம்மி சிங், அனுதேஜ் சிங் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இது 'Netflix' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

FAADU (இந்தி - SonyLiv)

FAADU
FAADU

அஸ்வினி திவாரி இயக்கத்தில் நீரஜ் காஷ்யப், தீபக் சம்பத், அபிலாஷ் தப்லியால், அபிலாஷ் தப்லியால், சயாமி கெர், பவைல் குலாட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'FAADU' வெப்சீரிஸ் 'SonyLiv' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

Money Heist: Korea — Joint Economic Area

Money Heist: Korea — Joint Economic Area
Money Heist: Korea — Joint Economic Area

கிம் ஹாங்-சன் இயக்கத்தில் Yong-Jae, Kim Hwan-Chae, Choe Sung-Jun எழுத்தில் உருவாகியுள்ள கொரியன் வெப் சீரிஸ் 'Money Heist: Korea — Joint Economic Area'. இதன் இரண்டாவது சீசன் 'Netflix' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

Night at the Museum: Kahmunrah Rises Again (ஆங்கிலம் - Hotstar)

Night at the Museum: Kahmunrah Rises Again
Night at the Museum: Kahmunrah Rises Again

மாட் டேனர் இயக்கத்தில் ஜோசுவா பாசெட், ஜேமி டெமெட்ரியோ, ஆலிஸ் ஐசாஸ், கிறிஸ்டி பஹ்னா உள்ளிட்டோர் பங்களிப்பில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படம் 'Night at the Museum: Kahmunrah Rises Again'. இத்திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

Pinocchio (ஆங்கிலம் - Netflix)

Pinocchio
Pinocchio

இயக்குநர்கள் கில்லர்மோ டெல் டோரோ, மார்க் குஸ்டாஃப்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Pinocchio'. இத்திரைப்படம் 'Netflix' ஓடிடி தளத்தில் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) வெளியாகியுள்ளது.

திரையரங்கு டு ஓடிடி

Yashoda (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் - Amazon Prime)

Yashoda
Yashoda

சமந்தா நடிப்பில், இயக்குநர்கள் ஹரீஷ் நாராயண், கே. ஹரி சங்கர் இயக்கத்தில் கடந்த நவம்பர் 11ம் தேதி வெளியாகியிருந்த இப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

காபி வித் காதல் (தமிழ்-Zee 5)

காபி வித் காதல்
காபி வித் காதல்

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'காபி வித் காதல்' திரைப்படம் நேற்று (டிசம்பர் 9ம் தேதி) 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.