Published:Updated:

What to watch on Theatre & OTT: பிப்ரவரி கடைசி வீக்கெண்டில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

What to watch on Theatre & OTT

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

Published:Updated:

What to watch on Theatre & OTT: பிப்ரவரி கடைசி வீக்கெண்டில் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

What to watch on Theatre & OTT

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் (தமிழ்)

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்
சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

விக்னேஷ் ஷா பி.என் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பகவதி பெருமாள், திவ்யா கணேஷ், ஷரா, பாடகர் மனோ, பாலா உள்ளிட்ட திரைப்பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இது பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Thugs (தமிழ்)

Thugs
Thugs

'ஹேய் சினாமிகா' திரைப்படத்தை இயக்கிய பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Thugs'. பாபி சிம்ஹா, அனஸ்வரா ராஜன், ஹிருது ஹாரூன் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ளனர். இது 'Swathandrayam Ardarathriyil' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்காகும். இத்திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வெள்ளிமலை (தமிழ்)

வெள்ளிமலை
வெள்ளிமலை

ஓம் விஜய் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'வெள்ளிமலை'. சூப்பர் குட் சுப்ரமணியன், வீர சுபாஷ், அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

குற்றம் புரிந்தால் (தமிழ்)

குற்றம் புரிந்தால்
குற்றம் புரிந்தால்

இயக்குநர் டிஸ்னி இயக்கத்தில் ஆதிக் பாபு, அர்ச்சனா, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குற்றம் புரிந்தால்'. இத்திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Ntikkakkakkoru Premondarnn (மலையாளம்)

Ntikkakkakkoru Premondarnn
Ntikkakkakkoru Premondarnn

ஆதில் எம். அஷரப் இயக்கத்தில் பாவனா, ஷராபுதீன், அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ntikkakkakkoru Premondarnn'. மலையாள மொழித் திரைப்படமான இது பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

SELFIEE (இந்தி)

SELFIEE
SELFIEE

ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'SELFIEE'. இந்தி மொழித் திரைப்படமான இது பிப்ரவரி 24ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது மலையாளப் படமான 'Driving Licence'-ன் ரீமேக்.

MARLOWE (ஆங்கிலம்)

MARLOWE
MARLOWE

நீல் ஜோர்டான் இயக்கத்தில் லியாம் நீசன், டயான் க்ரூகர், ஜெசிகா லாங்கே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'MARLOWE'. ஆங்கில மொழித் திரைப்படமான இது பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

MISSING (ஆங்கிலம்)

MISSING
MISSING

இயக்குநர்கள் வில் மெரிக் மற்றும் நிக் ஜான்சன் இயக்கத்தில் புயல் ரீட், ஜோவாகிம் டி அல்மேடா, கென் லியுங், ஆமி லாண்டேக்கர், டேனியல் ஹென்னி மற்றும் நியா லாங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'MISSING'. ஆங்கில மொழித் திரைப்படமான இது பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Cocaine Bear (ஆங்கிலம்)

Cocaine Bear
Cocaine Bear

எலிசபெத் பேங்க்ஸ் இயக்கத்தில் கெரி ரஸ்ஸல், ஆல்டன் எஹ்ரென்ரிச், ஓ'ஷியா ஜாக்சன் ஜூனியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Cocaine Bear'. ஆங்கில மொழித் திரைப்படமான இது பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Vaalvi (மராத்தி) - Zee5

Vaalvi
Vaalvi

பரேஷ் மொகாஷி இயக்கத்தில் ஸ்வப்னில் ஜோஷி, சுபோத் பாவே, அனிதா டேட், ஷிவானி சர்வே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Vaalvi'. மராத்தி மொழி திரைப்படமான இது 'Zee5' தளத்தில் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

We Have a Ghost (ஆங்கிலம்) - Netflix

We Have a Ghost
We Have a Ghost

கிறிஸ்டோபர் லாண்டன் இயக்கத்தில் ஜாஹி டி'அல்லோ வின்ஸ்டன், டேவிட் ஹார்பர், ஆண்டனி மேக்கி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'We Have a Ghost'. ஆங்கில மொழி திரைப்படமான இது 'Netflix' தளத்தில் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

Call Me Chihiro (ஜப்பான்) - Neflix

Call Me Chihiro
Call Me Chihiro

Rikiya Imaizumi இயக்கத்தில் Kasumi Arimura, Lily Franky, Jun Fubuki நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Call Me Chihiro'. ஜப்பானிய மொழித் திரைப்படமான இது 'Netflix' தளத்தில் பிப்ரவரி 23ம் தேதி வெளியாகியுள்ளது.

The Strays (ஆங்கிலம்) - Neflix

The Strays
The Strays

நதானியேல் மார்டெல்லோ-ஒயிட் இயக்கத்தில் ஆஷ்லே மேடெக்வே, பக்கி பக்ரே, ஜோர்டன் மைரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Strays'. ஆங்கில மொழி திரைப்படமான இது 'Neflix' தளத்தில் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகியுள்ளது.

இரு துருவம் 2 (தமிழ்) - SonyLiv

இரு துருவம் 2
இரு துருவம் 2

அருண் பிரகாஷ் இயக்கத்தில் பிரசன்னா, ரவி ஜீவா, அஜித் கோஷி, அனீஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரீஸ் 'இரு துருவம்-2'. ஏற்கனவே இதன் முதல் சீசன் வெளியாகி நல்ல வரவெற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் இரண்டாம் சீசன் 'SonyLiv' ஓடிடி தளத்தில் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

Puli Meka (தெலுங்கு) - Zee5

Puli Meka
Puli Meka

சக்ரவர்த்தி ரெட்டி இயக்கத்தில் ஆதி சாய் குமார், லாவண்யா திரிபாதி, சுமன், கோபராஜு ரமணா, ராஜா செம்போலு நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரீஸ் 'Puli Meka'. தெலுங்கு மொழி வெப்சீரீஸான இது 'Zee5' தளத்தில் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

Potluck Season 2 (இந்தி) - SonyLiv

Potluck Season 2
Potluck Season 2

ராஜ்ஸ்ரீ ஓஜா இயக்கத்தில் சைரஸ் சாஹுகர், ஹர்மன் சிங்க, ஈரா துபே, ஜதின் சியால், கிடு கித்வானி நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரீஸ் 'Potluck Season 2'. இந்தி மொழி வெப்சீரீஸான இது 'SonyLiv' தளத்தில் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகியுள்ளது.

SK Sir Ki Class (இந்தி) - YouTube

SK Sir Ki Class
SK Sir Ki Class

பிரதீஷ் மேத்தா இயக்கத்தில் அபிலாஷ் தப்லியால், ககன் அரோரா, ராஜேஷ் ஜெய்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரீஸ் 'SK Sir Ki Class'. இந்தி மொழி வெப்சீரீஸான இதன் முதல் எபிசோடு 'YouTube' தளத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகியுள்ளது.

The Company You Keep (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

The Company You Keep
The Company You Keep

ராபர்ட் ரெட்ஃபோர்ட் இயக்கத்தில் மிலோ வென்டிமிக்லியா, கேத்தரின் ஹேனா கிம், சாரா வெய்ன் காலிஸ் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரீஸ் 'The Company You Keep'. ஆங்கில மொழி வெப்சீரீஸான இது 'Disney Plus Hotstar' தளத்தில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓ.டி.டி

வாரிசு (தமிழ்/ தெலுங்கு) - Prime Video

வாரிசு
வாரிசு

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், விடிவி கணேஷ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'வாரிசு' திரைப்படம் 'Prime Video' தளத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகியுள்ளது.

Nanpakal Nerathu Mayakkam (மலையாளம்/தமிழ்) - Netflix

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழ், மலையாளம் என இருமொழியும் கலந்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது. ரம்யா பாண்டியன், பூ ராமு, அசோக் குமார் எனப் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் 'Netflix' தளத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகியுள்ளது.

Thankam (மலையாளம்) - Prime Video

Thankam
Thankam

சஹீத் அராபத் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'Thankam'. வினீத் ஸ்ரீனிவாசன், பிஜு மேனன், அபர்ணா பாலமுரளி, கிரிஷ் குல்கர்னி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

வீர சிம்ஹா ரெட்டி (தெலுங்கு) - Disney Plus Hotstar

வீர சிம்ஹா ரெட்டி
வீர சிம்ஹா ரெட்டி

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் நடிப்பில் உருவாகியுள்ளத் தெலுங்கு திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

மைக்கேல் (தமிழ்) - Aha

Michael | மைக்கேல்
Michael | மைக்கேல்

'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மைக்கேல்'. லோகேஷின் 'மாநகரம்' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த சந்தீப் கிஷன் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Aha' தளத்தில் வெளியாகியுள்ளது.

Kranti (கன்னடம்) - Prime Video

Kranti
Kranti

இயக்குநர் ஹரிகிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் கன்னட மொழித் திரைப்படம் 'Kranti'. இத்திரைப்படத்தில் தர்ஷன் தூகுதீபா, ரசிதா ராம், வி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.