Published:Updated:

What to watch on Theatre & OTT: மைக்கேல், பொம்மை நாயகி - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்கலாம்?

February first week releases

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

Published:Updated:

What to watch on Theatre & OTT: மைக்கேல், பொம்மை நாயகி - இந்த வீக்கெண்டில் என்ன படம் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் இதோ...

February first week releases

மைக்கேல் (தமிழ்)

மைக்கேல்
மைக்கேல்

'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மைக்கேல்'. லோகேஷின் 'மாநகரம்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சந்தீப் கிஷன் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

பொம்மை நாயகி (தமிழ்)

பொம்மை நாயகி படத்தில்...
பொம்மை நாயகி படத்தில்...

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'பொம்மை நாயகி'. அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

தலைக்கூத்தல் (தமிழ்)

தலைக்கூத்தல்
தலைக்கூத்தல்

'லென்ஸ்' இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்தரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைக்கூத்தல்'. கதிர், கதா நந்தி உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

தி கிரேட் இண்டியன் கிச்சன் (தமிழ்)

தி கிரேட் இண்டியன் கிச்சன்
தி கிரேட் இண்டியன் கிச்சன்

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த 'The Great Indian kitchen' திரைப்படத்தைத் தமிழில் எடுத்துள்ளார் இயக்குநர் கண்ணன். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

நான் கடவுள் இல்லை (தமிழ்)

நான் கடவுள் இல்லை
நான் கடவுள் இல்லை

நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல கோலிவுட் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அகர்வால், ரோகினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நான் கடவுள் இல்லை'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

ரன் பேபி ரன் (தமிழ்)

ரன் பேபி ரன்
ரன் பேபி ரன்

ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா சரத்குமார், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Vedikettu (மலையாளம்)

Vedikettu
Vedikettu

பிபின் ஜார்ஜ், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் மலையாள மொழித் திரைப்படம் 'Vedikettu'. சமத் சுலைமான், ஐஸ்வர்யா அனில் குமார் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Writer Padma Bhushan (தெலுங்கு)

Writer Padma Bhushan
Writer Padma Bhushan

சண்முக பிரசாந்த் இயக்கத்தில் டினா ஷில்பராஜ், ரோகினி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீ கௌரி பிரியா, கோபராஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Writer Padma Bhushan'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Rebels of Thupakulagudem (தெலுங்கு)

Rebels of Thupakulagudem
Rebels of Thupakulagudem

ஜெய்தீப் விஷ்ணு இயக்கத்தில், மணிசர்மா இசையில், பிரவீன் கண்டேலா, ஷிவ்ராம் ரெட்டி, ஸ்ரீகாந்த் ரத்தோட், ஜெய்யேத்ரி மகனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு மொழித் திரைப்படம் 'Rebels of Thupakulagudem'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Premadesam (தெலுங்கு)

Premadesam
Premadesam

ஸ்ரீகாந்த் சித்தம் இயக்கத்தில் மேகா ஆகாஷ், திரிகன், அஜய் கதுர்வர், மாயா, மதுபாலா, சிவ ராமச்சந்திரா, வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு மொழித் திரைப்படம் 'Premadesam'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Almost Pyaar With DJ Mohabbat (இந்தி)

Almost Pyaar With DJ Mohabbat
Almost Pyaar With DJ Mohabbat

பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Almost Pyaar With DJ Mohabbat'. இத்திரைப்படத்தில் அலயா எஃப், கரண் மேத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கௌரவ வேடத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

The Woman King (ஆங்கிலம்)

The Woman King
The Woman King

ஜினா பிரின்ஸ் பைத்வுட் இயக்கத்தில் வயோலா டேவீஸ், துசோ பெடு, லஷாணா லின்ச் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'The Woman King'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

The Whale (ஆங்கிலம்)

The Whale
The Whale

டேரன் அரோனோஃப்ஸ்கி இயக்கத்தில் 'மம்மி' புகழ் பிரெண்டன் ஃப்ரேசர், சாடி சிங்க், ஹாங் சாவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'The Whale'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Knock At The Cabin (ஆங்கிலம்)

Knock At The Cabin
Knock At The Cabin

எம். நைட் ஷியாமளன் இயக்கத்தில் டேவ் பௌடிஸ்டா, ஜொனாதன் கிராஃப், பென் ஆல்ட்ரிட்ஜ், ரூபர்ட் கிரின்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'Knock At The Cabin'. இத்திரைப்படம் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Butta Bomma (தெலுங்கு)

Butta Bomma
Butta Bomma

ஷோரி சந்திரசேகர் டி.ரமேஷ் இயக்கத்தில் அனிகா சுரேந்திரன், அர்ஜுன் தாஸ், சூர்யா வசிஷ்டா, நவ்யா சுவாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு மொழித் திரைப்படம் 'Butta Bomma'. இத்திரைப்படம் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 4ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்...

Abboud At Home (ஆங்கிலம்) - Netflix

Abboud At Home
Abboud At Home

கலீத் அல்-முஃபைத் இயக்கத்தில் அவரே ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, அவருடன் அகமது பின் ஹுசைன், கலீத் அல் அஜீர்ப், தரி அப்தெல் ரெடா, படர் அல் அத்வான் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'Abboud At Home'. இத்திரைப்படம் Netflix தளத்தில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி வெளியாகியுள்ளது.

True Spirit (ஆங்கிலம்) - Netflix

True Spirit
True Spirit

சாரா ஸ்பில்லேன் இயக்கத்தில் கிளிஃப் கர்டிஸ், அன்னா பக்வின், டீகன் கிராஃப்ட், ஜோஷ் லாசன், டாட் லாசன்ஸ், ஸ்டேசி கிளாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'True Spirit'. இத்திரைப்படம் Netflix தளத்தில் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) வெளியாகவுள்ளது.

Infiesto (ஆங்கிலம்) -Netflix

Infiesto
Infiesto

Patxi Amezcua இயக்கத்தில் Luis Zahera, Iria del Río, Isak Férriz, Patricia Defran உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'Infiesto'. இத்திரைப்படம் Netflix தளத்தில் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) வெளியாகவுள்ளது.

Stromboli (Dutch) -Netflix

Stromboli
Stromboli

மைக்கேல் வான் எர்ப் இயக்கத்தில் எலிஸ் ஷாப், டிம் மெக்கின்னர்னி, கிறிஸ்டியன் ஹில்போர்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் டச்சு மொழித் திரைப்படம் 'Stromboli'. இத்திரைப்படம் Netflix தளத்தில் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) வெளியாகவுள்ளது.

Viking Wolf (நைஜிரியன்) - Netflix

Viking Wolf
Viking Wolf

ஸ்டிக் ஸ்வென்ட்சன் இயக்கத்தில் Elli Rhiannon Müller Osborne, Arthur Hakalahti, Sjur Vatne Brean உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் நைஜிரியன் மொழித் திரைப்படம் 'Stromboli'. இத்திரைப்படம் Netflix தளத்தில் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) வெளியாகவுள்ளது.

Class (இந்தி) -Netflix

Class
Class

இயக்குநர்கள் குல் தர்மனி, கபீர் மேத்தா, ஆஷிம் அலுவாலியா இயக்கத்தில் குர்பதே பிர்சாதா, அஞ்சலி சிவராமன், ஆயிஷா கங்கா, சயான் சோப்ரா, சிந்தன் ராச், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தி மொழி வெப்சீரிஸ் 'Class'. இது 'Netflix' தளத்தில் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) வெளியாகவுள்ளது.

 I Will Be Your Bloom (ஜப்பானிய மொழி) - Netflix

I Will Be Your Bloom
I Will Be Your Bloom

Tsubasa Honda, Fumiya Takahashi, Ryubi Miyase உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜப்பானிய மொழி வெப்சீரிஸ் 'I Will Be Your Bloom'. இது 'Netflix' தளத்தில் நாளை (பிப்ரவரி 3ம் தேதி) வெளியாகவுள்ளது.

தியேட்டர் டு ஓ.டி.டி...

செம்பி (தமிழ்) - Disney Plus Hotstar

செம்பி
செம்பி

பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'செம்பி' திரைப்படம் தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

Veekam (மலையாளம்) - Zee5

Veekam
Veekam

சாகர் இயக்கத்தில் அஜு வர்கீஸ், தயானா ஹமீத், சித்திக், தியான் ஸ்ரீனிவாசன், ஷீலு ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மலையாள மொழித் திரைப்படமான 'Veekam', தற்போது Zee5 தளத்தில் வெளியாகியுள்ளது.

Mukhachitram (தெலுங்கு) -Aha

Mukhachitram
Mukhachitram

சந்தீப் ராஜ் எழுத்தில் கங்காதர் இயக்கத்தில் ஆயிஷா கான், சைதன்யா ராவ், ரவிசங்கர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த தெலுங்கு மொழித் திரைப்படமான 'Mukhachitram' தற்போது 'Aha' தளத்தில் வெளியாகியுள்ளது.

Garuda (கன்னடம்) - Prime Video

Garuda
Garuda

சித்தார்த் மகேஷ் எழுத்தில் தனகுமார் இயக்கத்தில் ரகு தீட்சித், கம்னா ஜெத்மலானி, ஸ்ரீநகர் கிட்டி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த கன்னட மொழித் திரைப்படமான 'Garuda' தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

Black Panther: Wakanda Forever (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

Black Panther: Wakanda Forever
Black Panther: Wakanda Forever

ரியான் கூக்லர் இயக்கத்தில் லெட்டீசியா ரைட், லூபிடா நியோங்கோ, டானாய் குரிரா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த ஹாலிவுட் திரைப்படமான 'Black Panther: Wakanda Forever' தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

Khela Jawkhon (பெங்காலி) - Prime Video

Khela Jawkhon
Khela Jawkhon

அரிந்தம் சில் எழுத்து மற்றும் இயக்கத்தில் சஸ்மித் பாக்சி, அர்ஜுன் சக்ரபர்த்தி, மிமி சக்ரவர்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த பெங்காலி மொழித் திரைப்படமான 'Khela Jawkhon' தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.