Published:Updated:

What to watch on Theatre & OTT: அயோத்தி, பஹிரா - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

What to watch

இந்த மார்ச் முதல் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

Published:Updated:

What to watch on Theatre & OTT: அயோத்தி, பஹிரா - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

இந்த மார்ச் முதல் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் என்னென்ன படைப்புகள் வெளியாகியிருக்கின்றன என்று பார்க்கலாம்...

What to watch

அயோத்தி (தமிழ்)

அயோத்தி
அயோத்தி

அறிமுக இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் எம்.சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி, யஷ்பால் சர்மா, புகழ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயோத்தி'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

பல்லு படாம பாத்துக்க (தமிழ்)

பல்லு படாம பாத்துக்க
பல்லு படாம பாத்துக்க

டெம்பில் மன்கி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான விஜய் வரதராஜ் இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், ஷாரா, சஞ்சிதா ஷெட்டி, ஜெகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பல்லு படாம பாத்துக்க'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

பஹிரா (தமிழ்)

பஹிரா
பஹிரா

ஆதிக் ரவிச்சந்திரன், சூரி இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா தஸ்தூர், கோபிநாத் ரவி, ரம்யா நம்பீசன், ஜனனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பஹிரா'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

Pakalum Paathiravum (மலையாளம்)

Pakalum Paathiravum
Pakalum Paathiravum

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், ரஜிஷா விஜயன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழி திரைப்படம் 'Pakalum Paathiravum'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

IN CAR (இந்தி)

IN CAR
IN CAR

ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில் ரித்திகா சிங், சம்ஷர் சிங் சாம், கியான் பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'IN CAR'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

The Eternal Daughter (ஆங்கிலம்)

The Eternal Daughter
The Eternal Daughter

ஜோனா ஹாக் இயக்கத்தில் டில்டா ஸ்விண்டன், கார்லி-சோபியா டேவிஸ், ஜின்னியா டேவிஸ்-குக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'The Eternal Daughter'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

Triangle of Sadness (ஆங்கிலம்)

Triangle of Sadness
Triangle of Sadness

ரூபன் ஆஸ்ட்லண்ட் இயக்கத்தில் ஹாரிஸ் டிக்கின்சன், சார்ல்பி டீன், டோலி டி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Triangle of Sadness'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

Creed III (ஆங்கிலம்)

Creed III
Creed III

கீனன் கூக்லர், சாக் பேலின், ரியான் கூக்லர் ஆகியோர் எழுத்தில் மைக்கேல் பி. ஜோர்டான் இயக்கத்தில் மைக்கேல் பி. ஜோர்டான், டெஸ்ஸா தாம்ப்சன், ஜோனதன் மேஜர்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Creed III'. இத்திரைப்படம் மார்ச் 3ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்...

மாய தோட்டா (தமிழ்) - Hungama Play

மாய தோட்டா
மாய தோட்டா

நந்தகுமார் ராஜு இயக்கத்தில் சைத்ரா ரெட்டி, குமரன் தங்கராஜன், வைஷாலி தணிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் 'மாய தோட்டா'. இந்த வெப்சீரிஸ் 'Hungama Play' தளத்தில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியாகியுள்ளது.

Taj: Divided by Blood (இந்தி) - Zee5

Taj: Divided by Blood
Taj: Divided by Blood

ரான் ஸ்கால்பெல்லோ, அஜய் சிங், விபு பூரி, பிரசாந்த் சிங் ஆகியோர் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, தர்மேந்திரா, அதிதி ராவ் ஹைதாரி, ஆஷிம் குலாட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Taj: Divided by Blood'. இந்த வெப்சீரிஸ் 'Zee5' தளத்தில் மார்ச் 3ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.

Gulmohar (இந்தி) - Disney Plus Hotstar

Gulmohar
Gulmohar

ராகுல் வி. சிட்டெல்லா இயக்கத்தில் சூரஜ் சர்மா, அமோல் பலேகர், மனோஜ் பாஜ்பாய், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் 'Gulmohar'. இந்த திரைப்படம் 'Disney Plus Hotstar' தளத்தில் மார்ச் 3ம் தேதி (இன்று) வெளியாகவுள்ளது.

A Whole Lifetime with Jamie Demetriou (ஆங்கிலம்) - Netflix

A Whole Lifetime with Jamie Demetriou
A Whole Lifetime with Jamie Demetriou

ஆண்ட்ரூ கெய்னார்ட் இயக்கத்தில் எம்மா சிடி, கிறிஸ்டோபர் ஜெஃபர்ஸ், ஜேமி டெமெட்ரியோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'A Whole Lifetime with Jamie Demetriou'. இந்த திரைப்படம் 'Netflix' தளத்தில் மார்ச் 3ம் தேதி (இன்று) வெளியாகவுள்ளது.

The Blacklist S10 (ஆங்கிலம்) - Netflix

The Blacklist S10
The Blacklist S10

Jon Bokenkamp இயக்கத்தில் ஜேம்ஸ் ஸ்பேடர், மேகன் பூன், டியாகோ கிளட்டன்ஹாஃப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி வெப்சீரிஸ் 'The Blacklist'. இதன் வெற்றிகரமான 10வது மற்றும் இறுதி சீசன் 'Netflix' தளத்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியாகியுள்ளது.

Tonight You're Sleeping With Me (Polish) - Netflix

Tonight You're Sleeping With Me
Tonight You're Sleeping With Me

ராபர்ட் விச்ரோவ்ஸ்கி இயக்கத்தில் ரோமா காசியோரோவ்ஸ்கா, மாக்டலேனா க்ரோசெக், ஜேசெக் கோமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள Polish மொழி திரைப்படம் 'Tonight You're Sleeping With Me'. இந்தத் திரைப்படம் 'Netflix' தளத்தில் மார்ச் 1ம் தேதி வெளியாகியுள்ளது.

10 Days of a Good Man (Turkish) - Netflix

10 Days of a Good Man
10 Days of a Good Man

Uluç Bayraktar இயக்கத்தில் நெஜாட் இஸ்லர், இலேடா அலிசன், நூர் ஃபெட்டாஹோக்லு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள துருக்கி மொழித் திரைப்படம் '10 Days of a Good Man'. இந்த திரைப்படம் 'Netflix' தளத்தில் மார்ச் 3ம் தேதி (இன்று) வெளியாகவுள்ளது.

Love at First Kiss (Spanish) - Netflix

Love at First Kiss
Love at First Kiss

Alauda Ruiz de Azúa இயக்கத்தில் அல்வாரோ செர்வாண்டஸ், சில்வியா அலோன்சோ, கோர்கா ஓட்சோவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பானிஷ் மொழி திரைப்படம் 'Love at First Kiss'. இத்திரைப்படம் 'Netflix' தளத்தில் மார்ச் 3ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.

THE MANDALORIAN Season 3 (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

THE MANDALORIAN Season 3
THE MANDALORIAN Season 3

ரிக் ஃபமுயிவா ஜு இயக்கத்தில் எமிலி ஸ்வாலோ, கார்ல் வெதர்ஸ், பிரெண்டன் வெய்ன் மற்றும் லத்தீஃப் க்ரவுடர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'THE MANDALORIAN'. இதன் 3வது சீசன் 'Disney Plus Hotstar' தளத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி வெளியாகியுள்ளது.

Sex/Life S2 (ஆங்கிலம்) - Netflix

Sex/Life S2
Sex/Life S2

ஜெசிகா போர்சிஸ்கி இயக்கத்தில் சாரா ஷாஹி, ஆடம் டெமோஸ் மற்றும் மார்கரெட் ஓடெட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'Sex/Life'. இதன் இரண்டாவது சீசன் 'Netflix' தளத்தில் கடந்த மார்ச் 2ம் தேதி வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

தி கிரேட் இண்டியன் கிச்சன் (தமிழ்) - Zee5

தி கிரேட் இண்டியன் கிச்சன்
தி கிரேட் இண்டியன் கிச்சன்

மலையாளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்த 'The Great Indian Kitchen' திரைப்படத்தைத் தமிழில் எடுத்துள்ளார் இயக்குநர் கண்ணன். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Zee5' தளத்தில் வெளியாகியுள்ளது.

தலைக்கூத்தல் (தமிழ்) -Netflix

தலைக்கூத்தல்
தலைக்கூத்தல்

'லென்ஸ்' இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்தரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைக்கூத்தல்'. கதிர், கதா நந்தி உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' தளத்தில் வெளியாகியுள்ளது.

வால்டர் வீரய்யா (தெலுங்கு) - Netflix

வால்டர் வீரய்யா
வால்டர் வீரய்யா

சிரஞ்சீவி நடிப்பில் கே.எஸ். ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் 'வால்டர் வீரய்யா'. ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' தளத்தில் வெளியாகியுள்ளது.

Adrishyam (மலையாளம்) - Prime video

Adrishyam
Adrishyam

ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், நரேன், ஷரபுதீன், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, ஆத்மியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள மொழித் திரைப்படம் 'Adrishyam'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.

Butta Bomma (தெலுங்கு)

Butta Bomma
Butta Bomma

ஷோரி சந்திரசேகர் டி.ரமேஷ் இயக்கத்தில் அனிகா சுரேந்திரன், அர்ஜுன் தாஸ், சூர்யா வசிஷ்டா, நவ்யா சுவாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு மொழித் திரைப்படம் 'Butta Bomma'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' தளத்தில் வெளியாகியுள்ளது.

Alone (மலையாளம்) - Disney Plus Hotstar

Alone
Alone

ராஜேஷ் ஜெயராமன் எழுத்தில் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'Alone'. படம் முழுக்க மோகன்லால் மட்டுமே திரையில் தோன்றி நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பாகும். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Disney Plus Hotstar' தளத்தில் வெளியாகியுள்ளது.

Made in Bengaluru (கன்னடம்) - Prime Video

Made in Bengaluru
Made in Bengaluru

பிரதீப் சாஸ்திரி இயக்கத்தில் ஆனந்த் நாக், பிரகாஷ் பெலவாடி, சாய் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட மொழி திரைப்படம் 'Made in Bengaluru'. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Prime Video' தளத்தில் வெளியாகியுள்ளது.